Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 09 - ஆதி [பிந்து வினோத்] - 5.0 out of 5 based on 3 votes
Change font size:
Pin It

தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 09 - ஆதி [பிந்து வினோத்]

Vaanum mannum katti kondathe

ழக்கத்தை விட சீக்கிரமாக அலுவலகம் வந்த ஆகாஷின் கண்கள் அவனுக்கு பிடித்த காரிடாரின் பக்கத்தில் வருவதற்கு முன்பே அவனின் மனம் சினேகாவை தேட தொடங்கியது.

இன்றும் அவள் இல்லை என்ற நிராசையுடனே நடந்தவனின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது...

அங்கே சினேகா அன்றைய நாளை போலவே இப்போதும் அவனுக்கு முதுகு காட்டி நின்றிருந்தாள்!!!

தானாக ஒரு புன்னகை உதயமாக சத்தம் போடாமல் மெல்ல நடந்தான்...

மற்ற நாட்களை போல தூரத்தில் தெரிந்த இயற்கை அழகு அவனின் மனதை மயக்கவில்லை... அங்கே நின்றிருந்த சினேகா மட்டுமே அவனின் கவனத்தை ஈர்த்திருந்தாள்...

அவளின் பக்கத்தில் சென்றவன்,

“குட் மார்னிங் சினேகா!” என்றான்!

Vaanum mannum katti kondathe
Pivot dance step 🙂 

பெரும்பாலான மேற்கத்திய நடனங்களின் முதல் நிலையில் pivot என்று ஒரு ஸ்டெப் சொல்லிக் கொடுப்பார்கள்.

நளினமாக திரும்பும் ஒரு ஸ்டெப் அது...

கிட்டத்தட்ட அதே பாணியில் நேர்த்தியாக சட்டென்று திரும்பினாள் சினேகா...

மேற்கத்திய நடனம் கற்றவன் என்பதால் டூயட் ஆட அவள் பக்கம் ஆர்வத்துடன் நீண்ட கைகளை கஷ்டப்பட்டு அடக்கி வைத்தான் ஆகாஷ்...

அவளின் கண்களில் தெரிந்த கலவரமும், அதிர்ச்சியும் கலந்த கலப்படமான உணர்ச்சி, அவனின் திடீர் விஜயம் அவளை திடுக்கிட செய்திருப்பதை சொல்லாமல் சொன்னது...

“என்னாச்சு சினேகா உங்களை startle செய்துட்டேனா??”

“நோ... யெஸ்... இல்ல...”

“ம்ம்ம்... நோ, யெஸ், இல்ல...???? ஆமான்னு ஒன்னை மட்டும் விட்டுட்டீங்க???”

“ஹி ஹி ஹி... சாரி சார்...”

“எதுக்கு சாரி...???”

என்ன சொல்வது என்று புரியாமல் ஒரு அசட்டு சிரிப்பை கொடுத்து சமாளித்தாள் சினேகா.

ஆகாஷிற்கு சினேகாவின் இந்த தடுமாற்றம் ரசிக்க கூடியதாக இருந்தது... ஆனால் அதை விட முக்கியமாக தெரிந்துக் கொள்ள வேண்டிய விஷயம் ஒன்றும் இருந்தது...

“என்ன செஞ்சுட்டு இருந்தீங்க...?”

“சீக்கிரம் ஆபிஸ் வந்தேன் சார்... அதனால சும்மா... சும்மா....” என்று தொடங்கியவள், ஆகாஷின் கண்களில் வந்த கேள்வியை கவனித்து பேச்சை பாதியில் நிறுத்தினாள்...

முன்பு அவனை இங்கே சந்தித்த போதும் இப்படி எதையோ தானே சொன்னாள்...!!!!

அவனின் முக மாற்றம் மனதை உறுத்த, அவசரமாக,

“இங்கே பார்த்தா அந்த பார்க்கோட வியூ ரொம்ப அழகா இருக்கும் சார்.. அதான் பார்த்துட்டு இருந்தேன்...” என்று சேர்த்து சொன்னாள்...

ஆகாஷின் மூளையில் இருந்த அத்தனை பல்புகளும் உயிர்பெற்று பிரகாசமாக எரிந்தன!!!!

சினேகா இங்கிருந்து இயற்கையை தான் ரசித்திருக்கிறாள்!!!!

அவனை போலவே யோசித்திருக்கிறாள்!!!!!

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

இந்த இடத்தில் ஆட்களை பார்ப்பதே அரிது... அப்படியே பார்த்தாலும் கையில் இருக்கும் மொபைலில் நொண்டிக் கொண்டோ, பேசிக் கொண்டோ செல்வார்கள்...

முதல் முதலாக அவனை போலவே இயற்கையை ரசிக்கும் ஒரு சக மனித ஜீவனை சந்தித்திருக்கிறான்... அதுவும் அந்த ஜீவன் இந்த அழகிய சினேகாவாக இருக்கும் போது....

கட்டிழந்து ஓடிய எண்ணங்களுக்கு அவசரமாக வேலி அமைத்து கட்டுப்படுத்தினான்...

“கூல்... கூல்...! அன்னைக்கும் அதே தான் செஞ்சுட்டு இருந்தீங்களா??”

“ஞாபகம் வச்சிருக்கீங்களா சார், உங்களுக்கு நல்ல மெமரி... ஆமாம் சார்...”

“அப்புறம் ஏன் இவ்வளவு நாளா உங்களை பார்க்க முடியலை...???”

ஆகாஷ் இலகுவாக கேட்ட கேள்விக்கு உடனே பதில் சொல்லாமல் யோசித்தாள் சினேகா....

அந்த கேள்விக்கான உண்மையான பதில் அப்படிப்பட்டது...

அது என்னவோ ஆகாஷிடம் ஒரு சில நிமிடங்கள் பேசினாலே மனதில் இருப்பதை அப்படியே ஒப்பிக்க தொடங்கி விடுகிறாள்... அன்று சைட் விசிட் போது மஹா அக்கா பற்றி... அவளை பற்றி... அவளின் கொலுசு பற்றி வரைக்கும் கூட ஒரே மூச்சில் ஒப்பித்து முடித்து விட்டாள்...

“என்ன இவ்வளவு நேரம் யோசிக்குறீங்க? ரொம்ப பயங்கரமான பதிலா இருக்கும் போலருக்கே???” விடாமல் மீண்டும் கேட்டான் ஆகாஷ்...

அவனை அதற்கு மேல் காத்திருக்க வைக்க கூடாது எனும் எண்ணத்தில் அவசரமாக பதில் சொன்னாள் சினேகா...

“அன்னைக்கு, ‘இந்த டைம்ல இந்த காரிடார்ல பொதுவா யாரும் கண்ணுல பட மாட்டாங்க’ன்னு சொன்னீங்க சார்... அப்போ நான் என்னவோ உங்களுக்காக இங்கே வந்ததா நினைச்சிருவீங்களோன்னு நினைச்சேன்... அதான்...”

அவ்வளவு சொன்ன பிறகு தான் மீண்டும் உளறி விட்டோம் என்பதை உணர்ந்தாள்...

ஆனாலும் ஆகாஷ் தப்பாக நினைத்து விட கூடாதே என்ற ஆதங்கத்தில் அவசரமாக,

“நீங்க அப்படி இல்லைன்னு தெரியும் சார்... ஆனால் அப்போ நான் நியூ ஜாய்ணீ பாருங்க...” என்றும் சேர்த்து சொன்னாள்.

அவளை வித்தியாசமாக ஒரு பார்வை பார்த்த ஆகாஷ்,

“ம்ம்ம்... ஹாவ் அ நைஸ் டே சினேகா...” என்று சொல்லி விட்டு சென்றான்.

அவன் எதையோ சொல்லாமல் சென்றதாக அவளுக்கு தோன்றியது... அதே போல அவன் பார்த்து சென்ற அந்த பார்வைக்கும் அர்த்தம் புரியவில்லை... ஒருவேளை அவள் உளறி கொட்டியதை தவறாக எடுத்துக் கொண்டிருப்பானோ???

அவள் யோசனையில் ஆழ்ந்திருக்க, அவளின் செல்போன் அலறியது... நம்பரை பார்த்து விட்டு எடுத்து பேசினாள்,

“குட் மார்னிங் சியாமளா மேம்...”

“எங்கே இருக்க சினேகா??? மீட்டிங் ஸ்டார்ட் ஆக போகுது...”

“இதோ வந்துட்டேன் மேம்....”           

அழைப்பை துண்டித்து விட்டு, ஆகாஷ் பற்றிய கேள்விகளை பின்னே தள்ளி விட்டு வேலையை கவனிக்க சென்றாள்.

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 

Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 09 - ஆதி [பிந்து வினோத்]saaru 2019-01-21 17:26
Nice update bindu
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 09 - ஆதி [பிந்து வினோத்]Bindu Vinod 2019-02-23 22:37
Thank you Saaru :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 09 - ஆதி [பிந்து வினோத்]Anusha Chillzee 2019-01-19 01:40
pivot step demo :sigh: :roll: :lol: moment :D

saree katta therinja oru heroine. welcome change ;-) :grin: :grin:

Akash Sneha track is almost clear, I am waiting to know what's in Akshara's mind

Nice epi Binds.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 09 - ஆதி [பிந்து வினோத்]Bindu Vinod 2019-02-23 22:36
Thank you Anu :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 09 - ஆதி [பிந்து வினோத்]Thenmozhi 2019-01-17 18:44
cute epi Binds. Dance, saree, printer, sighting all ok, ore oru china prb thavira ;-) ;-)

athu enanu yosichu ningale solunga :P :P
nangalum brain teaser solvome :P :P :P

two days time pothuma ;-) :lol: :D

kandupidicha forum pakam vanga, it will be easy for us to kadalai pottufy ;-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 09 - ஆதி [பிந்து வினோத்]Bindu Vinod 2019-02-23 22:35
Brain 1+ month'a work agalai. So no teaser ;-)

Thank you Thens :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 09 - ஆதி [பிந்து வினோத்]Thenmozhi 2019-02-25 03:41
brain-nu onnu irutha thana work aga :P
:D
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 09 - ஆதி [பிந்து வினோத்]AdharvJo 2019-01-17 15:54
:D cute update bindu ma'am :clap: :clap: unga heroes nagariga line-a cross panuradha :no: :P pch timing la bear facepalm ;-)
Liked Sneha and Akash's convo...ninga snehakum konjam complan kodungal :sad: printer kuda reach pana mudiyalai :D
look forward to read next update. thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 09 - ஆதி [பிந்து வினோத்]Bindu Vinod 2019-02-23 22:34
:-)

Thank you Adharv :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 09 - ஆதி [பிந்து வினோத்]Vanaja 2019-01-17 10:58
Very nice
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 09 - ஆதி [பிந்து வினோத்]Bindu Vinod 2019-02-23 22:33
Thank you Vanaja :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 09 - ஆதி [பிந்து வினோத்]madhumathi9 2019-01-17 09:35
wow nice & cute epi.selai miga azhgaaga irukku.waiting to read more. :thnkx: 4 this epi. (y) :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 09 - ஆதி [பிந்து வினோத்]Bindu Vinod 2019-02-23 22:33
Thank you Madhumathi :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 09 - ஆதி [பிந்து வினோத்]rspreethi 2019-01-17 08:50
Super update... Walk and talk super... Saree semma... Akshra yen vandhanga nalla nerathula :Q: cha... Wait panni therinjukaren
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 09 - ஆதி [பிந்து வினோத்]Bindu Vinod 2019-02-23 22:32
Thank you Preethi :-)
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top