(Reading time: 10 - 19 minutes)

இப்ப எனக்கும் அவளுக்கும் ஊரைக்கூட்டி நிச்சயதார்த்தம் பண்ணிட்டு.... அதும், இன்னும் பத்து நாள்லா கல்யாணத்தை வச்சுட்டு..... இப்ப போய் உண்மையை சொல்லனுனு என்ன அர்த்தம்.... அப்ப நீங்க எல்லாமேயே பிளான் பண்ணி தானேயே செய்றீங்க.....

வேணாம்ப்பா அவ அப்பாவி.....  என்று கெஞ்சலுடன் முடித்தான்.

இதோ பாரு ரிஷி.... நீயும் கீதாவும் அல்ரெடி மூணு மாசம் ஒன்னயா ஒரேயே வீட்ல இருந்து இருக்கீங்க.... இந்த விஷயம் நாம சொந்தக்காரங்க கொஞ்ச பேருக்கும் தெரிஞ்சுடுச்சு....  உன்கூட இருந்த பொண்ணு கீதான்னு மட்டும் தான் அவங்களுக்கு தெரியாது. அதனால, உனக்கும் கீதாக்கும் கல்யாணம் நடந்து தான் ஆகணும்.ஏன்னா, இந்த கல்யாணத்துல என்னோட கவுரவம் அடங்கி இருக்கு.

உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்குறது நீங்க ரெண்டு பெரும் சேர்ந்து வாழ்றதுக்கு ......  கீதா, உன்னை விட்டு பிரிஞ்சு போறதுக்கு இல்ல .... அவளுக்கு உண்மை தெரிஞ்சாலும் சரி தெரிலைன்னாலும் சரி.... இந்த வீட்டு மருமக ஆனபிறகு கீதாக்கானு சில பொறுப்புகள் இருக்கு அதை அவ செஞ்சு தான் ஆகணும்....

கீதாக்கு நாளைக்கு உண்மை தெரியும் போது கண்டிப்பா அவ இந்த வீட்டை விட்டு வெளில போகனுன்னு நினைப்பா.... அப்ப, அவளை கார்னார் பண்ண தான் அவளோட செண்டிமெண்ட்யா யூஸ் பண்ணி எல்லார்க்கும் முன்னாடி ராஜகுட்டி மேல சத்தியம் வாங்குனேன்.

இதுக்கு மேலையும் கூட அவளோட செண்டிமெண்ட் யூஸ் பண்ணித்தான் அவளை நாம லாக் பண்ணமுடியும்.

ரிஷி.... முடிவா சொல்றேன்... எனக்கும் கீதாக்கும் நடுவுல நீ வராதா அதுதான் உனக்கும் எனக்கும் நல்லது. என்று உறுதியுடன் கூறினார்.

என்னால முடியாது....  முடிஞ்சா  எங்க ரெண்டு பேர் நடுவுல நீங்க வராதீங்க அது தான் உங்களுக்கும் நல்லது.

என்று எச்சரிக்கும் தொனியில் கூறினான்.

நீ சொல்றதை மீறி நான் தலையிட்ட என்ன பண்ணுவா??? ரிஷி. என்று சதாசிவம் கூர்மையான பார்வையில் கேட்டார்.

எனக்கு நீங்க யாருமேயே தேவை இல்லைன்னு.... கீதாவை கூட்டிட்டு இந்த வீட்டை விட்டு போய்டுவேன்.  நீங்க செத்த கூட இந்த வீட்டுக்கு வரமாட்டேன்...

ரிஷியை, சிறிது நேரம் உற்று பார்த்தவர்.... அப்படி, நீ போகனுன்னு நினைச்ச கீதாகிட்ட நானேயே எல்லா உண்மையும் சொல்வேன்.... அது மட்டும் இல்ல.... கீதாவோட பாட்டிக்கும் என்ன வேணுன்னு நாலும் ஆகலாம்.

ஏற்கனவே, கீதாக்கு அம்மா இல்ல.... பாட்டியும் இல்லாம போகணுமா..... நீயே முடிவு பண்ணிக்கோ என்று அசால்ட்டாக கூறியவர் அங்கு இருந்த சோபாவில் அமர்ந்தார்.....

ரிஷி, எதும் பேசாமல்.... உடல் விறைப்புற தனது தந்தையே பார்த்தவாறு நின்றான்.

அவனது, நிலையை சதாசிவமும் புரிந்து கொண்டார்.

எனக்கு ஒரு சந்தேகம்.... என்றவாறு தந்தையை பார்த்தான் ரிஷி. என்ன என்பது போல நோக்கியவரை....

என்னோட அம்மா படியில இருந்து தவறி விழுந்து இறந்தாங்களா???? இல்ல.... உங்க கவுரவம் ஜாதி வெறிக்காக எங்க அம்மாவையும் கொன்னுட்டீங்களா.....

நெஞ்சில் யாரோ கத்தி கொண்டு கீறுவது போல ரிஷியின் வார்த்தைகள் சதாசிவத்திற்கு வலித்தது.

இப்ப எல்லாம் உங்களுக்கு சாதகமா இருக்கு.... அதனால நான் அமைதியா போறேன்.... 

அதுக்காக.... நீங்க கீதாக்கு செய்யுற துரோகத்தை எல்லாம் பார்த்துட்டு நான் சும்மா இருப்பேன்னு மட்டும் நினைக்காதிங்க......

கீதா, என் உயிர்க்கும் மேல..... அவ விஷயத்துல தலை இடுறது.... இதோட நிறுத்திக்கோங்க.... என்று கூறியவன் வேகமாக வெளியில் சென்று விட்டான்.

ரிஷி  செல்வதை பார்த்து கொண்டு இருந்த  சதாசிவம் மெதுவாக எழுந்து கப்போர்டுயில் இருந்த மாத்திரையை எடுத்து போட்டு கொண்டார்.

மெதுவாக, கட்டிலில் சாய்ந்தவர்... கீதா, உன் உயிரினும் மேல் என்று எனக்கு தெரியும் ரிஷி.... அதனால் தான் அவள்  உன்னை விட்டு பிரியா கூடாது என்று நினைக்குறேன்.

லஷ்மி, ரிஷி சொன்னது போல உன்னை நானேயே கொன்னுட்டேன்யா மா... தனது மனைவியின் ஞாபகத்தில் கண்களை மூடினார்.

ந்த பெரிய வீட்டின் மொட்டை மடியில் ஒரு ஓரமாக நித்யா நின்று கொண்டு இருந்தாள்.

அவளது கண்களில் இருந்து கண்ணீர் கேட்பாராற்று வழிந்து கொண்டு இருந்தது.

சிவகாமி அம்மாள்  மற்றும் கோபியின் குரலேயே அவளது காதில் கேட்டு கொண்டு இருந்தது.

ஹே.... உன்கிட்ட நான் என்ன சொன்னேன் குழந்தைக்கு காலையில சாப்பிட கொடுத்த சாதத்துல நான் கொடுத்த பவுடர் யா  கலக்க சொன்னேன்யா இல்லையா.....

நீ மட்டும் அதை செஞ்சு இருந்த நாங்க நினைச்ச மாதிரி இங்க நிச்சயதார்த்தம் நின்னுரு இருக்கும்.

எல்லாரும் ஹாஸ்பிடல்க்கு ஓடி இருக்குங்க .....   அந்த கீதாவை பார்க்க பார்க்க....எனக்கு வயிறு ஏறியது டீ..... என்று சிவகாமி அம்மாள் கத்தினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.