(Reading time: 8 - 15 minutes)

தொடர்கதை - தாரிகை - 26 - மதி நிலா

series1/thaarigai

வெள்ளமயம்..!! புதுவருடத் துவக்கத்தைக் கொண்டாடுவதுபோல் பள்ளியின் மைதானதம் முழுவதிலும் வெள்ளமயம்..!!

ததக்கா பிதாக்காவென நடந்து செல்லும் கே ஜி குட்டீஸ்களும்.. வெள்ளப்பள்ளத்தைத் தாண்ட முயன்று உடைகளில் சேற்றைப் பூசிக்கொள்ளும் சிறுவர்களும்.. அன்னநடையிட்டு பின் பெர்பெக்ட்டாக நடந்து செல்லும் சிறுமிகளும்.. காணவே அத்தனை அழகாய்..!! எல்லாம் வசந்தகாலத்தின் கனவுகள்..!!

நிஷாவின் கண்கள் முழுவதும் புதிதாய் அனைத்தையும் பார்ப்பதுபோலவே ஒருவித சுவாரஸ்யத்துடன் பார்த்தபடி வர.. வெளியே தன்னை தைரியமாய் காட்டியபடி உள்ளுக்குள் தயக்கத்துடன் தாரிகை..!!

“அக்கா.. சிக்ஸ்த் கிளாஸ் ரூம் இந்த ப்ளாக்னு போட்டிருக்கு.. நம்ம நடந்துட்டே இருக்கோம்..”, தனது தயக்கத்தில் நிஷாவை மறந்திருந்தாள் தாரிகை..!!

“சாரி நிஷ்.. ஏதோ யோசனையில நடந்துட்டேன்.. வா.. உன் கிளாசுக்குப் போகலாம்..”, என்றபடி நிஷாவின் கைகளை அவள் பிடித்திருக்க..

“இல்லக்கா வேணாம்.. நான் என் கிளாசுக்கு போயிப்பேன்.. முதல்ல உங்க கிளாசுக்குப் போகலாம்..”, தாரிகையின் முகத்தைப் பார்த்தபடி நிஷா சொல்ல.. மறுப்பாய் அசைந்திருந்தது தாரிகையின் தலை..

“நீதான் இந்த ஸ்கூலுக்குப் புதுசு.. நானில்லை..”, என்றவள் நிஷாவுடன் சிக்ஸ்த் பி செக்ஷனை நெருங்கிட.. அவர்களுக்கு முன்னே அங்கு வந்திருந்தார் அந்தக் கிளாசின் கிளாஸ் டீச்சர்..!!

“மே ஐ கம் இன் மேம்..”, தாரிகையும் நிஷாவும் குரல் கொடுத்திட.. அந்த மிஸ்ஸிடம் வாங்க என்பதுபோல் ஒரு தலையசைப்பு..!!

“மேம்.. திஸ் இஸ் நிஷாந்த்.. மை ப்ரதர்.. நியூ ஜாயினீ..”, நிஷாந்த் (எ) நிஷாவை அந்த ஸ்டாபிடம் அறிமுகப்படுத்தியிருந்தாள் தரண்யன் (எ) செந்தாரிகை..!!

ஆம்.. இன்னும் அவர்கள் இருவரும் நிஷாந்த் மற்றும் தரண்யன்தான்..!! இன்னும் இருவரும் அபீஷியலாக நிஷாவாகவோ செந்தாரிகைவோ மாறிடவில்லை..!! காரணம் அப்பொழுது திருநங்கைகளுக்கான சட்டதிட்டங்கள் என்று எதுவுமில்லை நம் நாட்டில்..!! (பாலினம் என்ற இடத்தில் அதர்ஸ் என்றவொன்று 2015 க்குப் பிறகே கொண்டுவரப்பட்டது) சுமார் இருபது லட்சத்திற்கு மேல் திருநங்கைகள் நமது நாட்டில் வாழ்ந்துகொண்டிருந்தாலும் இன்னும் அவர்களுக்கான உரிமைகள் வழங்கப்படவில்லை என்பதே உண்மை..!!

“ஒகே தரண்யன்.. நான் பார்த்துக்கறேன்..”, என்றவர் நிஷாவை ஒரு பெஞ்சில் அமர்ந்திடச் சொல்ல.. தாரிகையைப் பார்த்து தலையசைத்தவள் அந்த இடத்தை ஆராய்ந்தபடியே அமைதியாய் அமர்ந்துகொண்டாள்..!!

“தாங்க்ஸ் மேம்..”, என்று அவரிடம் விடைபெற்ற தாரிகைக்குள் இனி என் கிளாசுக்குப் போகணுமே என்ற யோசனை..!!

கால்கள் என்னவோ அத்தனை பின்னக்கொண்டதுபோல் நகரவே முடிந்திடவில்லை அவளால்..!!

அனைவரும் என்ன சொல்வார்களோ.. என்ன கேலி செய்வார்களோ என்ற தடுமாற்றம் மனதை வியாபிக்க.. மரத்திற்கடியில் போடப்பட்டிருந்த பெஞ்சில் அப்படியே அமர்ந்துவிட்டாள் அவள்..!! வெற்றியின் அறிவுரைகள் எல்லாம் எங்கோ பறந்தோடிவிட்டிருந்தது..!!

“தரண்யா.. என்னடா இங்கயே உட்கார்ந்துட்ட..??”, கதிர்தான்.. அப்பொழுதுதான் பள்ளிக்குள் நுழைந்திருந்தான் அவன்.. தரண்யன் தனியாக அமர்ந்திருக்கவும் தனது வாட்சைப் பார்த்தவன்.. சமயமாகிவிட்டதை உணர்ந்து அவனிடம் விரைந்திருந்தான்..!!

“ஹான்.. ஒண்ணுமில்லை கதிர்..”, கதிரைக் கண்டதும் முதலில் அவளுக்குள் ஏற்பட்டது அதிர்ச்சியே.. அதுவும் அவன் தன்னுடன் சாதாரமாக பேசுவும் தடுமாறியேவிட்டான்.. இவனுக்கு என்னைப் பற்றி ஒன்னும் தெரியலையா.. இல்லை.. தெரியாத மாதிரி நடிக்கிறானா என்ற ஆராய்ச்சியும்..

“டேய்.. என்னடா இப்படி முழிக்கற.. வா போகலாம்..”, என்று கடுப்பாய் அவன் மொழிந்திட.. மௌனமாய் கதிரைப் பின் தொடர்ந்திருந்தாள் தாரிகை..

தன்னைப் பார்ப்பதும் வேறெங்கோ கண்களைப் பதிப்பதுமாக வந்த தாரிகையின் நிலை புரிந்துதான் இருந்தது கதிருக்கு..!! இருந்தும் அவளைப் பற்றி தனக்குத் தெரியும் என்பதை கான்பக்கவில்லை கதிர்..!! என்னவோ அது தனது தோழனை வேதனைப்படுத்தும் என்று தோன்றிட.. வெகு சாதரமாகவே நடந்துகொண்டான் அவளிடத்தில்..!!

அவனின் மாற்றங்கள் மற்றவர்களுக்கு அசரல் புரசலாக அனைவருக்கம் இந்நேரம் தெரிந்திருக்கும் என்பதால் என்னவோ அவளை அனைவரிடமிருந்தும் பாதுக்காக வேண்டும் என்ற எண்ணம்..!!

தனது கிளாஸ் ரூம் நெருங்க நெருங்க தாரிகையின் இதயத்தில் லப்டப் வெளியே கேட்பதுபோல்..!! ஆமை வேகத்தில் நடந்தாலும் ஐந்து நிமிடத்திற்குள் தங்களது கிளாஸ் ரூமை அடைந்திருந்தனர் இருவரும்..!!

தாரிகையை முன்னே விட்டு கதிர் நடக்க.. அப்படியே நின்றுவிட்டாள் தாரிகை..!! எங்கே அன்றுபோல் இன்றும் தன்னை யாராவது படம் வரைந்துவிடுவார்களோ என்ற நினைப்பில்..!!

“தரண்யா.. வழிய மறச்சிட்டு நிக்காம உள்ள போடா..”, கதிர் உசுப்பிட.. மெல்ல நுழைந்திருந்தாள் தாரிகை..!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.