Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - சுஷ்ருதா – 05 - சித்ரா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - சுஷ்ருதா – 05 - சித்ரா

sushrutha

னது காரை அதன் வழக்கமான இடத்தில்  நிறுத்தவென திரும்பியபின்  சற்றென்று சுதாரித்து பிரேக் போடும்படி ஆனது சசிக்கு .

சட் .. முணு  முணு என்று கோபம் எழுந்தது மனதில் .

அவர்களின்   சுஷ்ருதா  கட்டத்தின்  பின்புறம்  புதிதாக வாங்கி சேர்த்த மனையில் ,கார் நிறுத்த  வசதி  இருந்தது .

அதில்  அங்கு வரும் டாக்டர்கள்  வண்டி நிறுத்த தனி இடம் இருந்தது ,அவற்றில்  வேறு வாகனம் வந்து நின்றுவிடாமல் காப்பது  காவலாளி  பொறுப்பு ,இது வண்டி ஓட்டி  வரும் டாக்டர்கள் ,இடம் தேடி நிறுத்த நேரம் செலவழிக்காமல்  இருக்கவென்ற  ஒரு ஏற்பாடு ,அதிலும் ஒரே இடத்தில்  மாறாது நிறுத்துவது சசியின் பழக்கம் .

அந்த இடத்தை அடை  காத்து வைத்திருப்பது மௌக்லியின் வழக்கம் ,கூர்க்கா இனமான அவன் ,சசியின் கார் வந்து நின்றவுடன் ,ஓடி வந்து கதவை திறந்து ,அவன் இறங்கியபின் ''சாப் ''என்று வணக்கம் வைப்பதும் வாடிக்கை .

சுஷ்ருதா  என்ற பேரை நிமிர்ந்து பார்க்கும் போது  ஏற்படும் அதே சந்தோஷம்  இந்த  சின்ன இதமான செய்கையில் சசிக்கு ஏற்படும் .

தினம் நடைபெறும் என்ற போதும் சில விஷயங்களை நம் மனம் எதிர்பார்க்கும் அல்லவா ,அது போல் இன்றும் கால்கள் தாமே இதுவரை கொண்டுவந்துவிட ,கடைசி நிமிடத்தில் தான் அங்கே வேறு ஒரு கார்  நிற்பதை பார்த்தான் .

அதனாலே ,வழக்கமான இதம் மறைய ,எழுந்த எரிச்சலுடன்  மௌக்லியை தேட ,அப்போதுதான் உரைத்தது அவனுக்கு ,வாசலில் நின்றதும் வேறு யாரோ என்பது .

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

பக்கத்து  காலி இடத்தில்  நிறுத்திவிட்டு இறங்கும்போது ,அந்த புது பையன் ஓடி வந்தான் .

இவன் முக சுளிப்பில்  இவன் கோபம் கண்டுக்கொண்டு ,அதன் காரணம் புரியாது நின்றான் .

''மௌக்லி எங்கே ''என சசி சுருக்கமாக வினவ 

''சார்  ,அவர் ஊருக்கு போயிருக்கார் ,ஏதோ  அவசரம் என்று ,அவர் இடத்தில்  நான் அவர் வரும்வரை  ..''என்று தங்கு  தடை இல்லாத தமிழில் சொல்ல 

இவன் இந்த ஊரை சேர்ந்தவன் என்றும் ,நட்பு அடிப்படையில் அவன் வரும்வரை இந்த பொறுப்பை பார்த்துக்கொள்கிறான்  என்பதை கண்டுகொண்டு ,இடம் பற்றிய விஷயத்தை  அவனுடன் விளக்க தேவையில்லை என்று முடிவு செய்துகொண்டு ,ஒரு சின்ன புன்னகையுடன் அவனை கடந்து நடந்தான் .

இருந்தும் முதலில் அவனை கவனிக்காதது உறுத்தியது ,எல்லாம் அவள் நினைவால் வந்தது ,கிட்டத்தட்ட எல்லா நேரமும்  அவள் நினைவு அடி  மனதில் ஓடும் என்றபோதும் ,இந்த ஆசுபத்திரி வளாகம் அவள் நினைவை கூடுதலாக கொண்டு வந்து கொட்டியது .

மறுபடி அதற்கும் எரிச்சல் மூண்டது மனதில் ..

எல்லோருக்கும் இனிய  நினைவுகள்  ஏற்படும் இடம் என்பது ,பார்க் ,கடற்கரை ,மால் என்று இருக்க இவனுக்கோ ,நினைவுகள் ,அது இனியதா ...,அதற்கும் முன்னே முறையானதா என்பதே இன்னும் விளங்காத நிலையில் ... ,ஏன் தான் மட்டும் இப்படி ஆனோம் என்றே தோன்றியது ..

ஆம் விசாரிக்க என்று சென்ற ஷிண்டே ,இன்னும் விவரங்களுடன் வரவில்லை ,அவனும் மருத்துவன் ,அதனால் அவனுக்கும்  வேலைக்கும் பொழுதுக்கும் சரியாக தான் இருக்கும் ,என்று புரிந்த போதும் ,தானே வந்து தலையை கொடுத்தவன் பொறுப்புடன் உடனே விசாரித்து சொல்லாதது ஏன்  என்று கோபம் எழ தான் செய்தது .

தலையை  உலுக்கி ,அதில் வண்டாய் குடையும் நினைவுகளை விலக்கி  ,பிரிஸ்க்காக  நடந்து உள்ளே சென்றான் .

ரிஷப்ஷனில் நடுநாயகமாக  வீற்றிக்கும்  கரு கரு பிள்ளையாரிடம் கவனம் சென்றது .

அவர் வழக்கம் போல் பிரெஸ்ஸாக ,கரு கரு மேனி மேல் பச்சை அருகு மாலையுடன் ,ஊதுபத்தி புகையின் பின்னே அட்டகாசமாய் அமர்ந்தபடியே அனைவருக்கும்  அருளி கொண்டிருந்தார் .

அவர் அலங்காரத்துக்கு பொறுப்பு ஒரு ஸ்டாப் என்றால் ,இந்த ஏற்பாட்டை  செய்தவர் அவன் அம்மா .

அங்கே வரும் நபர்களின் கலங்கிய மனதுக்கு ஒரு ஆறுதல் ,ஒரு அசையாத நம்பிக்கையை டாக்டர்களுக்கு அடுத்தபடியாக அவர் கொடுத்தார் ,அல்லது டாக்டர்களுக்கு மேலான என்று சொல்லவேண்டுமா ..

அப்படிதான் வைத்துக்கொண்டு ,அவரிடம் தன்  பிரச்சனையை தீர்த்து வைக்க மானசீகமாய் கூறியபடி ,தனதறைக்கு சென்றான் .

நுழைந்து இருக்கையில் அமர்ந்து ,அன்றைய  நோயாளிகளின் பெயர் வரிசையை பார்வையிடுமுன் அவனது செல் அழைத்தது .

பேசியது  அவன் தந்தை ,அவருடைய  நண்பரும் ,அவருக்கு  தேவையென்றால் ஆலோசனை கூறும் ,சற்றே வயது முதிர்ந்த டாக்டர் பாலாக்கு  ,இப்போது கொஞ்ச நாட்களாக உடம்பு சரியில்லை .

அவரது இரண்டு மகன்களும்  மருத்துவம் படிக்கவில்லை ,படித்தது வேறு துறைகள் ,இருப்பதும் வெளிநாட்டில் ,ஆக  அவருக்கு இவன் மேலும் ,அண்ணன்  மேலும் மகனை போன்ற பாசம் உண்டு ,அதிலும் இவனிடம் சற்றே  கூடுதலாக ..

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

About the Author

Chitra

Like Chitra Kailash's stories? Now you can read Chitra Kailash's full novels at Chillzee KiMo. No wait time, No ads, No restrictions!!!

Completed Stories
On-going Stories
  • Sushrutha (Updated fortnightly on Friday Morning)
Add comment

Comments  
# RE: தொடர்கதை - சுஷ்ருதா – 05 - சித்ராsaaru 2019-01-23 07:44
Nice and cute
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சுஷ்ருதா – 05 - சித்ராmahinagaraj 2019-01-19 13:58
சூப்பர் மேம்... :clap: :clap:
சசிக்கு மட்டும் இல்ல எனக்குமே ரயில்வண்டி ஒடுது உங்க எழுத்தின் அருமையால்.. :clap:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சுஷ்ருதா – 05 - சித்ராAdharvJo 2019-01-18 21:23
Sasi sathan-ndra range la mudichitingale ma'am :D doc rombha thivjrama irukare 😍😍 anyway interesting update chitra ma'am 👏👏👏I liked sasi's erichal+virakthiyana reaction :D pavamaga irundhalum padika nala irundhadhu 👌 avaroda heart beat mathiri engaludhum rail mathiri running.... waiting to see what happens next. Thank you and keep rocking!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சுஷ்ருதா – 05 - சித்ராmadhumathi9 2019-01-18 06:59
:eek: enna ippadi nadakkuthey.doctor enna seiya pogiraar? :Q: waiting to read more. (y) :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top