Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 28 - பிரேமா சுப்பையா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - உன்னில்  தொலைந்தவன் நானடி – 28 - பிரேமா சுப்பையா

Unnil tholainthavan naanadi

ங்களுக்கு யார்.. என்ன சொன்னாங்க கதிர்?” மௌனத்தை உடைத்தாள் அவள் .அப்பட்டமாய் வெளிப்பட்டது அவள் பதற்றம்.

“அம்மா போன் பண்ணாங்க மா”.

“என் அம்மாவா!!?

“இல்லடா உன் அத்தை”

“என்ன சொன்னாங்க?  அவங்களுக்கு யார் என்ன சொன்னாங்க? ப்ளீஸ் கதிர் எதையும் என்கிட்ட மறைக்காம சொல்லுங்க” என்றபோதே குரல் நடுங்க

காரை நிறுத்தியவன் “ஏய்..!, இப்போ எதுக்கு நீ இப்படி டென்சன் ஆகுற? ஸ்கூல் பெயரை சொல்லி உன் பொண்டாட்டியோட தங்கச்சி அங்க படிக்கிறா உடனே உன் பொண்டாட்டியை அவ கிட்ட கூட்டிட்டு போ” ன்னு சொன்னாங்க” பொண்டாட்டி என்பதை அழுத்தியே சொன்னான் அவன்

“அவங்க சொன்னா நீங்க ஏன்? எதுக்குன்னு எதுவும் கேட்க மாட்டீங்களா?” என்று இவன் மேல் கோபம் கொள்ள

“எங்கடி கேட்க விட்டாங்க? சொல்லிட்டு உடனே போனை கட் பண்ணிட்டாங்க” என்றான் தாய் மீது எழுந்த சிறு எரிச்சலில்

“இல்லனா மட்டும் நீங்க எல்லாத்தையும் ரொம்ப விவரமா கேட்டிருப்பீங்க பாருங்க” என்று சொல்லிவிட்டு “அதான் உடனே கிளம்ப சொன்னாங்க இல்ல பின்ன எதுக்கு வண்டியை நிறுத்தி வெச்சிருக்கீங்க சீக்கிரம் போங்க எல்லாம் என் தலை எழுத்து” என்று அவள் சொல்ல

“நான் என்னடி பண்ணேன்” என்று முனகியவன் வண்டியை ஓட்ட

“சீக்கிரமா போங்க கதிர் இப்படி உருட்டிட்டு போறதுக்குள்ள ஏதாச்சும் ஆகிட போகுது.. ஏன் உங்களுக்கு போன் பண்ணவங்க எனக்கு போன் பண்ணி தொலைக்க வேண்டியது தான?”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“அதை நீ உன் மாமியார் கிட்ட கேக்கணும். புருஷன் கிட்ட கேட்க கூடாது” என்று சொன்னவனை கடித்து துப்புபவள் போல் முறைக்க கப்பென்று வாய் மூடினான் கதிர்.

போக்குவரத்து நெரிசலில் வாகனம் ஊர அவனை முறைத்தாள் அவள்.

“ட்ராபிக் நிலா நான் என்ன பண்ணட்டும்?” என்று கேட்டவனிடம் “மரியாதையா என் வண்டியை கொடுத்திடுங்க கதிர்… வண்டி ஒற்றானாம் வண்டி”என்று முனக அவனுக்கும் “என்னவாக இருக்கும்?” என்ற யோசனை ஓட, நேரம் செல்ல செல்ல பள்ளியை நெருங்கும் தருணம்

“கதிர் பயமா இருக்கு அவளுக்கு ஒன்னும் ஆகி இருக்காது இல்ல?” என்று கேட்டாள் அவள்.

“ஒன்னும் இருக்காது நிலா நீ தேவையில்லாம பயப்படுற” என்று சொல்லியவன் அவள் உள்ளங்கையை தன் கைக்குள் வைத்து அழுத்தி கொடுக்க அவள் கை சில்லிட்டு இருந்தது.

அதற்குள் பள்ளியை அடைந்து விட, ஒரு நொடி அவனுக்காக நின்றவள் அவன் கையை பிடித்து இழுத்து கொண்டு பிரின்சிபால் ரூமுக்கு ஓட  … பிரின்சிபால் இளம்பிறையை அடையாளம் கண்டு கொண்டு நலம் விசாரிக்க

“இவளோ மேம் என் தங்கைக்கு” என்று துடிக்க,

“கதிர் எப்படி இருக்க?  ரெண்டு பேரையும் இப்படி பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு என்று சொல்லவும் அவன் புன்னகைக்க, இவளோ “மேம் வான்மதி….” என்று மீண்டும் இழுக்க

“ஒரு நிமிஷம்”  என்று சொன்னவர் “மல்லிகா இவங்களை அந்த பொண்ணு வான்மதி கிட்ட கூட்டிட்டு போங்க “என்று அனுப்பியவள் கதிரும் உடன் சென்றதை கவனித்துவிட்டு “கதிர் நீங்க இங்க இருங்க இளம்பிறை மட்டும் போகட்டும்” என்று சொல்ல

அவன்  அவளை பார்க்க, அவளும் ஒரு நொடி பார்த்துவிட்டு கண்ணசைவில் “போய் பார்க்கிறேன்” என்றதும் “ம்” என்று இவன் தலை அசைக்க… அவள்  கிளம்பினாள்.

“அப்புறம் கதிர் பிஸ்னஸ் எல்லாம் எப்படி போகுது?” என்று பேச தொடங்கிய தலைமை ஆசிரியை

“நீங்க எப்போ இந்த ஸ்கூல் டிரஸ்ட் ல மெம்பெர் ஆக போறீங்க? அப்பாவே எல்லாத்தையும் பார்க்க முடியுமா?  உங்க அட்வைஸ் எல்லாம் நம்ம  ஸ்டுடென்ட்ஸ்கு கிடைக்க வேண்டாமா?” என்று அவர் எண்ணத்தை வெளிப்படுத்த

“நான் இன்னும் அதை பத்தி எல்லாம் யோசிக்கல மேம்”என்று சொன்னவன் இளம்பிறை குறித்து கேட்க அவள் அந்த பள்ளியில் படித்த காலத்தில் தான் அவளுக்கு வகுப்பு ஆசிரியராய் இருந்த கதையை சொல்லி முடிக்க

அந்த மல்லிகா என்ற பெண்மணி “மேடம், அவங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு கிளம்புறாங்க” என்று சொல்ல இவனோ  தானும் கிளம்புவதாய் விடை பெற “நான் சொன்னதை பற்றி யோசிப்பா கதிர்” என்று சொல்லி அவர் விடை கொடுக்க

“நிச்சயமா மேடம்” என்று சொல்லிவிட்டு விரைந்து வெளியே செல்ல

அங்கே இளம்பிறையும் வான்மதியும் ஒட்டிக்கொண்டு வர, தனது திருமண ஆல்பத்தில் பார்த்த நியாபகம் கதிருக்கு.  இப்போது வளர்ந்திருக்கிறாள் என்று யோசித்து கொண்டிருக்கும் போதே இவனை பொருட்படுத்தாமல் சென்று கொண்டிருந்தனர் இருவரும்.

About the Author

Prama Subbiah

Like Prama Subbiah's stories? Now you can read Prama Subbiah's full novels at Chillzee KiMo. No wait time, No ads, No restrictions!!!

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 28 - பிரேமா சுப்பையாsaaru 2019-01-12 22:59
Sad epiii
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 28 - பிரேமா சுப்பையாPadmini 2019-01-12 19:03
very touching and emotional update Prema!! :sad: feeling sad for Kathir and Nila...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 28 - பிரேமா சுப்பையாmahinagaraj 2019-01-12 11:49
சூப்பர் மேம்.. :clap: :clap:
நிலா கொஞ்சம் கோவபடுவா தான் ஆனா.. கதிரை இந்த அளவு திட்டுவான்னா... கொஞ்சம் யோசிக்கவைக்குது.. அதுபோக அன்னைக்கு ஹாஸ்பிடல்ல டாக்டர் என்ன சொல்லிருப்பாங்க.. :Q:
எப்படியோ நிலா மத்தவங்களை கஷ்டபடுத்தரன்னு சொல்லி அவளை அவளே கஷ்டபடுத்திக்கரா.. :yes:
மதி பேசுனது செம.. எனக்கும் நிலா மேல அந்த கோவம் இருக்கு.. :yes: :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 28 - பிரேமா சுப்பையாmadhumathi9 2019-01-11 21:11
Sad epi.kathir manathu eppadi :sad: valikkum.nice epi.waiting toread more.:thnkx: :thnkx: 4 this epi. :GL: (y) :no: kathir kudikkaamal irukkanum.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 28 - பிரேமா சுப்பையாAdharvJo 2019-01-11 19:09
Ouch facepalm rasathi unna kannadha nenjamn kadhir sokka kizhichi ippadi alayavittutangale avaroda baby moon steam indha ila is too much ma'am :angry: enamo one side mistake mathri kadhir-i ippadi kodhari edukuranga 😫 indha kutti pisasu Vera lengthy dialogues adichi ivana beer bottler edukavachitangale 3:) :D ethayum thangum idhayam for sure he will over come waiting to know what happens next ...sethupona Jenny peaceful-ah vidunga Pa ;-) thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 28 - பிரேமா சுப்பையாrspreethi 2019-01-11 18:44
Super update....baby moon paavam yaaro yedutha mudivu avanga vazhkaya puratti pottuchungara varutham... Yevlo kashtam... Bt Kathir um venumnu seiyyalayea... Rendu per life um yeppo nalla maarum... Waiting for that episode
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top