(Reading time: 7 - 13 minutes)

சற்றைக்கெல்லாம் நீண்ட பெண்டகன்கள் கொண்ட ஒரு ராட்சத மீன் ஒன்று அவர்களின் சப்மரைனை சுற்றி வளைத்தது. அதன் இறுக்கம் அதிகரிக்க

அலெக்ஸ் விளக்குகளை அணையுங்கள் வெளிச்சம் காரணமாக கூட அது நம்மைத் தாக்க வரலாம் 

ஆனால் அலெக்ஸால் விளக்குகளை அணைக்க முடியவில்லை எதுவும் வேலை செய்யவில்லை,

இதன் இறுக்கம் இன்னும் அதிகரித்தால் சப்மரைன் நசுங்கலாம் அல்லது கண்ணாடிகள் உடையலாம்

வாய்ப்பு இல்லை நான்தான் சொன்னேனே இது பாலி கார்ப்பனேட்டால் ஆனது பிளாஸ்டிக் போன்ற தோன்றம் அளித்தாலும் ஆட்டோ மீட்டரின் வேகம் அதிகரிக்கிறது இதனால் நமது தகவல் தொடர்புகள் துண்டிக்கப்படலாம்

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

எதிர்வரும் ஆபத்தை பற்றி அவர்கள் விவாதித்துக் கொண்டு இருக்கும் போதே அந்த ராட்சத மீன் தன்னுடைய பெண்டகன்களை சப்மரைனில் இருந்து விடுவித்துக் கொண்டது.

உள்ளிருந்தவர்களுக்கு மிகுந்த ஆச்சரியம்... பயம் விலகியதைப் போல பெருமூச்சு விட்டார்கள்.

ஆனால் அலெக்ஸ் மட்டும் ஜீசஸ் என்ற வார்த்தையை பெரும் சப்தத்தோடு உபயோகித்தான். 

சப்மரைனை சுற்றி வளைத்திருந்த ராட்சத மீனை தன் கொடூர பற்களில் கவ்விக் கொண்டவாறு சப்மரைனைக் கடந்து சென்றது ஒரு திமிங்கலம் உத்ராவின் பரத்தின் கரங்களுக்குள் ஒடுங்கிக்கொண்டாள் கடவுளே ?! 

இந்த திமிங்கலம் மெக்லோடன் வகையைச் சேர்ந்தது. இவை ரொம்பவும் அரியவகையும் கூட நம்ம டைனோஸர்ஸ் மாதிரி ஒரு காலத்திலே கூட்டம் கூட்டமா வாழ்ந்துட்டு இருந்தது. கடலின் சீதோஷ்ணம் மற்றும் வேறு பல காரணங்களால இதோட வேட்டையாட குணம் அதுங்களோட இனத்தையே அழிச்சிடுச்சி ! நம்மோட கெட்ட நேரம் இப்போ இதுகிட்டே வந்து மாட்டிட்டு இருக்கோம். அலெக்ஸ் இப்போ நமக்கு யாரோட உதவியாவது தேவை.....ஏதாவது செய்யுங்கள் இல்லைன்னா நாம அதோட வாய்க்குள் போக வேண்டியதுதான். முதலில் விளக்குகளை செயலிழக்க முயற்சி செய்யுங்கள்

ஏஞ்சலினா சொல்லவும் மீண்டும் முயற்சித்தான் அலெக்ஸ் விளக்குள் அணைந்தது. ஒரு நீண்ட நிம்மதி பெருமூச்சு எடுத்துக்கொண்டு அவர்கள் நால்வரும் அமைதிகாக்க, 

அதேநேரம் தகவல் தொடர்புகள் வேலை செய்ய தொடங்கியதும் தனக்கு வெகு அருகாமையில் உள்ள இரண்டு புள்ளிகளில் ஒன்றை உதவிக்கு அழைக்கலாம் என்று பத்மினி முயற்சித்தாள்.

அவள் தொடர்பு கொள்ள முயன்றது அலெக்ஸின் சப்மரைனை உதவி அழைப்புக்கு மீண்டும் விளக்குகள் உயிர்பெற

ஏஞ்சல் வெகு அருகில் இரண்டு அலைவரிசைகள் தெரிவதாக சொன்னேன் இல்லையா அங்கிருந்து நமக்கு உதவி அழைப்பு வந்து இருக்கிறது

சந்தோஷமாக சொல்லிக்கொண்டு இருந்த அலெக்ஸ் மற்றவர்கள் ஏதும் பேசாமல் போக அவர்களின் பார்வை சென்ற திசையை நோக்கினான்,

மீண்டும் வெளிச்சம் பெற்ற அலெக்ஸின் சப்மரைனை நோக்கி தனக்கு தரப்பட்ட விருந்தை சுவைக்க வர ஆரம்பித்தது அந்த திமிங்கலம். 

தொடரும்...

Episode # 23

Episode # 25

Go to Kathal Ilavarasi story main page

{kunena_discuss:1201}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.