Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 10 - சசிரேகா - 5.0 out of 5 based on 3 votes

”போதும் மீனா சிரிச்சி சிரிச்சி வாய் வலிக்குது அண்ணாவும் எழுந்தபாடில்லை. எனக்கு இந்த பொம்மையை செய்ய கத்துக்குடு வா” என சொல்லவும் மீனாவும் அவனை அழைத்துக் கொண்டு கொல்லைப்புறத்திற்குச் சென்றாள்

”இந்த ஊர்ல நிறைய வீடுங்க இப்படித்தான் கட்டியிருப்பாங்களா”

“ஆமாம்” என சொல்லியவள் அங்கு ஓரிடத்தில் நிறைய களிமண்ணை நிரப்பி வைத்திருந்தாள். அதன் பக்கத்தில் ப்ளாஸ்டர் ஆப் பாரிசும் ஒரு பாக்சில் வைத்திருந்தாள், அங்கு சென்று அமர்ந்தாள். நிரஞ்சனோ அங்கும் இங்கும் சுற்றிப்பார்த்தவனுக்கு லஷ்மியும் காவேரியும் தெரியவே ஆசையாக அதனிடம் சென்று செல்லம் கொஞ்சினான்

”ஹாய் டார்லிங் என்னை மிஸ் பண்ணியா” என காவேரியை கொஞ்ச லஷ்மியோ சிநேகமாக அவனது கைக்குள் வரவே

”ஓ லஷ்மி என்னை பார்த்ததும் சந்தோஷமா உனக்கு நீ எப்படியிருக்க” என அதனிடம் அவன் பேசுவதைக் கண்டு ரசித்தாள் மீனா

”அண்ணன் தம்பிக்குள்ள எவ்ளோ வித்தியாசங்கள் இருக்கு, டாக்டர் எவ்ளோ இயல்பா பழகறாரு அதே அவரோட அண்ணா சிடுசிடுன்னு இருக்காரே, எப்படித்தான் அக்கா அவரை கட்டிக்கிட்டு வாழப் போகுதோ எனக்கு இந்த டாக்டர் போலவே ஒரு நல்லவன் கிடைச்சா போதும் நிம்மதியான வாழ்க்கை வாழலாம்” என நினைத்துக் கொண்டே நிரஞ்சனையே ஆசையாகப் பார்க்க அவனோ எதேச்சையாக அவள் பக்கம் திரும்பியவன் தன்னையே ஒரு மாதிரியாக ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த மீனாவை கண்டு முதல் முறையாக அவன் உள்ளத்தில் புது விதை முளைத்தது, அவன் உடலெங்கும் புதிதாக ஒரு ஹார்மோன் சுரப்பது போல உணர்ந்தான்

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

”என்ன இது என்னிக்கும் இல்லாம மீனா நம்மளை ஒரு மாதிரி பார்க்கறாளே, இந்த பார்வையும் அவளோட சின்ன சிரிப்பும் அழகாதான் இருக்கு, அதைப் பார்க்கறப்ப எனக்கு ஏன் உள்ளுக்குள்ள என்னென்னமோ பண்ணுது, என்னாச்சி எனக்கு அவளோட கண்கள் பார்த்து தைரியமா பேசுவேன் இப்ப அவள் பார்க்கற பார்வையே உள்ளுக்குள்ள என்னவோ செய்யுதே, இது என்ன புது உணர்வு இதுக்கு என்ன அர்த்தம்” என அவன் அமைதியாக அவளுக்கு கேட்காமல் லஷ்மியிடம் சொல்லிக் கொண்டிருக்க லஷ்மிக்கு என்ன புரிந்ததோ அவனிடம் இன்னும் அதிகமாக ஒட்டிக் கொண்டது. அதை விட்டுவிட்டு நேராக மீனாவிடம் வந்து நின்றான். அவனையே பார்த்துக் கொண்டிருந்த மீனாவிடம்

”என்ன மீனா என்னாச்சி உனக்கு, ரொம்ப நேரமா என்னையே ஏன் அப்படி பார்க்கற எனக்கு உள்ளுக்குள்ள என்னென்னவோ பண்ணுது, நான் நல்லாதானே இருக்கேன், என்னை பிடிக்கலையா உனக்கு” என அவன் சிரித்தபடியே டக்கென கேட்கவும் அவளோ சட்டென அவன் அப்படி பேசிவிட்டது ஏனோ அவளுக்கு வித்தியாசத்தை தர என்ன பதில் அளிப்பது தெரியாமல் தன்னையும் மீறி அவள் அவனைப் பார்த்து வெட்கப்பட்டு சிரித்துவிட்டு அங்கிருந்து வீட்டுக்குள் கன்னுகுட்டி போல துள்ளி துள்ளி ஓடிவிட்டாள். அவளது வெட்கத்தைக் கண்டவனுக்கு உடலில் சிலிர்ப்பு ஏற்பட

”அட மீனு என்னைப் பார்த்து வெட்கப்படறாளே, அப்படின்னா என்ன அர்த்தம் ஆனந்திக்கு அண்ணாவை பிடிச்சிருக்கு லவ் பண்றதால வெட்கப்படறா, இப்ப மீனாவும் என்னைப் பார்த்து வெட்கப்பட்டா இதுக்கு அர்த்தம் மீனா என்னை லவ் பண்றாளா, வாவ் இதை என்னால நம்பவே முடியலை அப்படின்னா மீனு என்னை லவ் பண்றா

வாவ்வ்வ்வ் ஐ அம் சோ லக்கி ஐ காட் ய ப்யூட்டிபுல் லைப் பார்ட்னர், தாங்க் காட் தாங்க்யூ சோ மச், இதுவரைக்கும் எனக்கு யார் மேலயும் லவ் வரலை ஏன் இம்ப்ரஸ் கூட ஆனதில்லை முதல் முறை என்னை இம்ப்ரஸ் பண்ணது மீனுதான், அவளோட பேச்சு, சிரிப்பு எல்லாமே எனக்கு பிடிச்சிருக்கு, இப்ப அவளுக்கும் என்னை பிடிச்சிருக்கு மீனுவையே நான் லவ் பண்ணப் போறேன் ஆமாம் ஐ அம் இன் லவ், ஐ லவ் யூ மீனு, ஐ லவ் யூ

இப்பவே நான் என் லவ்வை சொல்லிடனும் இல்லை வேணாம் இப்பதானே வெட்கப்பட்டு இருக்கா, அவள் மனசுல இருக்கறதை தெரிஞ்சிக்கிட்டே நாம முன்னேறி பேசலாம் அவசரப்பட்டு எதையாவது பேசி திரும்பவும் என்னை திட்டி விரட்டிட்டா என்னால அதை தாங்க முடியாது, ஒரே குழப்பமா இருக்கே

என்னைப் பார்த்து மீனா வெட்கப்பட்டது உண்மை ஆனா அது லவ்வா இல்லையான்னு தெரியலையே, மீனுவோட லட்சியங்கள் வேற, என்னோட எண்ணங்கள் வேற, மேபி இது லவ் இல்லாம வேறயா இருந்தா நோ நோ என்னால மீனுவை மிஸ் பண்ணிட முடியாது, அதே சமயம் அவளோட வெறுப்பையும் என்னால சம்பாதிக்க முடியாது, இப்ப நான் போய் லவ் ப்ரபோஸ் பண்ணி அவள் லவ் இல்லைன்னு என்னை ரிஜக்ட் பண்ணிட்டா வேணாம், அவளோட லவ் இல்லைன்னாலும் சரி அவளோட நட்பை என்னால விடமுடியாது

நான் அவளோட இருக்கறப்பதான் நிம்மதியா இருக்கேன், அவள் எனக்கு சந்தோஷத்தை கொடுக்கறா, என்னை சிரிக்க வைக்கறா, இதுதானே எனக்கு தேவை என்கூட இருக்கறப்ப அவளும் ஜாலியா இருக்காளே, இப்ப நாம என்ன செய்யலாம் ஒரே குழப்பமா இருக்கே

முதல்ல நம்ம லவ்வைப் பத்தி அண்ணாகிட்ட சொல்லனும் ஆமாம் அண்ணாகிட்ட சொன்னாதான் என் மனசுல இருக்கற குழப்பம் தீரும், அண்ணாகிட்ட ஐடியா வாங்கி மீனுகிட்ட பேசிப் பார்க்கலாம், இந்த அண்ணா இன்னுமா தூங்கறாரு, இத்தனை நாளும் கனவு கண்டு என்னை தொல்லை பண்ணாருல்ல, இப்ப அவர் கனவை நான் தொல்லை பண்றேன் என் லவ் பத்தி அவர்கிட்ட ஒப்பீனியன் கேட்டே ஆகனும், முதல்ல நான் மீனுவை லவ் பண்றேனா இல்லை இது வெறும் ஈர்ப்பான்னு நான் தெரிஞ்சிக்கனும்” என நினைத்தபடியே ஈஸ்வரனை தேடி ஓடினான் நிரஞ்சன்.

சில்சி வாசகர்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Episode # 09

Episode # 11

தொடரும்...

Go to Kaanum idamellam neeye story main page

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..

About the Author

Sasirekha

Sasirekha

Completed Stories
On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
+1 # RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 10 - சசிரேகாsasi 2019-01-18 18:49
hi friends adharv, mahi, madhumathi pongal eppadi pochu kalakala irundhatha
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 10 - சசிரேகாmadhumathi9 2019-01-17 05:27
wow :clap: nice epi sasi.romba interesting aaga poguthu kathai.adutha epiyai eppothu padippom endru irukku. :thnkx: 4 this epi. (y) :GL:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 10 - சசிரேகாAdharvJo 2019-01-16 21:12
:clap: :clap: interesting update ma'am (y) Idhu ena pudhu thirupam niranja idhu vendadha velai stay away from meen's steam apro ninga cardio consult panavendiyadha poidum :D
Sasi ma'am ninga sonna than ivaru ketparu but ningale ivara route mathi viduringale madam ji facepalm Ore confusion :o puzzle eppo solve pana poringa?? so indha veedu setup and dream-k etho connection irukku :Q:
waiting to read the next update. thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 10 - சசிரேகாmahinagaraj 2019-01-16 18:10
சூப்பர் மேம்..... :clap: :clap:
இப்போ தான் கதையில் சூடுபிடிக்குது.. செம இனி வரும் வாரங்கள் நல்லா போகும் போல... ;-)
:thnkx:
Reply | Reply with quote | Quote
Log in to comment

Discuss this article

INFO: You are posting the message as a 'Guest'


sasi's Avatar
sasi replied the topic: #1 03 May 2019 07:49
நன்றி
ராணி's Avatar
ராணி replied the topic: #2 02 May 2019 19:22
சசிரேகா உங்களின் அம்மா போல எண்ணி எழுதுகிறேன். உங்கள் கதை அருமையாக இருந்தது. உங்களின் எல்லா கதைகளையும் படித்திருக்கிறேன். உங்கள் கதை இயல்பாக உள்ளது. படித்ததும் புரிந்துக் கொள்ளும் அளவிற்கு எளிய நடையில் வார்த்தைகள் இருக்கிறது. இதை என் வீட்டில் சொல்லவும் என் குடும்பத்தில் உள்ள அனைவரும் (10 பேர்) உங்கள் கதைகளை விரும்பி படிக்கிறோம் எந்த இடத்திலும் படிக்கும் வரிகளோ வார்த்தைகளோ எங்களை கூச்சப்பட வைப்பதில்லை எந்தவித அலங்கார வார்த்தைகளும் அதிகப்படியாக இல்லை நடுத்தர குடும்பங்களில் வாழும் மனிதர்களின் வாழ்க்கை முறை பேச்சு வழக்கு வசதி வாய்ப்புகள் வீட்டில் புழங்கும் நடைமுறை பழக்க வழக்கங்கள் எளிய வாழ்க்கை முறை என நீங்கள் எழுதும் கதைகளின் எழுத்து நடை என் குடும்பத்தினருக்கு மிகவும் பிடித்திருக்கிறது வாழ்த்துக்கள் இப்படியே தொடர்ந்து எழுத எங்கள் அனைவரின் ஆசிர்வாதங்கள் - ராணியும் என் குடும்பத்தினரும்
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #3 01 May 2019 19:24
தஞ்சையில் உள்ள மீனுவின் பழைய வீட்டில்

ஈஸ்வரன் தர்னேந்திரன் பத்மாவதி முடிவைப் பற்றிய கதையை கூறி நிப்பாட்டவும் சுவாதி தன் அண்ணனிடம்

”அண்ணா ஈஸ்வரன் சொல்றதைப் பார்த்தா ரத்தினங்கள் பரதன்கிட்ட இருக்கும்னு தோணுது”

“அப்ப பரதன் யாரு” என பிரபு கேட்க உடனே நிரஞ்சனோ

”ஓ உங்களுக்கு தெரியாதா நான் சொல்லவா” என கேட்க மற்றவர்களும் சொல்லு என தலையாட்டவும் அவனும் தனக்கு தெரிந்த பரதன் பற்றிய விவரங்களைக் கூறினான்

*****

படிக்கத் தவறாதீர்கள்!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...m-neeye-sasirekha-25
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #4 24 Apr 2019 19:01
தஞ்சையில் உள்ள மீனாட்சியின் வீட்டில்

2 நாள் ஆராய்ச்சியின் முடிவில் ஈஸ்வரனும் நிரஞ்சனும் பெரிய உண்மையை கண்டுபிடித்தார்கள். அதன் படி ஈஸ்வரன் சொல்ல சொல்ல நிரஞ்சன் ஒரு பெரிய சார்ட்போர்டு ரெடி செய்தான். அதில் பல பல கோடுகளை கிளைகளாக வரைந்து முடித்தான்.

முழுவதும் வரைந்த பின் நிரஞ்சன் ஈஸ்வரனிடம் அதைக் காட்டினான்

”அண்ணா சரியா போச்சா பாருங்க” என அந்த சார்ட் போர்டை நீட்ட ஈஸ்வரனும் அதைப் பார்த்தான். அம்புக்குறிகளும் கோடுகளும் பெயர்கள் என பேமிலி ட்ரீ போல வரைந்திருந்தான். அதன்படி

***********

படிக்கத் தவறாதீர்கள்!!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...m-neeye-sasirekha-24
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #5 17 Apr 2019 20:19
சென்னை நோக்கிச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை

ராமேஸ்வரத்திலிருந்து கிளம்பிய ஒரு மினிவேன் சென்னையை நோக்கிச் செல்லும் ஹைவே ரோடில் வேகமாக சென்றுக் கொண்டிருக்க அதில் மயங்கிய நிலையில் ஈஸ்வரன் ஒரு சீட்டில் படுத்திருந்தான். அவன் விழுந்துவிடக் கூடாதென கயிறுகளால் அவனை சீட்டோடு கட்டி வைத்திருந்தார்கள் இருவர், அவர்கள் பார்க்கவே நடுத்தர வயது உடையவர்களாக இருந்தார்கள்.

”தூங்கிகிட்டே இருக்கானே எப்பதான் பேசுவான்” என அதில் இருந்த ஒருவர் கோபமாக கத்த அதற்கு மற்றவர்

*********

படிக்கத் தவறாதீர்கள்!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...m-neeye-sasirekha-23

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top