Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 10 - சசிரேகா - 5.0 out of 5 based on 3 votes

”இதுவே அண்ணா கூப்பிட்டா வந்திருப்ப, சரி விடு மீனு இருந்திருந்தா இதைப்பார்த்து சந்தோஷப்பட்டிருப்பா, என்ன இருந்தாலும் இந்த வீட்டுல அவள் இருந்தப்ப கலகலப்பா இருந்திச்சி இப்ப பாரு அழுது வடியுது இங்க இருக்கவே எனக்கு பிடிக்கலை” என புலம்பியவன் ஈஸ்வரனைப் பார்த்து

”அண்ணா குட்நைட்” என வெறுப்பாக சொல்லிவிட்டு சென்றுவிடவும் ஈஸ்வரனோ

”நிரஞ்சனோட மனசை மாத்த கார் வாங்கினாலும், அவன் மனசு இன்னும் மீனுபக்கமே இருக்கே என்ன செய்றது, ஜாலியா இருக்கலாம்னு வந்தான். இப்ப பிடிக்கலைங்கறான் அவனுக்காக மீனுகிட்ட பேசிப்பார்க்கலாம், நாளைக்கே அவளை போய் பார்க்கனும் அதான் கரெக்ட்” என மனதுள் யோசித்தபடியே ஆனந்தி இருப்பதை மறந்து அவன் வீட்டிற்குள் சென்றுவிட வள்ளியோ குமரவேலிடம்

”என்னங்க எங்க போனீங்க”

“கார் வாங்கினதுக்கு ஓட்டல்ல மாப்பிள்ளை ட்ரீட் வைச்சாரு, அதான் சாப்பிட்டு வந்தோம்”

“ஃபோன் பண்ணி சொல்லியிருக்கலாம்ல, நான் சமைக்காம இருந்திருப்பேனே எங்களையும் கூட்டிட்டு ஓட்டலுக்குப் போயிருக்கலாமே”

“இந்த எல்லா கேள்வியையும் மாப்பிள்ளை கிட்ட கேளு, என்னை ஏன் கேட்கற, அவங்களா திடீர்ன்னு ஓட்டல் முன்னாடி வண்டியை நிப்பாட்டினாங்க, அவங்களோட சாப்பிடலைன்னா தப்பா நினைப்பாங்க அதான் சாப்பிட்டு வந்தேன். ஆமா நீயும் ஆனந்தியும் சாப்பிட்டாச்சா”

“ஆச்சி ஆச்சி” என அலுப்பாக வள்ளி சொல்ல

“அதுக்கேன்டி சலிச்சிக்கற”

“என் சமையல் பிடிக்கலைன்னு ஆனந்தி அந்த வீட்டுக்கு போயிட்டு சாப்பிட்டு வந்தா”

“யார் வீட்டுக்கு போனா”

“உங்க தங்கச்சி வீட்டுக்குத்தான்”

“சரி விடு, நாளைக்கு காலையில புதுசா சமையல்காரியை நான் வேலைக்கு வைக்கிறேன், இனிமேல புதுசா ப்ரான்ச் ஆரம்பிக்கற வேலைகள் ஆரம்பமாயிடும், என்னால வீட்லயே இருக்க முடியாது நீதான் ஆனந்தியை பார்த்துக்கனும், நான் மாப்பிள்ளையோடவும் பாஸ்கரோடவும் சேர்ந்து சீக்கிரமா ப்ரான்ச் ஆரம்பிக்கனும்”

“தாராளாமா செய்ங்க ஆனா ஒண்ணு அந்த மீனாவை மட்டும் இந்த பிசினஸ்ல சேர்த்துக்காதீங்க இப்பவே சொல்லிட்டேன்”

“என் கையில என்னம்மா இருக்கு எல்லாம் மாப்பிள்ளை கையில இருக்கு”

“நான் அவர்ட்ட பேசிறேன்”

“தாராளமா பேசிக்க உள்ள போயேன், எல்லாம் தெருவில நிக்க வைச்சித்தான் கேள்வி கேட்பியோ” என சொல்லவும் வள்ளியும் அமைதியாக உள்ளே சென்றுவிட கவலையுடன் இருந்த ஆனந்தியிடம் வந்தார்

”உனக்கு என்னாச்சிம்மா ஏன் சோகமா இருக்க, அதான் உன் அம்மா சமையல்ல இருந்து தப்பிச்சிட்டியே அப்புறம் என்ன”

“பாவம் மீனா அவளைப் பார்க்கப் போனேன். என்னை திட்டலை, விரட்டலை, அன்பா பேசினா, அத்தையும் நல்லாவே பேசினாங்க, இங்கிருந்தவரைக்கும் என்கிட்ட அவ்வளவா ரெண்டு பேரும் பேசவேமாட்டாங்க ஆனா அங்க போனதும் அத்தை நான் சின்னப்ப என்னவெல்லாம் குறும்பு செஞ்சேன்னு சொல்லி சந்தோஷப்பட்டாங்க, மீனாவும் எனக்கு பிடிச்ச சமையல் செஞ்சி ஊட்டியும் விட்டாப்பா, இப்பதான் புரியுது மீனாவும் அத்தையும் என் மேல எவ்ளோ பாசம் வைச்சிருக்காங்கன்னு அதை தெரிஞ்சிக்காம இத்தனை நாளும் நான் அம்மா பேச்சைக் கேட்டு அவங்களை விட்டு தள்ளியே இருந்துட்டேன். மீனாவுக்காக நான் எதையும் செஞ்சதில்லை, அதை நினைச்சா எனக்கு கஷ்டமாயிருக்குப்பா” என வருந்திய ஆனந்தியிடம் குமரவேல்

“கவலையை விடு முதல்ல உன் கல்யாணம் முடியட்டும், அப்புறம் மீனாவை ஒரு நல்லவனா பார்த்து கல்யாணம் பண்ணி வைச்சிடறேன் கல்யாணத்துக்கு ஆக வேண்டிய செலவை நீயும் மாப்பிள்ளையும் செய்ங்க போதும்”

“மீனா இதுக்கு ஒத்துக்க மாட்டாப்பா, முதல்ல அவளுக்கு ஒரு வேலை கிடைக்கனும், அப்பா நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க அம்மா இப்படித்தான் எதையாவது பேசுவாங்க மீனாவுக்கும் அத்தானை சுத்தமா பிடிக்கலை நானும் அவரைப் பத்தியும் அவர் மீனாவை பத்தி அக்கறையா பேசினதையும் சொன்னேன் அவள் நம்பவேயில்லை, அத்தானை அவள் ரொம்பவே வெறுக்கறா ஆனா நிரஞ்சனை பத்தி அவள் நல்லாவே விசாரிச்சாப்பா, எனக்கென்னவோ அவளுக்கு நிரஞ்சனை பிடிச்சிருக்குன்னு தோணுது, பேசாம அவருக்கு மீனாவை பேசி முடிச்சா என்ன”

“இதப்பாரும்மா நிரஞ்சன் தம்பி மீனாவை பத்தி பேசறார் ஒத்துக்கறேன் ஆனா, அவங்களுக்குள்ள நட்பு மட்டும்தான் இருக்கு வேற எதுவும் இல்லை, எதுவாயிருந்தாலும் அவங்களே சொல்லட்டும் நாமளே எதையாவது நினைச்சி, தப்பா எதையாவது செஞ்சிட்டா பாவம் அவங்களுக்குதான் கஷ்டம்”

“சரிப்பா அப்படின்னா நீங்க புதுசா ஆரம்பிக்கற பிரான்ச்லயாவது அவளை வேலைக்கு வைச்சிக்குங்களேன் அந்த விசயம் அம்மாவுக்கு தெரியாம பார்த்துக்குங்களேன் அம்மா வீட்டை தாண்டி வரமாட்டாங்க அதனால”

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • Katrin kanalKatrin kanal
  • Kallaraiyil oru karuvaraiKallaraiyil oru karuvarai
  • Maayakkottai - MinnalMaayakkottai - Minnal
  • Theeradha KadhalTheeradha Kadhal
  • ThazhamPoove Vaasam VeesuThazhamPoove Vaasam Veesu
  • Kids Fun StoriesKids Fun Stories
  • Unnai ondru ketpenUnnai ondru ketpen
  • Yaar arivaarYaar arivaar

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 10 - சசிரேகாsasi 2019-01-18 18:49
hi friends adharv, mahi, madhumathi pongal eppadi pochu kalakala irundhatha
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 10 - சசிரேகாmadhumathi9 2019-01-17 05:27
wow :clap: nice epi sasi.romba interesting aaga poguthu kathai.adutha epiyai eppothu padippom endru irukku. :thnkx: 4 this epi. (y) :GL:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 10 - சசிரேகாAdharvJo 2019-01-16 21:12
:clap: :clap: interesting update ma'am (y) Idhu ena pudhu thirupam niranja idhu vendadha velai stay away from meen's steam apro ninga cardio consult panavendiyadha poidum :D
Sasi ma'am ninga sonna than ivaru ketparu but ningale ivara route mathi viduringale madam ji facepalm Ore confusion :o puzzle eppo solve pana poringa?? so indha veedu setup and dream-k etho connection irukku :Q:
waiting to read the next update. thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 10 - சசிரேகாmahinagaraj 2019-01-16 18:10
சூப்பர் மேம்..... :clap: :clap:
இப்போ தான் கதையில் சூடுபிடிக்குது.. செம இனி வரும் வாரங்கள் நல்லா போகும் போல... ;-)
:thnkx:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top