(Reading time: 8 - 15 minutes)

அலெக்ஸ் நமக்கு அருகாமையில் ஒரு சிக்னல் கிடைத்ததாக சொன்னீர்களே அவர்கள் கூட உதவி கேட்டதாக முதலில் அவர்களைக்காப்பாற்றலாம் என்று சிக்னல் வந்த இலக்கை நோக்கி அடைந்தார்கள்.

சற்று அருகாமையில் நடந்த நிகழ்வு என்றாலும் பத்மினியில் திமிங்கத்தின் உணர்வுப் போராட்டங்களைப் பார்க்க முடியவில்லை ஆனால் அவளின் கண்களில் கூட்டம் கூட்டமாக சென்ற மீன்கள் மட்டும் பட்டன. அதிர்ச்சியும் பயமும் ஒருசேரத்தாக்க அவளின் இருப்பிடம் நோக்கி ஒரு சப்மரைன் வேகமாக வந்தடைந்தது அதிலிருந்து வருபவர்கள் பரத் உத்ரா என்று அறிந்ததும் தன் பசி தாகத்தைக் கூட மறந்து உற்சாகமடைந்தாள் பத்மினி.....!

த்யா தன்னுடைய அந்தமான் பயணம் குறிந்து நிக்கோலஸிடம் பேசியிருந்தான்.

எனக்கென்னமோ உங்க மேல நம்பிக்கை கொஞ்ச கொஞ்சமா குறைஞ்சிட்டு வருது சத்யா. . .

நிக்கோலஸ் நடக்கிறது என்னன்னு எனக்கும் புரிபடலை அதை தெரிந்து கொள்ளத்தானே நானே நேரில் போறேன். சென்றமுறை நம்முடைய புரெஜெக்ட்டில் எந்த குறையும் வரவில்லையே இப்போது சிறு தவறு நடந்திருக்கிறது ப்ரியனின் நிலை என்னவென்றே தெரியவில்லை அதனால் தான் நானே நேரில் செல்கிறேன். ஏதேனும் தொழில் நுட்பக் கோளாறாகத்தான் இருக்கும் தயவு செய்து அமைதியாய் இருங்கள் நிக்கோலஸ்

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

எப்படி என்னால் அமைதியாய் இருக்க முடியும் சத்யா நீ என் ஒருவனுக்கு பதில் சொல்லிவிட்டால் போதும் ஆனால் நான் அப்படியில்லை என்மேலிடத்திற்கு தகவல் சொல்லவேண்டும் எந்தக் காரணம் கொண்டும் கனிமவளங்களின் வருகை நிற்கக் கூடாது என்றுதானே நமக்குள் உடன்பாடு அதில் குறையென்றால் நான் எப்படி பதில் சொல்ல முடியும். ஸாரி டூ சே திஸ் சத்யா இன்னும் ஒரு நாளைக்குள் நீ இந்த சிக்கலை சீர்ப்படுத்தவில்லையென்றால் நான் நமது உடன்படிக்கையை கேன்சல் செய்ய வேண்டிவரும் அதுமட்டுமில்லை நான் கொடுத்த பணத்தையும் திருப்பித் தர வேண்டும். எங்களுக்கு எதிராக நீ செயல்படுகிறாய் என்று எங்கள் கும்பல் மூலம் தண்டனைக்கும் ஆளாகவேண்டும். எது சிறந்தது என்று நீயே முடிவு எடுத்துக்கொள்.

நிறுத்துங்கள் எப்போ என் மேல உங்களுக்கு நம்பிக்கை போய் விட்டதோ இனி பேசிப் பிரயோசனம் இல்லை நான் அந்தமான் சென்று பார்த்துவிட்டு உண்மையே சொன்னாலும் நீங்கள் என்னை நம்பப்போவது இல்லை பேசாமல் என்னோட நீயும் கிளம்பி விடு நிக்கோலஸ் உண்மை நிலையை நீயே நேரில் வந்து பார்த்துவிட்டால் என் மேல் உள்ள சந்தேகம் உனக்கு தீர்ந்து விடும் அல்லவா ? அவர்கள் இருவரும் கிளம்பத் தயாரானார்கள்.

சத்யாவிற்கு மிகப்பெரிய அதிர்ச்சி அங்கே காத்திருக்கப் போகிறது என்பதை அறியாமலேயே ?!

த்மினி தன் கண்களுக்கும் முன் வைக்ப்பட்ட அத்தனை உணவையும் ஒரு நொடியில் முடித்திருந்திருந்தாள். அத்தனை பசி உத்ராவின் பாசமான வருடலில் இன்னும் இரண்டு பிஷ்பிரை சொல்லேன் என்று கண்ணடித்தாள்.

பாவம் பத்மினி உன்னைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறவன் செத்தான். இப்படியா சாப்பிடுவே ?

உத்ரா நீயும் இப்படித் தானா இல்லை என்று பரத் கிண்டலடிக்க பத்மினி ஸ்பூனைத் தூங்கி அவன் மேல் எரிந்தாள்.

அந்த கவலை உனக்கு ஏன் பரத் ? உனக்குத்தான் ஆள் இருக்கில்லை இப்போ எனக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்ததும் மட்டுமில்லை நான் உனக்கு செய்த உதவிக்கு காலம்பூரா எனக்கு சோறு போட்டுத்தான் ஆகணும்.

அதுக்கு நான் என் சொத்தையே எழுதி தரணும்

என்ன பரத் இது ?! அவ தன்னோட உயிரைப் பயணம் வைச்சு இந்த சதித் திட்டத்தை தகுந்த ஆதாரத்தோட கண்டுபிடிச்சிருக்காள் அதற்கு பாராட்டவேண்டாமா ? உங்கள் கண் முன்னாலேயே இத்தனை பெரிய அநியாயம் நடந்திருக்கிறது நீங்க கண்மூடி இருந்தீங்களே அநாவசியமா அவளை குறை கூற வேண்டாம்

நான் ஒண்ணும் உன் தோழியைச் சொல்லலைம்மா எம்மா சாப்பாட்டு ராமி இன்னும் எறா ப்ரை சொல்லவா ?

வேண்டாம் நைட்டுக்குப் பார்த்துக்கலாம் பரத் அந்த இரண்டு பேர் எங்கே

ஏஞ்சலினாவையும். அலெக்ஸ்ஸையும் கேட்கிறாயா அவர்கள் இங்கே வந்தது காணாமல் போன விமானத்தில் பயணித்த விஐபியை அவரைச் சேதராமில்லாமல் கண்டுபிடித்தாகிவிட்டது இல்லையா ? கண்டுபிடிக்கப்பட்டவர் அரசியல்வாதி மைக்கும் மீடியாவும்தானே அவர்களின் வளர்ச்சியைத் தீர்மானிக்கிறது. இன்னும் ஒருவாரத்திற்கு அவர்கள் தான் டிவியோட ஹாட் நியூஸ் பிரஸ் மீட் நடக்குது முடிந்ததும் வந்திடுவாங்க

நீ ரொம்பவும் களைச்சி போயிருக்கே கொஞ்சநேரம் ஓய்வெடு மத்ததை அவர்கள் வந்ததும் பேசிக்கலாம் என்று பரத் சொன்னதும் பத்மினியை அழைத்துக் கொண்டு உத்ரா சென்றுவிட அடிப்பாவி காதலனை அம்போன்னு விட்டுட்டுப் போயிட்டாளேன்னு போலியாய் வருந்தத் தொடங்கினான் பரத்

Episode # 24

Episode # 26

Go to Kathal Ilavarasi story main page

{kunena_discuss:1201}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.