Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 10 - சசிரேகா - 5.0 out of 5 based on 3 votes
Pin It

தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 10 - சசிரேகா

Kaanum idamellam neeye

களே பத்மாவதி எழுந்திரு” என பூபதி பாண்டியர் தனது செல்ல மகள் பத்மாவதி என நினைத்து உறங்கிக் கொண்டிருந்த தர்னேந்திரனை எழுப்ப அவனோ உறக்கத்தில் புரண்டான்

”என்ன இது இன்று இவ்வளவு நேரமாகிவிட்டது, இன்னும் உறங்குகிறாளே உடல்நிலை சரியில்லையா” என்றவர் மீண்டும் அவனை உலுக்கினார்.

அவனோ கழுத்து முதல் பாதம் வரை போர்வையால் போர்த்திக் கொண்டு முகத்தை முக்காட்டால் மூடியிருந்தான்.

”பத்மாவதி எழுந்திரும்மா” என அவர் சொல்ல சொல்ல அந்நேரம் அங்கு தர்னேந்திரனுக்காக சாப்பாடு கொண்டு வந்த பத்மாவதி தன் அறையில் தந்தை இருப்பதைக் கண்டு அஞ்சினாள்

”தந்தையே என்ன செய்கிறீர்கள்” என பதட்டத்துடன் கேட்டுக் கொண்டே அவரிடம் வந்து நின்றாள்

”பத்மாவதி நீயா அப்படியானால் உன் இடத்தில் படுத்திருப்பது யார்”

“அவள் சந்திரகலா தந்தையே, நேற்று நானும் அவளும் நாட்டியத்தை பற்றி உரையாடிக் கொண்டிருந்தோம் நேரம் போனதே தெரியாமல் உறங்கிவிட்டோம்”

என சொன்னதும் அவர் அமைதியாக எழுந்து பத்மாவதியிடம் வந்து நின்றார்

”நேற்று நீ கஜானாவிற்கு சென்றதாக வீரன் சொன்னான். உனக்கு பிடித்த ரத்தினங்களை எடுத்துக் கொண்டாயா மகளே”

“இல்லை இன்னும் நான் விரும்பிய ரத்தினம் கிடைக்கவில்லை, கைக்கு அருகில் இருந்தும் என்னால் பிடிக்க முடியவில்லை” என தர்னேந்திரனை பார்த்துக் கொண்டே அவள் சொல்ல

”கவலை வேண்டாம் மகளே, நிதானமாகவே நீ ரத்தினங்களை எடுத்துக் கொள் எனக்கு சில வேலைகள் உள்ளது, நான் செல்ல வேண்டும் இரண்டு நாட்கள் நான் மாளிகையில் இருக்கப் போவதில்லை, மாதவனும் இங்கு இல்லை நீ தனியாக இருக்க வேண்டும் இருப்பாயா மகளே”

“இருக்கிறேன் மாதவன் எங்கே தந்தையே”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“நான் அவனை ஒரு வேலையாக நாகராஜா ஆலயத்திற்கு அனுப்பி வைத்துள்ளேன். அந்த ஆலயத்தை கட்ட தேவையான ரத்தினங்களையும் கொடையையும் அவனிடம் கொடுத்துள்ளேன். அவன் வருவதற்கு சிறிது காலம் ஆகும், அங்கு ஏதோ சிறு பிரச்சனை ஏற்பட்டுள்ளதாம் நான் சென்றாக வேண்டும் போய் பார்த்துவிட்டு வருகிறேன் மகளே நீ தைரியமாக இங்கு இரு”

“சரி தந்தையே” என சொல்லவும் அவரும் அங்கிருந்து சென்றதும் அவள் தர்னேந்திரனிடம் வந்து அவனை எழுப்பினாள்

”என்ன பத்மாவதி நீ என்னை மிகவும் தொந்தரவு செய்கிறாய்” என குறை கூறிக்கொண்டே எழுந்து அமர்ந்தான் தர்னேந்திரன்

”தங்களுக்கு பசிக்கவில்லையா” என சொல்லியபடியே அவன் முன் சாப்பிடும் பதார்த்தங்களை வைத்தாள்

”நான் நீராட வேண்டுமே”

“வாருங்கள்” என அவனை அழைத்துக் கொண்டு ஒரு அறைக்குச் சென்று அவனை விட்டாள்

”எனக்கு வேறு உடையில்லையே” என சொல்ல

”இந்தாருங்கள் இது என்னுடைய உடை, இதை அணிந்துக் கொள்ளுங்கள் யாருக்கும் சந்தேகம் வராது” என சொல்ல அதை வாங்கிக் கொண்டதும்

”நீராடி விட்டு வாருங்கள்” என சொல்லிவிட்டு அவள் சென்றதும் அந்த அறையையே பார்த்தான் தர்னேந்திரன். பத்மாவதிக்காகவே அந்த குளியல் அறையை தயார் செய்திருந்தார்கள் சிறிது நேரத்தில் குளித்துவிட்டு அவளது உடையை அணிந்துக் கொண்டு பத்மாவதியின் முன் வந்து நின்றான்

அவள் தந்த உணவை திருப்தியாக உண்டு முடித்தவன்

”உன் தந்தை வந்தால் என் நிலைமை என்னாகும்”

“என் தந்தை இங்கு இல்லை இரு தினங்கள் வரமாட்டார் வெளியூர் சென்றிருக்கிறார்”

“நல்லது நான் சென்று என் வேலையை தொடர்கிறேன், என் தந்தையிடம் சொல்லாமல் வந்துவிட்டேன் அவரிடம் தகவல் அளித்து விடுவாயா”

“அதை நான் செய்கிறேன், நீங்கள் முகத்தை முக்காட்டால் மூடிக்கொண்டு என்னுடன் வாருங்கள்” என சொல்லவும் அவனும் அதே போல் செய்து அவளை பின்தொடர்ந்தான். அவளது உடையில் இருந்த காரணத்தால் யாரும் அவனை சந்தேகிக்க வில்லை கஜானாவிற்குள் சென்றதும் தர்னேந்திரன் தன் வேலையை தொடர்ந்து செய்யலானான். ஒரு இடத்தில் அவன் செய்யும் வேலையை பார்த்தப்படியே அவனையும் ரசித்து பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் பத்மாவதி, அன்றைய நாளும் பரிசோதனையிலேயே முடிந்தது. இரவு நேரம் வந்தும் அவன் உறங்காமல் வேலை செய்வதைக் கண்டு திகைத்தாள் பத்மாவதி

”உறக்கம் வரவில்லையா”

“நேரம் போதவில்லை, ஜமீன்தார் வருவதற்குள் நான் இவ்வேலையை முடித்துவிட வேண்டும், இல்லையேல் எனக்கு பிரச்சனை” என சொல்லவும் அவளும்

”இன்னும் ஓர் இரவு உள்ளதே”

“அதுவும் போதாது பத்மாவதி” என சொல்லியவன் அவளைக் கண்டு திகைத்து

”நீ சென்று உறங்கு செல்”

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5  6  7  8 
 •  Next 
 •  End 

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

 • AndrilAndril
 • I MyselfI Myself
 • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
 • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
 • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
 • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
 • Un nesam en suvasamUn nesam en suvasam
 • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 10 - சசிரேகாsasi 2019-01-18 18:49
hi friends adharv, mahi, madhumathi pongal eppadi pochu kalakala irundhatha
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 10 - சசிரேகாmadhumathi9 2019-01-17 05:27
wow :clap: nice epi sasi.romba interesting aaga poguthu kathai.adutha epiyai eppothu padippom endru irukku. :thnkx: 4 this epi. (y) :GL:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 10 - சசிரேகாAdharvJo 2019-01-16 21:12
:clap: :clap: interesting update ma'am (y) Idhu ena pudhu thirupam niranja idhu vendadha velai stay away from meen's steam apro ninga cardio consult panavendiyadha poidum :D
Sasi ma'am ninga sonna than ivaru ketparu but ningale ivara route mathi viduringale madam ji facepalm Ore confusion :o puzzle eppo solve pana poringa?? so indha veedu setup and dream-k etho connection irukku :Q:
waiting to read the next update. thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 10 - சசிரேகாmahinagaraj 2019-01-16 18:10
சூப்பர் மேம்..... :clap: :clap:
இப்போ தான் கதையில் சூடுபிடிக்குது.. செம இனி வரும் வாரங்கள் நல்லா போகும் போல... ;-)
:thnkx:
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top