Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 8 - 15 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
Pin It

தொடர்கதை - காதல் இளவரசி – 25 - லதா சரவணன்

kadhal ilavarasi

மிகவும் சஸ்பென்ஸான ஒரு திரைப்படத்தின் கடைசிக் காட்சியில் மூச்சைப் பிடித்துக்கொண்டு சீட்டின் கடைசி நுனியில் அமர்ந்து கொண்டுபார்ப்பார்களே அதேபோல் தான் அந்த சப்மரைனில் இருந்த நால்வரின் நிலையும் தற்போது இருந்தது. ஏற்கனவே ஒரு ராட்சத மீனின் டெண்டகன்ஸ்ஸால் சற்றே பாதிக்கபட்டு இருந்த சப்மரைன் இந்த திமிங்கலத்தின் பிடியில் மாட்டினால் அவ்வளவுதான்.

உத்ராவின் உடல் நடுங்கியது பரத்தின் கரங்களுக்குள் இன்னும் ஒண்டிக்கொண்டாள். அவனின் பிடியும் இறுகித்தான் போயிருந்தது. இறப்பிலும் பிறப்பிலும் நானும் உன்னோடுதான் என்று உத்ராவிற்கு உணர்த்துவதைப் போல இருந்தது அந்த அணைப்பு அந்த அணைப்பிலேயே பிரியன் ஏற்படுத்திய சஞ்சலம் மற்ற பெண்களுடன் பரத்தின் பழக்கம் எல்லாமே சாம்பல் ஆனதைப் போலயிருந்தது, அவன் கைகளில் வெப்பம் அவனுக்கு பரத்தின் காதலை உணர்த்தியது.

ஏஞ்சல் அவர்களைத் திரும்பிப் பார்த்தாள் அவர்களின் பிணைப்பு அவளுக்குள்ளும் ஒரு சலனத்தை வெளிப்படுத்தத்தான் செய்தது ஆனால் அலெக்ஸின் கவனம் திமிங்கலத்திடம் இருந்து எப்படி தப்பிப்பது கூடிய வரையில் சப்மரைனின் வேகத்தை அதிகப்படுத்திக் கொண்டே சென்றான்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

சில சப்தம் ஏஞ்சலினாவைக் கலவரப்படுத்திட வைத்தது அவர்கள் அடர்ந்த பவளப்பாறைகளுக்குப் பின்னால் பதுங்கிக்கொண்டார்கள். ஆனால் இது தற்காலிக பாதுகாப்பு தான்

அலெக்ஸ் நாம் முன்பை விடவும் தற்போது அதிக பாதிப்பில் இருக்கிறோம் அலெக்ஸ்

என்ன சொல்றே ஏஞ்சல் ?

எனக்கு திமிங்கலத்தினோட பாஷைகள் தெரியும் அது இப்போ தன்னோட இணையைக் கூப்பிடுது அந்த அதிர்வலைகளைக் கேட்டு இங்கே ஒன்று இரண்டு இல்லை ஒரு திமிங்கலக் கூட்டமே வரலாம் ஏசோனார் ஏ போன்ற அலைவரிசையைக் கொண்டு அது தனக்கு உதவி கோருகிறது.

அவர்களை விரட்டி வந்த திமிங்கலம் அதே இடத்தில் நின்று கொண்டு இருந்தது அதன் பக்கத்தில் இருந்து இரத்தகசிவு ஏற்பட்டது.

பரத் என்று கூக்குரலிட்டாள்

அங்கே பாருங்க....!

உத்ரா காட்டிய இடத்தில் ஏஞ்சலினா சொல்லியதைப் போல திமிங்கலத்தின் கூட்டம் ஒன்று அவர்களின் சப்மரைனைக் கடந்து சென்றது. கடவுளே இதென்ன கொடுமை..

பயப்படாதே உத்ரா திமிங்கலத்திற்கு ஒரு அதிசய குணம் உண்டு நம்மை விரட்டிக் கொண்டு வந்த அந்த திமிங்கலம் இப்போது பிரசவ வேதனையை அனுபவித்துக் கொண்டு இருக்கிறது . சாதரணமாக திமிங்கலத்தின் பிரசவ காலம் 12 முதல் 17 மாதங்கள் வரை ஆகும். பிரசவ காலத்தில் மற்ற திமிங்கலங்கள் கர்ப்பிணியை காப்பாற்றும் பொருட்டு நர்ஸ் போல சுற்றி நின்று உதவி புரியுமாம்.

ஏஞ்சலினா சொன்னதைப் போலவே வலி தாங்க முடியாத திமிங்கலத்தைச் சுற்றி ஒரு 20 அடி தொலைவில் மற்ற திமிங்கலங்கள் வட்டமிட்டு நின்றுகொண்டன. அரைவட்டம் அடித்த திமிங்கலம் சப்தம் எழுப்பியபடியே உடலை அங்குமிங்கும் அசைத்துக் கொண்டு உதிரத்தை வெளியேற்றியபடியே குட்டிகளை ஈன்றது. மொத்தம் நான்கு குட்டிகள் ஒவ்வொன்றும் 25அடி நீளமும் ஒரு யானையின் எடையும் கொண்டு இருந்தது. அந்தத் தாய் திமிங்கலம் குட்டிகளை ஈன்றவுடன் மெல்ல ஆசுவாசப்படுகிறது தன்னுடலில் ஒட்டிக்கொண்டு கிடந்த அந்த கடைசிக்குட்டியின் தலைப்பாகத்தை வெளியிட மிக நீண்ட நேரம் போராடியது.

சப்மரைனில் உள்ள நால்வரும் அதை வைத்த கண் வாங்காமல் பார்த்தார்கள். பிரசவம் என்பது எல்லா பெண் பிறப்புகளுக்கும் வலி மிகுந்ததுதான் போலும் பெண்களின் நிலைமையையே வலியைத் தாங்குவது தானே !

அனைவரின் நினைவிலும் தன்னையும் அறியாமல் அவர்களைப் பெற்றவர்கள் நின்றார்கள். மானசீகமாக அவர்களுக்கு நன்றி செலுத்தினார்கள் இளையவர்கள். குட்டியை ஈன்றதும் அதிக ரத்தப்போக்கு கொண்ட திமிங்கலத்தை செவிலியாய் தாங்கிய மற்ற மீன்கள் பாதுகாப்பாய் அழைத்து செல்ல பிறந்த குட்டிகளை அழைத்து கொண்டு சில மீன்கள் அவைகளுக்கு நீருக்கு மேலே நீச்சல் கற்றுக்கொடுக்கத் தொடங்கியது. கடலுக்கு அடியில் இப்படியொரு வித்தியாசமான உணர்ச்சி கலந்த நிகழ்வு நடக்கும் என்று அவர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லையென்றாலும் நடந்து விட்ட நிகழ்வு அவர்களுக்கு சொல்லவொண்ணா மாற்றத்தைத் தந்தது.

கனத்த மெளனத்தை அவர்களிடம் நாட்டியமாடச் செய்தது. அதை முதலில் கலைத்தவள் ஏஞ்சலினா தான்

 •  Start 
 •  Prev 
 •  1  2 
 •  Next 
 •  End 

About the Author

Latha Saravanan

Latest Books published in Chillzee KiMo

 • Ennodu nee unnodu naanEnnodu nee unnodu naan
 • Enna periya avamanamEnna periya avamanam
 • KaalinganKaalingan
 • Kanavu thaan ithuvum kalainthidumKanavu thaan ithuvum kalainthidum
 • Nee ennai kadhaliNee ennai kadhali
 • Parthen RasithenParthen Rasithen
 • Serialum CartoonumSerialum Cartoonum
 • Vallamai thanthu viduVallamai thanthu vidu

Completed Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - காதல் இளவரசி – 25 - லதா சரவணன்madhumathi9 2019-01-27 16:53
wow nice epi.thimingilathin pirasavathai neril paarthathu polirunthathu ungal varnanai. (y) :thnkx: 4 thisepi. :clap: waiting to read more. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதல் இளவரசி – 25 - லதா சரவணன்AdharvJo 2019-01-27 15:35
Fish fry prawn fry mattum podhuma Padmini ji :D Nice to see her back :dance: Eppadiyo kapttriviturgal :clap: :clap: viruvirupana update ma'am (y) Shark oda information was interesting and gang-oda vandhu attack panumn ninaichen this was :cool: Alex and Angel neriya sagasam panuvangan irundhen :yes: Look forward to see what happens next. Thank you and keep rocking. :GL: for the finale.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதல் இளவரசி – 25 - லதா சரவணன்saaru 2019-01-27 08:25
Woooow laddu...
Blue oda delivery sequence vachi kapathreengaga..awesome
Ipa satyavoda full history paddu moolam telinjirukan
Barath oda next moov enna innum abathu edum iruka
Reply | Reply with quote | Quote
# KIMala 2019-01-27 08:07
Hi Latha
Story nalla irrukku. But sequence illadha mathiri irrukku. Thimingalam delivery information interesting.
Reply | Reply with quote | Quote

🆕 Latest Updates 🆕

📈 Trending @ Chillzee 📈

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
NKNI

MOVPIP

KEK

KAKK

VEE

UIP

NPM

SiRa

NMK

EMAI

UANI

UKIP

VKPT

EEIA

EEKEE

KMEE

MVK

UKAN

KKK

AV

VM

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top