(Reading time: 11 - 22 minutes)

காரணம்..!! அவர்களைப் பற்றி நமது அறியாமை..!!

நம்மைப் போன்று அவர்களுக்கும் ஆசைப் பாசம் எல்லாம் இருக்கும் என்று அறியாத அறியாமை..!! இவர்களும் நம்மைப் போன்றவர்கள் என்று ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் இல்லா அறியாமை..!! அறியாமையா அல்லது அது மூடத்தனமா..??

அர்த்தனாதியாய் சிவனும் சக்தியும் உருவெடுத்து நிற்கும் சமயம் கைகள் இரெண்டையும் சேர்த்து தொழும் நாம்.. உடலால் சிவனாகவும் மனதால் சக்தியாகவும் திகழும் இவர்கள் தூரத்துரத்துவது ஏனோ..??

“அதையெல்லாம் காதுல போட்டுக்காதே தாருமா..”, என்ற வெற்றிக்கு உண்மையில் அவளை நினைத்து கவலை மட்டுமே..!!

“எப்படி மாமா முடியும் அது..?? கண்டிப்பா என் துணைக்கு லாவண்யா இருப்பா.. எனக்குத் தெரியும்.. ஆனா கதிர்.. நிதின்.. எல்லாம்..?? கதிர் என் பிரெண்ட்தான்.. இல்லைன்னு சொல்லல நான்.. பட் அவனுக்கும் என்னை மாதிரி இருக்கறவங்களை அவ்வளவா பிடிக்காது.. நிதின்.. ஹ்ம்ஹூம்.. சொல்லவே வேண்டாம்.. எப்பவும் என்னைய அவனுக்குப் பிடிக்காது.. இப்ப நான் இருக்க நிலையில்..?? பேசியே கொன்னுடுவான்.. ஐ டோன்ட் திங்க் ஐ கேன் பேஸ் இட்..”

“சரி அப்ப என்ன பண்ணலாம்னு ஐடியாவாம்..?? வீட்லயே இருந்துக்கப் போறியா இப்படியே..??”, கோபமாகவே..

“ப்ச்.. கண்டிப்பா அது என்னால முடியாதே மாமா..”, என்றவளில் குரலில் அடுத்து என்ன செய்வதென்ற குழப்பமே மிச்சமாய்..!!

“ஏன் தாரு உன்ன மாதிரி இருக்கறவங்களை எல்லாம் நீ பார்த்திருக்கியா இதுக்கு முன்னாடி..??”

“பார்க்கமா என்ன மாமா.. பார்த்திருக்கேனே..”, என்றவளில் குரலில் இப்ப எதுக்கு இப்படி சம்மந்தம் இல்லாமல் கேள்வி கேட்கிறாய் என்பதுபோல் தோற்றம்..!!

“காரணம் இருக்கு.. பதில் சொல்லு..”, என்ற வெற்றி, “அவங்க எல்லாம் என்ன வேலையாம்..??”, என்று கேட்டிட..

“வேலையா..?? அவங்க வேலை எதுவும் செஞ்சு நான் பார்த்ததில்லையே.. பார்த்தவரைக்கும் பிச்சை தானே எடுக்கறாங்க..”, திருநங்கைகள் பிச்சை எடுப்பதைத் தவிர வேறு வேலைகள் செய்து இதுவரை அவள் பார்த்ததில்லை..!!

“ஏன் அவங்க பிச்சை எடுக்கறாங்க தாரிகை..??”

“ஏன்னா..?? அவங்களுக்கு சாப்பிட வேண்டாம்மா..?? அதுக்கு காசு வேணும்ல.. அதுக்கா இருக்கலாம்..”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“அது மட்டும் தானா..?? வேற ஒன்னுமில்லையா..??”

“வேற என்ன..??”, யோசத்தவளுக்குப் பிடி சிக்கவில்லை சில நொடிகளுக்கு, “அவங்களுக்கு எனக்குக் கிடச்ச மாதிரி அப்பா அம்மா மாமா நிஷா எல்லாம் இல்லை.. சரியா..??”, என்றிட..

“யெஸ்.. அதேதான்.. உனக்குக் கெடச்ச மாதிரி கிடைக்கல அவங்களுக்கு... அப்படி கிடச்சிருந்தா அவங்களும் உன்னை மாதிரி துணையோட இருந்திருக்கலாம்.. நல்ல படிச்சிருக்கலாம்.. நல்ல வேலைக்கு போயிருக்கலாம்.. பட் அப்படி அவங்களுக்கு யாரும் கிடைக்கலையே.. ஆனா இதெல்லாம் நீ நினச்சா மாத்தலாம்..”

“நானா..?? நான் எப்படி மாத்த முடியும்..??”

“எல்லாரையும் எல்லாரோட வாழ்க்கைத் தரத்தையும் உன்னால மாத்த முடியாதுதான்.. ஆனா உன்னை மாதிரி கொஞ்ச பேரோட வாழ்க்கைத் தரத்தை மாத்தலாம் நீ..”

“எப்படி..??”, இன்னும் யோசனையே..

“படிப்பு..!! படிக்காமையும் அவங்களுக்கு நீ உதவி பண்ணலாம்தான்.. செய்யவும் முடியும்.. நாங்க துணையிருப்போம்.. ஆனால் அதெல்லாம் சும்மா டெம்ப்ரரியாத்தான் இருக்கும்.. என்னைப் பொருத்தவரை நீ ஒரு உதாரணமா இருக்கனும்.. உன்னை மாதிரி இருக்கறவங்களுக்கு உதாரணமா.. உங்களாலையும் படிச்சு முன்னேற முடியும்னு நம்பிக்கைத் தருவது மாதிரி.. இது அத்தனை மாற்றத்தை அத்தனை சீக்கிரம் வரவைக்காதுதான்.. ஆனால் கொஞ்சம் மாற்றம் வரும்.. ஒரு ஒரு சதவிகிதம் மாற்றத்தைக் கொண்டு வந்தேலே அது வெற்றிதான்.. நீ ஒரு படி எடுத்து வெச்சாப்போதும்.. உன் பின்னாடி கண்டிப்பா அதை பிடிச்சிட்டு நிறையா பேர் வருவாங்க.. அது நிச்சயம்.. இட் டேக்ஸ் டைம்.. பட்.. இட் வில் மேக் சேஞ்ச்..”

“………………………………………”

“கண்டிப்பா நீ அச்சீவ் பண்றதுக்கு தடையா நிறைய இருக்கலாம்.. கண்டிப்பா இருக்கும்.. அதுக்கு உன்னை சுத்தி இருக்கறவங்க காரணமா இருக்கலாம்.. இல்ல அதுக்கு உன்னைத் தெரியாதவங்க கூட காரணமா இருக்கலாம்.. அது நல்லதுக்குத்தான்.. அது உன்னை வலிமையாக்கும்.. இன்னும் இன்னும் உன்னை செதுக்கியெடுக்கும்.. இப்ப அதை பேஸ் பண்றது எப்படீன்னு யோசிச்சுட்டு இருந்தா நீ இப்ப நிக்கற இடத்துலையே நிக்க வேண்டியதுதான.. முன்னாடியும் போக முடியாது.. பின்னாடியும் போக முடியாது.. கொஞ்சம் நாள் கழிச்சுப் பார்த்தீன்னா.. என்னடா வாழ்க்கை இது..?? எப்படி இருந்தோமோ அப்படியே இருக்கோம்னு நினைக்கக்கூடாது.. என்னவோ நம்மால முடிஞ்ச நல்லதை பண்ணிருக்கோம்னு தோனனும்.. அது நம்ம மனசுக்கு ஒரு சாட்டிஸ்பேக்ஷனைக் கொடுக்கனும்.. அதுக்குப் பேர்தான் லைப்.. அப்படித்தான் இருக்கனும் லைப்.. சும்மா வாழ்ந்தோம் செத்தோம்னு இருக்கக்கூடாது.. நம்மளும் எதையோ உருப்படியா பத்துப் பேருக்கு செஞ்சு முடிச்சிட்டுத்தான் உலகத்தைவிட்டுப் போயிருக்கோம்னு தோனனும்.. அதுதான் வாழ்க்கை..!! எதுவா இருந்தாலும் நீதான் முடிவு செய்யனும் பாப்பா.. டெசிஷன் இஸ் இன் யுவர் ஹாண்ட்ஸ் தாருமா..!! யோசி..!! ஒரு வாரம்கூட டைம் எடுத்து யோசி..!! அடுத்தவங்க நம்மல பேசுவாங்க.. கேலி செய்வாங்க.. அப்படி இப்படீங்கற சின்னக் காரணத்துக்காக இங்கயே இப்படியே நிக்கப்போறியா இல்லை என்னால வாழ்க்கைய பேஸ் பண்ண முடியும்னு ஓடப்போறியா..?? முடிவு செஞ்சுக்கோ..”, என்றவன் அவளைத் தனிமையில் விட்டுச் சென்றிருந்தான்..!!

 

வணக்கம் தோழமைகளே..!!

பொங்கல் வாரம் என்பதால் கொஞ்சம் ஸ்பீட் டைப்பிங்க்.. ஸ்பெல்லிங் மிஸ்ட்டேக்ஸ் நிறைய இருக்குமென நினைக்கிறேன்.. கொஞ்சம் அட்ஜஸ்ட் கரோ..

நன்றி..!!

 

உருவெடுப்பாள்..

Episode # 24

Episode # 26

{kunena_discuss:1168}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.