(Reading time: 17 - 33 minutes)

“மது கோவபடாத எதிர்பாராத டிலே இது..சேம் பீல்ட் ல இருக்க உனக்கு தெரியாதா.”

“நாதான் ஒண்ணுமே சொல்லலயே எங்கேயும் போக வேணாம்னுதான் சொல்றேன்..”

“சரி படத்துக்கு வேணாம் அட்லீஸ்ட் லஞ்ச் க்கு வெளில போலாம் வா..”,எனும்போதே அவன் போனில் அழைப்பு வர ஆத்திரமாய் அவனை முறைத்தவள்,

“அப்படியே ஆபீஸோடேயே போய்ருங்க..சாப்பாடும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம்..”என்றவள் மற்றொரு அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டாள்.

காலை அவன் மீதிருந்த கோபத்தில் சாப்பிடாமல் இருந்தவளுக்கு பசி வயிற்றை கிள்ள மதிய நேரமாய் கிட்சனிற்குச் சென்றவள் என்ன செய்வதென பாத்திரத்தை உருட்ட அவளுக்காக புலாவ் ரெய்தா செய்து வைத்திருந்தான் ஸ்ரீகாந்த்.

அடுத்த நொடி கோபமெல்லாம் வடிந்து போக தட்டோடு தங்களறைக்குச் சென்றவள் வாசலில் நின்றவாறே,

“யாரோ சமைக்கவே தெரியாதுனு சொன்னாங்க?”

“ம்ம் சமைச்சத சாப்ட்டு பாத்துட்டு அப்பறம் சொல்லு நா சொன்னது உண்மையா பொய்யானு..அம்மாடி எவ்ளோ கோவம் வருது உனக்கு..”

“சாரி ஸ்ரீகா எனக்கே கொஞ்சம் ஆச்சரியம் தான் இவ்ளோ கோவமெல்லாம் நா படமாட்டேன்.ஏன்னு தெரில இன்னைக்கு ப்ளான் சொதப்பினதுல மூட்அவுட்.”

“வீக்கெண்ட் அதுவுமா மூட் அவுட்டா நெவர்..நீ சாப்ட்டு முடி  அப்பறம் எப்படி மூட் இன் ஆக்குறேன் பாரு..”

“அடச்சை எப்போ பார்த்தாலும் இதேபேச்சு தான்..அடி வாங்காம ஓடிருங்க..”

“சரி சரி என்ன ஆனாலும் நைட் டின்னர் வெளில தான் அப்படியே ஒரு ட்ரைவ் போய்ட்டு வரலாம் மது டியர்.”

“போலாம் போலாம்..சார் ஃப்ரீயா இருந்தா..”,என்றவள் இருந்த பசியில் தட்டிலிருந்ததை ஒரு கைப் பார்த்தாள்.

சாய்ந்திரத்திற்கு மேல் அவன் கூறியவாறே அவளை வெளியே அழைத்துச் சென்று வந்தான்.இப்படியாய் நாட்கள் நகர அன்று ஊதிய நாள்.திருமணத்திற்கு பிறகு வரும் முதல் சம்பளம்.அன்று இரவு அவனுக்காக விழித்திருந்தவள் சம்பளத்தைப் பற்றி கூறிவிட்டு அதில் ஒரு பகுதியை தன் பெற்றோருக்கு அனுப்புவதாய் கூறினாள்.

“ஓ..ஆனா நமக்கே கமிட்மெண்ட் இருக்கே மது..ஹோம் லோன் வேற போய்ட்டு இருக்குல..”

“ம்ம் கல்யாணத்துக்கு முன்னாடி இருந்தே லோன் போகுது தான ஸ்ரீகா..இப்போ என்னோட சம்பளம்ங்கிறது அடடட் அமௌண்ட் தான..அப்பறம் என்ன பிரச்சனை.”

“பிரச்சனைனு சொல்ல வரல.. மாமா இன்னும் சர்வீஸ்ல தான் இருக்காரு சோ இன்னும் கொஞ்சம் கம்மியான அமௌண்ட் குடுனு சொல்றேன்.எப்படியிருந்தாலும் நாம செய்யாம அவங்களுக்கு யாரு செய்ய போறா சொல்லு..”

“என்னங்க..என் அம்மா அப்பாகிட்டயே நா கணக்கு பார்க்க முடியுமா..இப்போ வர அவங்க ஒரு ரூபா கூட கேக்கல ஆனா செய்ய வேண்டியது என் கடமை இல்லையா..நானே கம்மியா தான் சொல்றேன் அதுலயே இப்படி கணக்கு பாக்குறீங்களே?”

“இதுக்கு மேல இதுல ஆர்க்யூமெண்ட் வேண்டாம் மது நா சொல்றத சொல்லிட்டேன் அப்பறம் உன் இஷ்டம்..என்ன இருந்தாலும் அது உன் பணம் நா தலையிட விரும்பல..”

“என்னங்க இது உன் பணம் என் பணம்னு என்ன பேச்சு இதெல்லாம்..இப்போ என்ன நீங்க சொல்ற அமௌண்ட் குடுக்கணும் அவ்ளோ தான குடுத்துறேன்..இந்த பேச்சை இதோட விடுங்க..”

“மது நமக்காக யோசிச்சு தான் டா சொல்றேன் தப்பா எடுத்துக்காத..அப்பறம் முக்கியமா இதை பத்தி எங்கம்மா கிட்ட எதுவும் சொல்லிறாத..கண்டிப்பா எதாவது சொல்லுவாங்க..”

“இது வேறயா..நல்ல கூட்டத்துல வந்து சிக்கிருக்கேன்..நானா எதுவும் சொல்ல மாட்டேன்.நீங்க உளறாம இருந்தா சரி..”

மறுநாள் காலையில் நெட் பேங்கிங் மூலம் பணத்தை ட்ரான்ஸ்வர் செய்திருந்தாள்.வைரவனுக்கு அமௌண்ட் க்ரெடிட் மெசேஜ் வந்ததும் அவர் மரகதத்திடம் விஷயத்தை கூற மரகதம் மதுவை அழைத்தார்.

“சொல்லு மா எப்படியிருக்க இந்த வாரமும் செம வேலை அதான் உன்னோட ஒழுங்காவே பேச முடில..”

“உன் காசுல சாப்டுற நிலைமைக்கு நாங்க இன்னும் வரல மது..”

“ம்மா என்ன லூசு மாதிரி பேசுற என்னாச்சு??”

“யாரை கேட்டு நீ அப்பாவுக்கு பணம் அனுப்பின..”

“இதென்ன கேள்வி கல்யாணத்துக்கு முன்னாடி நா குடுத்துட்டு இருந்ததுதான..”

“அது அப்போ இப்போ நீ அந்த வீட்டு பொண்ணு மாமியாருக்கு அனுப்பாம எனக்கு ஏன் அனுப்பிருக்க?”

“ம்மா என்ன பேசுற நீ..அவங்களுக்கு தேவையானதை ஸ்ரீகா பாத்து பண்ணிட்டுதான் இருக்காரு நானும் ஒண்ணும் சொல்றது இல்ல.இது என் சம்பாத்தியம் நா கஷ்டப்பட்டு உழைக்குறது..அதை யாருக்கு கொடுக்கணும்னு எனக்கு தெரியும்..”

“மது..சின்ன புள்ளை மாதிரி பேசாத..நீ அனுப்புற காசை வாங்கி போட்டுக்குறதெல்லாம் கேவலமான விஷயம்..மாப்பிள்ளை என்ன நினைப்பாரு அதைவிட முக்கியமா சம்மந்தி வீட்ல என்ன நினைப்பாங்க..எங்களால யார் முன்னாடியும் கூனிக் குறுகி நிக்க முடியாது..”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.