(Reading time: 7 - 13 minutes)

தொடர்கதை - காதல் இளவரசி – 24 - லதா சரவணன்

kadhal ilavarasi

காணாமல் போன விமானத்தின் பாகங்கள் சிலது கடலுக்கு மேற்குப் பகுதியில் உள்ள கடற்கரையில் கரை ஒதுங்கியிருக்கிறது அது ஒரு தனிவிமானம் அல்ல என்றாலும், முக்கியமானவர்கள் செல்லும் போது ஏதேனும் அசம்பாவிதம் நடந்து விட்டால் ஒரு சிறு ராசாயன குடுவைப் போன்ற அறைகலன் ஒன்றில் அவர்களை காப்பாற்றும் சுரங்க அறை வசதி கொண்டது. அப்படிப்பட்ட விமானத்தில் தான் அவர்கள் பயணித்தது. எதிர்பாராவிதமாக இந்த சூழலில் நிச்சயம் விமானி அதைப் பயன்படுத்தியிருப்பார் மேலும் சில பாகங்கள் கடல் பகுதியில் ஒதுங்கியிருப்பதால் அந்த ரகசிய குடுவை அறை பயன்படுத்தப்பட்டு இருக்கும் என்பது நிச்சயமாகிப் போனது அதன் குறியீடு வெகு சமீபத்தில் இருக்கிறது என்பதை அலெக்ஸ் உணர்ந்திருந்தான் அதை ஏஞ்சலினாவிற்கும் பார்வையால் உணர்த்தினான். 

வெற்றிகரமாக நாம் அடைய வேண்டிய இலக்கை நெருங்கிக்கொண்டு இருக்கிறோம் என்றார் அலெக்ஸ்,

இங்கிருந்து சற்றே தொலைவில் தான் ஒரு சிக்னல் கிடைக்கிறது எனக்கென்னவோ சீக்கிரம் அந்தக் குடுவையை கவனித்து விடுவோம் என்றுதான் தோன்றுகிறது. சப்மரைனில் பர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் எல்லாம் இருக்கிறது இல்லையா ஏஞ்சல் அவர்கள் என்ன நிலையில் இருப்பார்கள் என்று தெரியவில்லை, அவர்களுக்கு நமது உதவி உடனே தேவைப்படலாம், எல்லாம் இருக்கிறது என்று தலையசைத்தாள் ஏஞ்சல்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அந்த நால்வரும் சப்மரைனுக்குள் புகுந்தார்கள்.

சீக்கிரம் நம்மிடம் நேரம் குறைவாகத்தான் இருக்கிறது, அதற்குள் அந்த அரசியல்வாதியையும், பத்மினியையும் காப்பாற்ற வேண்டும்.

அலெக்ஸிடம் ஒரு தீர்மானம் ஏற்பட்டதைப் போல குரல் ஒலித்தது. பத்மினியின் மறைவு பூட்டிவைத்திருந்த கதவை தாண்டி, ப்ரியன் தப்பித்தது, பரத்தின் அருகாமையில் தோன்றிய காதல், அதைப்பற்றிய ஏதுவும் யோசிக்க முடியாமல் அவளின் அத்தனை நினைவுகளையும் பத்மினி ஆக்கிரமித்திருந்தாள்.

ஏறக்குறைய பரத்தின் நிலைமையும் அப்படித்தான் இருந்தது.

ஏஞ்சலினா சப்மரைனை இயக்கத் தயாராயிருந்தாள். தங்களின் கப்பலில் சப்மரைனின் செயல்களைக் குறித்துக்கொள்ளும் அட்மிரலுடன் தொடர்பு கொண்டு வேகத்தைக் கூட்டத் தொடங்க கடலைக் கிழித்துக் கொண்டு சர்ரென்று அதிவிரைவாக பாய்ந்தது அந்த வாகனம்.சுற்றிலும் நீர்குமிழிகள் பணிப்பெண்ணாய் துணைக்கு வர சப்மரைனின் விளக்குகளின் வெளிச்சத்தைப் பரப்பிக்கொண்டு வந்தது. 

அலெக்ஸ் ஏதோ சமிக்ஞை செய்து ஏஞ்சலினாவினை உஷார் படுத்தினான்

ஆனால், ஏஞ்சல் அது தேவையா என்பதைப் போல பார்த்தாள்

வேறு வழியில்லை என்பதை உறுதிப்படுத்திய அலெக்ஸ் மரைனின் வேகத்தை அதிகப்படுத்திட,

ஏஞ்சலினா பதறியபடி அலெக்ஸ் இப்போ இந்த தேவையில்லாத பவரை நீங்க எடுத்துக்கிறதால நம்மோட டெம்பரேச்சரை யாராலும் கணிக்க முடியாது. சில நேரத்தில் கண்ட்ரோல் ரூமில் நம்மோட இணைப்பு கூட துண்டிக்கப்படலாம். உத்ராவுக்கும், பரத்துக்கும் இந்த பயணத்தில் பழக்கம் இருக்கான்னும் தெரியலை, லைட் சப்போட் அதிகப்படியான சூட்டை கொடுக்கும் இதனால் புதிய நபர்களுக்கு மயக்கம் வர வாய்ப்பு இருக்கு,

அவள் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே உத்ராவின் பல்ஸ் ரொம்பவும் வீக்கா இருக்கிறது என்று பரத் சொன்னான். 

எஞ்சலினா அதற்கான காரணத்தை சொல்லி அவளுக்கு சற்று ஆக்ஸிஜன் லெவலை அதிகப்படுத்தினால் எந்த ஆபத்தும் வராது என்று பதில் கூறிவிட்டு அலெக்ஸிடம் சேர்ந்து கொண்டாள்.

பரத்திற்கு உத்ராவைப் பற்றிய கவலையோடு அலெக்ஸின் செயல்பாடுகள் சந்தேகத்தை கொண்டு வந்தது, அத்தோடு தேவையில்லாமல் இவர்களோடு வந்து சேர்ந்து கொண்டோமோ என்று தவிப்பாய் உணர்ந்தான் பரத். அலெக்ஸ்ன் பார்வை வெகு உன்னிப்பாய் கடலை ஆராய்ந்தது.

த்மினி கடைசியாய் ஒருமுறை அந்த அலைதொடர்பை உயிர்ப்பித்தாள் அடக்கடவுளே இங்கு வந்து சேர்ந்ததில் இருந்து யாருக்கும் தகவல் கூட கொடுப்பது இல்லை, ப்ரியன் தான் இங்கிருப்பதை அறிந்து வந்ததைப் போல பரத்திற்கும் உத்ராவிற்கும் தெரிந்திருக்கவில்லையே அவர்கள் நிச்சயமாய் என்னைத் தேடிக்கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் இப்படி ஒரு சுரங்கம் இருப்பதே அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லையே தகவல் தொடர்புபகள் ஏதோ ஒரு காரணத்தினால் செயலிலந்து போயிருக்கிறது. அந்த சாதனங்கள் ஒவ்வொன்றையும் ஒயர்களை மாற்றி மாற்றி முயற்சிக்க சட்டென்று உயிர்பெற்றது அங்கிருந்து ஒரு சிக்னல் கிடைக்க அருகில் ஏதோ உதவி என்று மீண்டும் முயற்சித்தாள் பத்மினி

ஞ்சல் எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு, 

என்னாச்சு அலெக்ஸ்....

இங்கே இரண்டு சிக்னல் காட்டுது.... இரண்டுக்கும் இடைவெளி சில 15 அல்லது 20 மீட்டர்தான் இருக்கும்.

பேசிக்கொண்டு இருக்கும் போதே அவர்களின் சப்மரைன் ஏதாலோ தாக்கப்பட்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.