(Reading time: 17 - 33 minutes)

தொடர்கதை - உன்னாலே நான் வாழ்கிறேன் - 05 - ஸ்ரீ

Unnaale naan vazhgiren

சென்னை பட்டிணம் எல்லாம் கட்டணும் 

கைய நீட்டினா காசு மழை கொட்டணும் 

குடிக்கிற தண்ணீர் காசே கொசுவைவிரட்ட காசே 

அர்ச்சனை சீட்டும் காசே திருப்பணி சீட்டும் காசே 

ஆட்டோ மீட்டர் காசே திருட்டு வீடியோ காசே 

போலி சாமியார் காசே அட பொணத்தில் நெத்தியிலும் காசே 

காந்தி ஜெயந்தி மதுக்கடை திறந்து மறைவா வித்தா காசே 

தொட்டதுக்கெல்லாம் காசே 

காசே காசே காசே… (சென்னை)

பூமி வட்டமா ஏகாசு வட்டமா 

நாடே சுத்துதே நாகரீகம் சுத்துதே 

எல்கேஜி-யும் காசே எம்.பி.பி.எஸ். காசே 

இட்லிய வித்தாலும் காசே உன் கிட்னிய வித்தாலும் காசே 

கர்ப்பிணி வயித்தில் பெண் சிசு இருந்தால் 

கர்ப்பத்தை கலைக்கவும் காசே 

காசே காசே காசே…”

ருவரும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்து இரு தினங்கள் ஆகியிருந்தது. ஸ்ரீகாந்திற்கு மதிய நேர வேலை மதியம் 12 மணிக்கு கிளம்பி இரவு 12 மணிக்கு வீடு வருவான்.மதுவிற்கோ காலை 7 மணிக்கு கிளம்பி இரவு 8 மணிக்கு வருவாள்.

திருமணத்திற்கு முன்பு வரை ஆறு மணிக்கு எழுந்திருப்பவள் குளித்துத் தயாராகி மரகதம் வைத்திருக்கும் பையை என்ன ஏதெனகூடத் தெரியாமல் அப்படியே எடுத்துச் சென்றுவிடுவாள்.

ஆனால் இப்போதோ ஐந்து மணிக்கு எழுந்து இருவருக்குமாய் காலை டிபன் மதிய உணவு என அனைத்தையும் செய்து தயாராவதற்குள் ஒரு வழி ஆகியிருந்தாள்.

இதில் இன்னும் கொடுமை இருவருக்குமான நேரம் என்ற ஒன்றே இல்லாமல் போனதுதான்.காலை அவள் கிளம்பும் நேரம் ஸ்ரீகாந்த் உறங்கிக் கொண்டிருப்பான்.இரவு இவள் விழித்திருந்தாலும் அவன் வந்த பத்து நிமிடத்தில் எல்லாம் தூங்கி விழுவாள்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அந்த வார இறுதியில் ஸ்ரீகாந்திடம் புலம்பித் தீர்த்தாள் மது.”ஸ்ரீகா சத்தியமா கடுப்பா இருக்கு என்ன லைஃப் இது..ரொம்பவே மெஷின் லைஃபா போகுது..ஐ மிஸ்ட் யூ அ லாட்..”

“ஆமா டா மது..ஆபீஸ்ல வேற முக்கியமான டெலிவரி இஷ்யூ போய்ட்டு இருக்கு உயிரை எடுக்குறாங்க..நாம ஒழுங்கா பேசியே ஒரு வாரம் ஆச்சு இல்ல..”

“ம்ம் ஆமா நானெல்லாம் இவ்ளோ வேலை பார்ப்பேன்னே இப்போ தான் தெரியுது..எங்கம்மா எல்லாம் தெய்வம்..சத்தியமா என்ன குழம்பு வைக்கணும்னு யோசிச்சே மூளை குழம்புது..இதுல உங்கம்மா வேற டெய்லி கால் பண்ணி என் புள்ளைக்கு இதை பண்ணி குடு அதை பண்ணி குடுனு..நீ கல்யாணத்துக்கு முன்னாடி தனியா தான சமைச்சு சாப்ட எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணலாம் தான?”

“நீ வேற பாதி நாள் சமைக்க மாட்டேன்..ஹோட்டல் சாப்பாடு தான்..அம்மாகிட்ட சொன்னா அதுக்கும் கத்துவாங்களேனு சொல்ல மாட்டேன்..அதனால நா எக்ஸ்பர்ட் எல்லாம் இல்லை வெளில சொல்றாத..”

“அடப்பாவிங்களா ஏமாத்தி கல்யாணம் பண்ணிடாங்களா??”

“அடியேய் கத்தி சொல்லாத யாராவது கேட்டா தப்பா நினைச்சுற போறாங்க..சரி என் பொண்டாட்டி இவ்ளோ பாவமா பேசுறதுனால நாளைக்கு அவளை அவுட்டிங் கூட்டிட்டு போலாம்னு இருக்கேன்..உன் சமையல்ல இருந்து உனக்கு விடுதலை..”

“தேங்க் யூ டா புருஷா..”

“இந்த தேங்க்ஸ் எல்லாம் பத்தாது வேற ஒண்ணு இருக்கு..”,என்றவன் அவளை உள்ளே இழுத்துச் சென்றான்.

மறுநாள் விடுமுறை அது மட்டுமில்லாமல் வெளியே செல்லலாம் என கூறியிருந்ததால் ஒருவித உற்சாகத்தோடே எழுந்தாள் மது.தனக்கான காபியை குடித்துவிட்டு கணவனிற்கு எடுத்துச் செல்ல அதற்குள் எழுந்திருந்தவன் ஆபிஸ் காலில் இருந்தான்.

முதலில் சாதாரணமாய் அதை எடுத்துக் கொண்டவள் தன் வேலைகளை கவனிக்கச் சென்றாள்.ஒரு மணி நேரம் கழித்து வந்து பார்க்க அப்போதும் போனை கீழே வைத்தானில்லை..பத்தாததற்கு ஆபீஸ் லேப்டாபை வேறு எடுத்து வைத்திருந்தான்.

பத்து மணிக்கு கிளம்பலாம் என அவன் கூறியிருக்க ஒன்பதரை மணி வரையுமே பல்கூட தேய்க்காமல் அப்படியே அமர்ந்திருந்தான்.உச்சகட்ட கடுப்பானவள் சமையலறைக்குச் சென்று வேலையை கவனிக்கத் தொடங்கியிருந்தாள்.

அடுத்த ஒரு மணி நேரம் கழித்து குளித்து தயாராகி வந்தவன்,

“மது டியர் போலாமா??”

“எங்க??”

“என்ன கேள்வி இது படத்துக்கு தான்..”

“எத்தனை மணி ஷோ மணி இப்போ என்ன ஆகுது?ஏற்கனவே பாதி படம் போய்ருக்கும் இங்க இருந்து சிட்டிகுள்ள போறதுகுள்ள மீதி படமும் முடிஞ்சுரும்..என்னதுக்கு போகணும்??”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.