(Reading time: 11 - 22 minutes)

“கீதாம்மா சமச்சு வெச்சுட்டு ரூமுக்குள்ள போயிட்டாங்க..”, என்ற நிஷா தனது பொங்கலுடன் ஐக்கியமாக..

இன்ஸ்டண்டாய் ஏமாற்றம் மனதை வியாபித்துக்கொண்டது வெற்றிக்கு..!!

என்னவோ இன்றாவது தனக்கு அவள் பரிமாறுவாள் என நினைத்திருக்க.. கடந்த சென்று சில நாட்கள் போலல்லாமல் இன்று அத்தனை ஏமாற்றமாய்..!!

“வெற்றி மாமா.. கீதாம்மா உங்களுக்குப் பிடிச்ச பொங்கல் செஞ்சிருக்காங்க..”, என்னவோ சொல்லவேண்டும் போலிருந்தது நிஷாவிற்கு..!!

உண்மையில் அதைக்கேட்டதும் மலர்ந்துதான் போனது வெற்றியின் முகம்..!! அட்லீஸ்ட் தனக்குப் பிடித்ததை செய்து தன் மேலுள்ள பாசத்தை வெளிப்படுவதுபோலொரு அற்ப மகிழ்ச்சி..!!

“ஆமாமா.. எங்க அக்கா எப்பவும் எனக்குப் பிடிச்சதைத்தான் செய்யும்..”, கீதாவிற்கு கேட்கவேண்டும் என்பதற்காக உரக்க அவன் கத்த.. அறையின் அமர்ந்திருந்த கீதாஞ்சலியின் இதழ்கள், “இதுக்கொன்னும் கொறச்சலில்லை..”, என்று முணுமுணுத்தது..!!

“நிஷா பேபி.. உங்க சிஸ்ஸி எங்க காணோம்..?? சாப்பிடலயா அவ..??”, பொங்கலில் துரித்தியபடி என்னை கவனி என்பதாயிருந்த முந்திரி எடுத்து வாயில் போட்டிக்கொண்டே நிஷாவிடம் கேட்டிட..

“அ..க்கா.. கிளம்பறாங்க மாமா.. ஆனா அவங்க மூஞ்சியே சரியில்லை..”, என்றாள் நிஷா கவலையாய்..

“என்னாச்சு அவளுக்கு..?? நேத்துவரை நல்லாத்தானே இருந்தா..??”, தன்னுள்ளே கேட்டுக்கொண்டவன் யோசனையுடன் நிஷாவைப் பார்த்திட..

“எனக்கென்னவோ அக்கா ஸ்கூலுக்குப் போறதுக்கு பயப்படறாங்கன்னு நினைக்கிறேன்..”, என்றிருந்தாள் நிஷா ரகசிய குரலில்..!!

தாரிகையுடன் இப்பொழுதே பேசவேண்டும் என்று முடிவெடுத்தவன் அவசரமாய் உண்டுவிட்டு தாரிகையின் அறைக்குச் செல்ல.. சுவரை வெறுமையாய் வெறித்தபடி அவள்..!!

“தா..ரு..”

கவனமெல்லாம் வேறெங்கோ பயணித்தபடியிருக்க வெற்றியின் குரல் எட்டிடவில்லை தாரிகைக்கு..!!

“தா..ரு..”, இப்பொழுது சத்தமாய் அழைத்திருந்தான் வெற்றி..

“என்ன மாமா..??”, என்றபடி இவள் சாவதானமாய் திரும்பிட.. அவளது அந்த பாவனையில் மொத்தமாக உருகித்தான் போனான் வெற்றி..!!

“பயமா இருக்கா தாரு உனக்கு..??”

ஆமென்று தலையசைத்தவள் ரொம்ப என்று சொல்லிட..!! அதை இப்பொழுதே போக்கவேண்டுமென்ற எண்ணம் அவனுக்குள்..!!

“எதுக்குடாமா பயம்..??”, தோளை அனைத்துக்கொண்டான் வெற்றி..!!

“இல்லை.. நான் இப்படீன்னு இந்நேரம் எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்.. சோ எல்லாரும் பார்த்து கேலி பண்ணுவாங்கதானே..??”

“பண்ணுவாங்க தாருமா..”, என்றவனுக்கு அது எத்தனை வலியை அவளுக்குக் கொடுக்குமெனத் தெரியும்..!! இருந்தும் இந்த உலகம் இப்படித்தான் இருக்கும்.. அதில் நீ நீந்தித்தான் ஆக வேண்டும்..!! அதற்கு நீ தயாராக வேண்டுமென்ற மனோபாவம்..!!

“என்னால அதை பேஸ் பண்ண முடியுமா..??”, அத்தனை வலி..!!

“நீ என்ன கொலையா பண்ணிட்ட..?? பேஸ் பண்ண முடியுமா முடியாதுன்னு கேட்டுட்டு..??”, கடிந்துகொண்டவன், “இங்க பாரு தாரு.. நீ இப்படி கூனிக்குறுகிப் போகனும்னு எந்த அவசியமும் இல்லை.. நீ யாருக்கும் எந்தவித கெடதலும் நினைக்கல.. அதைப் பண்ணவுமில்லை.. அப்புறம் எதுக்கு உன்னை நீயே தாழ்த்திக்கற..??”, என்று கேட்டிட..!!

“நீங்க சொல்றதெல்லாம் புரியுது மாமா எனக்கு..”, என்றவள் சிறு அமைதிக்குப் பின், “அன்னைக்கு காம்ப்பட்டீஷன் முடிச்சிட்டு நம்ம கல்க்கட்டால இருந்து வரும்போது ஒரு அக்காவைப் பார்த்தோமே.. ஞாபகம் இருக்கா உங்களுக்கு..??”, வெற்றியின் கண்களைப் பார்த்தபடி..

“ஹ்ம்.. இருக்கே..”, அன்று பார்த்த சமுவின் அழுத முகம் இன்னும் வெற்றியின் கண்ணுக்குள்ளே.. அன்று சமுவின் முகத்திலிருந்த அதே வலி தாரிகையின் முகத்திலும் இருப்பதுபோல்..

“அவங்களை நான் பேசினதுபோலத்தானே மத்தவங்களும் என்னைப் பேசுவாங்க..”, என்பவளிடம் என்ன சொல்வதென்றே தெரியவில்லை அவனுக்கு..!!

தாரிகை சொல்வது சரிதானே..!!

ஒரு ஆணையோ பெண்ணையோ இந்த சமூகம் பார்க்கும் பார்வைக்கும் ஒரு திருனங்கையைப் பார்த்திடும் பார்வைக்கும் வித்யாசம் உண்டு அல்லவா..??

நிதர்சனத்தில் சிலருக்கு பயம் தோன்றும்..!! சிலருக்கு அருவருப்பு..!! வேறு சிலருக்கு வேறு விதமான பார்வை..!! விரல் விட்டு எண்ணும் சிலருக்கு பரிதாபம்..!! லட்ச்த்தில் ஒருவருக்கு சக மனிதனாய் ஒரு பாவம்..!!

மொத்தத்தில் இவர்களை மனிதர்களாய் ஏற்று பார்க்கும் நபர்கள் அதிசயமே..!!

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.