Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 28 - பிரேமா சுப்பையா - 5.0 out of 5 based on 2 votes

இருவரையும் பாவமாய் பார்த்தாள் வான்மதி.

“அக்கா, நீ மட்டும் வேணும்னா வாயேன்…. மாமா போகட்டும்” என்று சொல்ல, இளம்பிறை கதிரை காண, “நோ நோ நானும் வரேன்” என்றான் கதிர். அவள், அவன் வைத்திருந்த கை குட்டையை முறைத்து பார்க்கவும் “சாரி பேபி மூன்” என்று அதை மீண்டும் தன் பாக்கெட்டில் வைத்து கொள்ள மூச்சை இழுத்து பிடித்து கொண்டனர் கதிரும், இளம்பிறையும்.

பழகிய இடம் என்பதால் மதி சற்றே வேகமாய் நடக்க, அங்கே அந்த தார் சாலையில் ஒரு புறம் குடிசையில் இருந்தவர்கள் சாலையை அடைத்தபடி துணி துவைப்பதும், பாத்திரம் கழுவுவதும்,  சிலர் உணவு உண்பதும், சில ஆண்கள் தமது கருத்த  வலுவான உடற்கட்டை அனைவரும் காண வேண்டும் என்ற ஆவலில் டவலை கட்டி கொண்டு குளியலறை இருந்த போதும் ஆயிரம் காரணம் கூறி சாலையில் குளித்து கொண்டே போக வர இருக்கும் பெண்களை நோட்டம் விடுவதுமாய் இருக்க..

 மதியை கண்ட ஒரு வாலிபன் விசில் அடித்து அவள் கவனத்தை தன் புறம் இழுக்க நினைக்க.

 மதியின்   பின் சென்ற இளம்பிறை சற்று முன்னே சென்று மதியின் கை பிடிக்க “அட இது யாரு..? புதுசா.. தினுசா” என்று அவன் சொன்னதும் இவர்கள் பின் வந்த கதிர் அவனை பார்க்க, தனக்கு பின்னே வந்த கதிரை பார்த்தவள், “கொஞ்சம் சீக்கிரம் வாங்களேன் வேடிக்கை பார்க்க இங்க என்ன இருக்கு?” இளம்பிறையின் கேள்விக்கு “வரேன் மா நீ போ “என்றான் கதிர்.

 சட்டென மதியை விட்டு கதிரிடம் வந்த இளா, “கதிர் நீங்க முன்னாடி போங்க நான் உங்க பின்னாடி வரேன்” என்று சொல்ல

“ஒன்னும் வேண்டாம், நீ அவ பின்னாடி போ நான் உங்க பின்னாடி வரேன்” என்றான்.

“கதிர்…” என்று இவள் மீண்டும் எதோ சொல்ல வர,

“நான் இங்க கலாட்டா பண்ண வரலை பேபி மூன், மச மசன்னு நடக்காம கொஞ்சம் வேகமா நடங்க” என்று சொன்னவன் முகத்தில் கோபம் குடியிருக்க

“ம்” என்றபடி மதியருகே சென்ற இளம்பிறை “சீக்கிரம் போலாம் மதி”என்றாள்.

“எங்க டி இருக்கு வீடு?” என்று பொறுமை இன்றி கேட்ட பிறையிடம் “இன்னும் கொஞ்சம் தூரம் தான் கா, அதோ அங்க தெரியுது பாரு” என்று ஒரு ஹௌசிங் போர்டு வடிவமைப்பை கொண்ட  கட்டிடத்தை சுட்டி காட்ட

“அதுவா அந்த மஞ்சள் கட்டிடமா” என்று இவள் கேட்க

“ம் ஆமாம்” என்று சொன்னவர்கள் நடந்து கொண்டிருக்க விசில் அடித்த வாலிபனோ இப்போது சைக்கிளில் வந்து அவள் அருகே பெல்லை அடித்துவிட்டு

“ஆளெல்லாம் புதுசா இருக்காங்க, அழகிக்கு வெள்ளையா இருந்தா தான் பிடிக்குமோ?” என்று யாரிடமோ சொல்பவன் போல் கத்திவிட்டு போக

அவனை விரட்டுவது போல் இவர்களை முந்தி சென்ற கதிரை

“மாமா ப்ளீஸ் வேண்டாம்” என்று கெஞ்சலாய் தடுத்தாள் மதி.

“யாரு அவன், என்ன நடக்குது? நீங்க எதுக்கு இந்த மாதிரி ஏரியா ல இருக்கீங்க?” என்று மதியை கடிந்து கொள்ள

“கதிர் என்ன இது ரோட் ல நின்னுட்டு, எதுன்னாலும் வீட்டுக்கு போய் பேசிப்போம் வாங்க” என்று இளம்பிறையும் எடுத்து சொல்ல

“வீடு எங்க இருக்கு நிலா” என்று கேட்டான் கதிர்.

“இதோ வந்துட்டோம் கதிர், அது தான்…” என்று அந்த கட்டிடத்தை கட்ட, கட்டிடமோ இப்போது “உன் மேல் விழவா இல்லை இன்னும் நல்ல நேரம் பார்த்து விழவா” என்று மிரட்டி கொண்டு இருந்தது.

குறுகலான மாடிப்படியில் மூன்றாவது மாடி வரை எறியவன் பொறுமை கரைந்து போனது

“மதி இன்னும் எத்தனை மாடி ஏறனும்” என்று கதிர் கேட்க,

“ஒரு மாடி தான் மாமா நாலாவது மாடில வீடு” என்று சொல்ல

“கதிர் நீங்க வேணும்னா” என்று சொல்ல வந்த இளம்பிறையை முறைத்து பார்க்க அத்தோடு வாயை மூடிக்கொண்டாள்.

வீட்டை அடைந்ததும் மதி  தன் பைக்குள் இருந்த சாவியை எடுத்து தகரத்தால் ஆன கதவில் தொங்கி கொண்டிருந்த பூட்டை திறக்க,

கதிரின் மனமோ “இதுக்கு எதுக்கு பூட்டனும்” என்று யோசித்தது.

“அக்கா, உள்ள வா, சாரை  உள்ள வர சொல்லு என்று மாமா…சார் ஆகி போக,

“ஹோய் வீட்டுக்கு வந்திருக்க மாமாவை இப்படி தான் அசிங்க படுத்துவியா மச்சினி?” என்று கதிர்  கேட்க

அவள் சங்கடமாய் நின்றிருந்தாள் ....இதுவரை இருந்த இலகு தன்மை மறைந்தது  ...அந்த ஸ்டேட்டஸ் அவளை தலை குனிய வைத்தது போலும்

About the Author

Prama Subbiah

Completed Stories
On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 28 - பிரேமா சுப்பையாsaaru 2019-01-12 22:59
Sad epiii
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 28 - பிரேமா சுப்பையாPadmini 2019-01-12 19:03
very touching and emotional update Prema!! :sad: feeling sad for Kathir and Nila...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 28 - பிரேமா சுப்பையாmahinagaraj 2019-01-12 11:49
சூப்பர் மேம்.. :clap: :clap:
நிலா கொஞ்சம் கோவபடுவா தான் ஆனா.. கதிரை இந்த அளவு திட்டுவான்னா... கொஞ்சம் யோசிக்கவைக்குது.. அதுபோக அன்னைக்கு ஹாஸ்பிடல்ல டாக்டர் என்ன சொல்லிருப்பாங்க.. :Q:
எப்படியோ நிலா மத்தவங்களை கஷ்டபடுத்தரன்னு சொல்லி அவளை அவளே கஷ்டபடுத்திக்கரா.. :yes:
மதி பேசுனது செம.. எனக்கும் நிலா மேல அந்த கோவம் இருக்கு.. :yes: :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 28 - பிரேமா சுப்பையாmadhumathi9 2019-01-11 21:11
Sad epi.kathir manathu eppadi :sad: valikkum.nice epi.waiting toread more.:thnkx: :thnkx: 4 this epi. :GL: (y) :no: kathir kudikkaamal irukkanum.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 28 - பிரேமா சுப்பையாAdharvJo 2019-01-11 19:09
Ouch facepalm rasathi unna kannadha nenjamn kadhir sokka kizhichi ippadi alayavittutangale avaroda baby moon steam indha ila is too much ma'am :angry: enamo one side mistake mathri kadhir-i ippadi kodhari edukuranga 😫 indha kutti pisasu Vera lengthy dialogues adichi ivana beer bottler edukavachitangale 3:) :D ethayum thangum idhayam for sure he will over come waiting to know what happens next ...sethupona Jenny peaceful-ah vidunga Pa ;-) thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 28 - பிரேமா சுப்பையாrspreethi 2019-01-11 18:44
Super update....baby moon paavam yaaro yedutha mudivu avanga vazhkaya puratti pottuchungara varutham... Yevlo kashtam... Bt Kathir um venumnu seiyyalayea... Rendu per life um yeppo nalla maarum... Waiting for that episode
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top