(Reading time: 11 - 22 minutes)

தொடர்கதை - தாரிகை - 25 - மதி நிலா

series1/thaarigai

துரையில் மழைக்காலம்..!!

கடந்த இரெண்டு மாதங்களாய் வெயிலை மட்டுமே சந்தித்துவந்த மதுரையில் தூவானம் பொத்துக்கொண்டு சாரலாய்த் தூவத்துவங்கியிருந்தது..!!

இந்த காலமாற்றம் இயற்கைக்கு மட்டுமே உரித்தாய்.. மனித மனங்களுக்கு அல்ல.. அது இன்னும் எந்த ஒரு முன்னேற்றமும் அடையாமல் சடுதியில் சதிராடியபடி..!!

வெற்றி எப்படியோ கெஞ்சிக் கெஞ்சி மதுரைக்கு மாற்றல் வாங்கி வந்திருந்தான்..!!

என்னவோ தாரிகையையும் நிஷாவையும் பார்த்துக்கொள்வது தனது கடமை என்ற நினைப்பு உருவாகியிருந்தது அவனுக்குள்..!!

பரத்வாஜும் அப்படியே..!! தன்னால் முடிந்தமட்டும் இருவரையும் பாதுகாப்பாய் பார்த்துக்கொண்டார்..!!

ஆனால் இன்னும் கீதாஞ்சலி மட்டும் அதே நிலையிலேயே..!! இன்னும் இறங்கி வரவில்லை அவர்..!! தனது பிடியில் அப்படியே..!!

தாரிகையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வைத்தியம் பார்க்க வேண்டுமென்று அத்தனை நச்சு..!! உண்மையில் தான்தான் மருத்துவமனைக்குச் செல்லவேண்டுமென புரிந்துகொள்ளவேயில்லை அவர்..!! அவ்வளவு அழுத்தம்..!!

வெற்றியும் பரத்வாஜும் தங்களால் முடிந்தமட்டும் கீதாஞ்சலியிடம் பேசி நிதரசனத்தை புரியவைக்க முயன்றார்கள்..!! ஆனால் அனைத்திற்கும் பூஜ்யமே விடையாய் ..!!

சுத்தமாக அவர் புரிந்துகொள்ளவே இல்லை.. புரிந்துகொள்ள முயற்சிக்கவே இல்லை என்பதுதான் உண்மை..!!

தாரிகை அவரின் உதாசீனத்தில் நொந்துபோக.. வேதளமாய் நிஷாதான் படையெடுத்துக்கொண்டிருந்தாள் கீதாஞ்சலியை நோக்கி..!!

தாரிகைக்கூட, “நிஷா விடு.. அவங்களுக்கு எப்ப தோனுதோ அப்போ நம்மக்கூட பேசட்டும்..”, என்றொரு முறை சொல்ல..

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“அவங்க நம்ம அம்மாக்கா.. எப்படி விடறது..”, என்றிருந்தாள் நிஷா..!!

இந்நேரம் நிஷாவின் இடத்தில் யாராவது இருந்திருந்தால் இவ்வளவு பொறுமையெல்லாம் இருக்குமா என்று தெரியாது..!! ஏன் நமது தாரிகைக்கே பொறுமை என்பது என்றும் இல்லையே..!! அத்தனை அத்தனை அன்பு நிறைந்திருந்தது நிஷாவினிடத்தில்..!! என்னவோ கீதாஞ்சலிக்கு அனைவரையும் ஒருநாள் பிடிக்கும் என்ற பிடிப்பு மனதில் திண்ணமாய் அவளுக்கு..!!

சிலபல பூசல்களுடன் விடுமுறை நாட்களை அனைவரும் முடித்திருந்தனர்..!!

அன்று அந்த ஆண்டின் முதல் நாள்..!!

தாரியுடன் நிஷாவும் பள்ளிக்கூடத்திற்கு கிளம்பிக்கொண்டிருந்தாள்..!!

அதை இதை என அனைத்து பொருட்களையும் எடுத்து தனது பள்ளிப் பையில் நிறப்பிக்கொண்டிருந்தாள் அவள்..!!

புதிய இடம்..!! புதிய மனிதர்கள்..!! புதிய சூழல்..!! எல்லாவற்றையும் பார்க்க அவளுக்கு அத்தனை ஆவல்..!!

“தாருக்கா.. நீங்க இப்ப பன்னிரெண்டுதானே..?? ஸ்பெஷல் கிளாஸ் எல்லாம் இல்லையா உங்களுக்கு..”, அறக்கப் பறக்க தலைவாரியபடி இவள் கேட்டிட..

“நம்ம ஸ்கூல்ல அதெல்லாம் இல்லை நிஷா..”, என்ற தாரிகையிடம் அத்தனை பதற்றம்..!! ஏதோ சரியில்லை என்பதாய் ஒரு தோற்றம்..!!

“அக்கா.. ஏதாவது பிரச்சனையா..?? ஏன் இப்படி இருக்கீங்க..??”, என்னவோ தாரிகையைப் பற்றி அனைத்தும் அறிந்தாற்போல் பெரிய மனுஷியாய் மாறி நிஷா கேட்டிட..

“ஒன்னுமில்லை நிஷா..”, என்று மறுத்தவளிடம் பதற்றம்.. பதற்றம்.. பதற்றம்.. அது மட்டுமே பிரதானமாக..!!

தாரிகையின் முகத்தைவிட்டு நீங்கவில்லை நிஷாவின் விழிகள்..!!

“ப்ச்.. என்ன நிஷா என்னையே பார்த்துட்டு இருக்க..?? போய் சாப்பிடு.. டைமாகுது பாரு..”, திசைத்திருப்ப முயல.. நான் இன்னும் உன்னை நம்பவில்லை என்ற தோரணையுடன் டைனிங்கை நோக்கி நகர்ந்திருந்தாள் நிஷா..!!

ழைக்கால விருந்தாய் பொங்களும் சாம்பாரும் மணந்துகொண்டிருந்தது டைனிங் டேபிளில்..!!

“வாவ்.. சூப்பர்.. மை பேவரெட்..”, மனதில் நினைத்தபடி தனது வேண்டியதை தட்டிலிட்டபடி நிஷா அமர.. கால்களில் சக்கரம் கட்டியதுபோல் வந்து சேர்ந்தான் வெற்றி..!!

“மாமா.. இன்னைக்குத்தான் உங்களுக்கு முதல் நாளா..??”, விழிகளால் யாரையோ தேடிக்கொண்டிருந்தன் நிஷாவின் கேள்வி புரியாமல் அவளைக் கேள்வியாய்ப் பார்த்திட..

“என்னை மாதிரி உங்களுக்கும் இதுதான் வேலைக்குப் முதல்  நாளா..??”, என்றிருந்தாள் மீண்டும்..!!

“எஸ் நிஷா பேபி..”, என்றவனின் விழிகளில் இன்னும் தேடல் நிறைந்திருந்தது..!!

“கீதாம்மாவையா தேடறீங்க நீங்க..??”, அவனைப் புரிந்தார்போல் ரகசியம் பேசினாள் நிஷா..!!

“ஹ்ம்.. ஹ்ம்.. ஆமா.. அவங்களைத்தான்.. எங்க அவங்க..??”, இவனும் அவளைப் போலவே..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.