(Reading time: 10 - 19 minutes)

தொடர்கதை - என்னவளே - 19 - கோமதி சிதம்பரம்

ennavale

ரிஷி, தனது அறையில் கோபத்துடன் நடந்து கொண்டு இருந்தான்.

அண்ணா... என்ற அழைப்பில் திரும்பி பார்த்தவன் அங்கு க்ரிஷ் கையில் சாப்பாட்டுடன் நின்று கொண்டு இருந்தான்.

என்னடா... இது.... நீ  ஏன் சாப்பாடு எல்லாம் எடுத்துட்டு வர????? வேணுன்னா நானேயே வந்து சாப்பிடுவேன் இல்ல.....

நீ சாப்பிடுற லட்சணத்தை தான் நான் பார்த்தனேயே..... காலைல ஏதோ டென்ஷன்ல சாப்பிடாலான நினைச்ச.... இப்ப function முடிஞ்சு  மணி 1 ஆகுது இன்னும் நீ சாப்பிடல....

உனக்கு இருக்குற டென்ஷன் கோபத்தை எல்லாம் சாப்பாட்டுல காட்டாத ப்ளீஸ்.....என்று கெஞ்சலுடன் நின்றான்.

என்னை என்ன டா பண்ண சொல்ற???? என் கண்ணுக்கு முன்னாடியே கீதாவை அவர் சத்தியம் பண்ணவச்சுட்டாரு... என்னால அவரை தடுக்க முடில....

என்னோட அப்பா இப்படி எல்லாம் யோசிப்பாருன்னு நான் நினைச்சு கூட பாக்கல டா.... நான் செஞ்சுட்டு இருக்குற துரோகத்தையே கீதா எப்படி தாங்க போறான்னு எனக்கு தெரில..... இதுல இவர் வேற கீதாவை மேலும் மேலும் ஏமாத்திட்டு இருக்காரு. என்று நொந்து கொண்டான்.

அண்ணா... நான் சொல்றேன்னு கோபப்படாத....சார் அண்ணிகிட்ட சத்தியம் வாங்குனது எனக்கு என்னமோ தப்பா தெரில.... என்று மென்று விழுங்கி கொண்டு கூறினான்.

ரிஷி, க்ரிஷ்யை முறைத்து பார்த்தான். வாசலில் நின்று கொண்டு இருந்தவனை தள்ளி விட்டு வெளியில் செல்ல முயன்றான்.

ரிஷி, தள்ளி விட்டதில் க்ரிஷியின் கையில் இருந்த சாப்பாடு கீழேயே சிந்தியது.

சாப்பாட்டை கீழயே வைத்தவன்.... ஓடி சென்று ரிஷியின் கையை பிடித்து கொண்டான்.

அண்ணா.... சார் அண்ணிகிட்ட உண்மையை சொல்லாம சத்தியம் வாங்குனது தப்புதான்..... ஆனா, அண்ணி உன்னை விட்டு பிரிஞ்சு போகக்கூடாதுன்னு தான் சார் இப்படி பண்ணிருக்காரு... அத புரிஞ்சுக்கோ... 

க்ரிஷ் யை நிமிர்ந்து பார்த்தவன்.... தன்னை பிடித்து இருந்த க்ரிஷுயின் கையை பிரித்து எடுத்தான்... கீதாவை கஷ்டப்படுத்த போற எந்த ஒரு விஷயமும் எனக்கு சந்தோசத்தை தராது. அது நானாக இருந்தாலும் சரி என்று கூறியவன்... தனது தந்தையின் அறை நோக்கி வேகமாக நடந்தான்.

சதாசிவம் ஜன்னலின் வழியே வெறித்து பார்த்து கொண்டு இருந்தார்.... மனதில், கீதாவின் வார்த்தைகளேயே நிறைந்து இருந்தது.

(மாமா.....ராஜகுட்டி என்னோட பொறுப்பு அவனை விட்டோ இல்ல இந்த வீட்டை விட்டோ நான் என்னைக்கும்  போகமாட்டேன். இந்த வீட்டு கவுரவத்தை கண்டிப்பா நான் காப்பாத்துவேன்.... இது சத்தியம் மாமா....) என்று சிரித்த முகத்துடன் கூறிய கீதாவின் முகமேயே அவரது மனதில் சந்தோசத்தை வரவைத்தது.

கீதா, அவளது அம்மா தேன்மொழி போலவேயே.... பாசத்திற்கு கட்டுப்பட்டவள்..... கீதா,  சேகரை தனது அண்ணன் போல மதிப்பவள். ராஜகுட்டியையும் அதிகம் நேசிக்கிறாள்.

அவளது இந்த பாசத்தை வைத்து தான் இனி எல்லாம் செய்ய வேண்டும்.

நான் நினைத்தது போலவேயே கீதா எனக்கு சத்தியம் செய்து கொடுத்து விட்டாள்.  எனது அடுத்த திட்டமும் நிறைவேறி விட்டால் கீதா இங்கு இருந்து செல்லவேயே முடியாது.

ஆனால், இதற்கு ரிஷி ஒற்று கொள்ளவேண்டுமேயெ என்ற யோசனையில் இருந்தவர்  ரிஷியின் காலடி சப்தம் கேட்டு திரும்பி பார்த்தார்.

கண்களில் கோபத்துடன் ரிஷி நின்று கொண்டு இருந்தான். அவரை  பார்த்து ஒரு ஆழ்ந்த பெரு மூச்சை வெளியிட்டான்.

 எதுக்கு இப்படி செஞ்சீங்க????? என்று தனது தந்தையை நோக்கி கேட்டான்.

நான் என்னப்பா செஞ்சேன்.....  ஒன்றும் அறியாதவர் போல் முகத்தை வைத்து கொண்டு கேட்டார் சதாசிவம்.

போதும் என்கிட்ட உங்க நடிப்பை காட்டாதிங்க..... எதுக்கு இப்ப எல்லா சொந்தக்காரங்க முன்னாடி கீதாகிட்ட சத்தியம் வாங்குனீங்க????? என்ன மாஸ்டர் பிளான் போடுறிங்களா???? ஏற்கனவேயே நீங்க பண்ண பாவத்துக்கு தான் நான் இப்ப கஷ்டப்படுறேன் போதாதா....என்று அக்கோரசத்துடன் கேட்டான்.

ரிஷியை, உற்று பார்த்தவர்..... அப்ப சரி.... வா.... நாம போய் கீதாகிட்ட நடந்த உண்மை எல்லாம் சொல்லிடலாம். என்று அசால்ட்டாக கூறினார்.

பெத்த பிள்ளைனு கூட பார்க்காம என் வீக் பாய்ண்ட் யூஸ் பண்ணி என்னையே கார்னார் பண்ண பாக்குறீங்க இல்ல.... நீங்க ஒரு பக்க criminalகறத இப்ப நான் நல்லவேயே புரிஞ்சுக்கிட்டேன்.

தன்னை தன் மகன் criminal என்று கூறியது வலித்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளமால் சிரிப்பால் அதை மறைத்தார்.

எதை வச்சுப்பா என்னை criminal ன்னு முடிவு பண்ண?????

கீதா, கையை அறுத்துட்டு ஹாஸ்பிடல்லா இருக்கும் போதேயே அவகிட்ட எல்லா உண்மையும் சொல்லிடால்னு சொன்னதுக்கு முடியாதுன்னு சொல்லிட்டு....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.