(Reading time: 8 - 15 minutes)

நதியின் ரீங்கராமாய் சலசலவென பேசிக்கொண்டிருந்த அந்தப் பிள்ளைகள் அனைவரும் தரண்யனைக் கண்டதும் மௌனத்தை தத்தெடுத்துக்கொண்டனர்..!! ஓபன் ஸ்டேட்மென்ட் கொடுத்தால்.. மியூசியமில் வைக்கப்படும் பொருளைப்போல் அவனை வேடிக்கை பார்க்க துவங்கிருந்தார்..!!

குனிந்த தலை நிமிரவில்லை தாரிகைக்கு..!! அனைவரின் முன்பு தான் காட்சிப்போருளோ என்ற தடுமாற்றம்..!!

எங்கு சென்று அமர்வதென்றும் புரியவில்லை அவளுக்கு..!! மெதுவாக விழிகளை நிமிர்த்தி அவள் பார்த்திட.. அனைவரின் முகத்திலும் ஒருபாவம் ஒரேபோல்..!! என்னிடம் வந்து அமராதே என்பதுபோல்..!!

“லாஸ்ட் பெஞ்ச் ப்ரீடா.. நம்ம இனி அங்க உட்கார்ந்துக்கலாம்..”, கதிர் அவனைப் பிடித்து இழுத்தச் செல்ல.. அவனின் இசைப்பில் தாரிகை..!!

தாரிகை அமர்ந்தபின்பும் அனைவரின் பார்வையும் அவள்மீது வீழ்வதாய்..!!

“நீ எதுக்கு இப்ப இங்க கிளாசுக்கு வந்த..?? உன்னை மாதிரி இருக்கறவங்களுக்கு எல்லாம் இங்க இடமில்லை..”, தாரிகைக்கு எதிராய் முதன்முதலில் கொடி உயர்த்தியிருந்தான் நிதின்..!! அவன் கண்களுக்குள் அவ்வளவு பழி உணர்வு..!!

அவனுக்கு ஆதராவாய் சிலர் குரல் கொடுக்க.. எதிர்ப்பாய் சிலர்..!! மொத்தத்தில் சற்று நேரத்திற்குள் இரண்டு கூட்டம் உருவாகியது அங்கு..!!

“நிதின் திஸ் இஸ் நாட் பேர்.. அவன் நம்ம பிரென்ட்.. ஒதுக்கக்கூடது இப்படி..”, ஒருவன் குரல் உயர்த்த..

“அவன் சொல்றதுல என்ன தப்பு கிஷோர்.. இப்படிப்பட்ட ஒருத்தன் படிக்கற கிளாஸ்ல நான் படிக்கமாட்டேன்..”, என்றிருந்தான் லாவண்யா..!!

சத்தியமாக இதை எதிர்பார்த்திடவேயில்லை தரண்யன்..!! கதிரைக்கூட சில சமயம் தன்னை இவன் நிராகரித்துவிடுவானோ என்று நினைத்திருக்கிறாள் தாரிகை..!! ஆனால் லாவண்யா..?? சுத்தமாக அவன் எதிர்பார்க்கவே இல்லை..!!

யார் தன்னோடு நிற்கவில்லை என்றாலும் லாவண்யா தன்னுடன் நிற்பாள் என்று நினைத்திருந்தவளுக்கு பெரும் ஏமாற்றம்..!!

உண்மையில் மனிதனின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் வித்தியாசமானவை..!! யாரிடமிருந்து அவனுக்கு அன்பென்பது கிடைக்குமென்று எதிர்பார்க்கிறானோ.. அது அவனைச் சென்றடைவதே இல்லை..!! அந்த எதிர்பார்ப்பு பல சமயங்களில் அவனுக்கு வலியையே பரிசாய் கொடுத்திருக்கும்..!! அதுபோல்தான் இன்றும்..!! தாரிகையின் எதிர்பார்ப்புகள் பொய்யாகிப்போக..!! காட்சிப்பொருளாய் அவள்..!!

மனவலியின் கதிரின் கைகளை அவன் பிடித்துக்கொள்ள.. அவள் நிலை புரிந்தாற்போல் தட்டிக்கொடுத்தான் கதிர்..!!

“லாவண்யா.. என்ன பேசற நீ..?? இவன் நம்ம பிரென்ட்..”, கதிர் கோபம் கொண்டிருந்தான்..

“கதிர்.. இவனில்லை.. இது..”, என்ற லாவண்யாவின் குரலில் அத்தனை அழுத்தம்.. அத்தனை பிடித்தமின்மையுடன் கூடிய கடினம்..!!

“ஜஸ்ட் ஷட் அப் லாவண்யா.. என்ன பேசறன்னு தெரிஞ்சுதான் பேசறியா நீ..??”, ஒருபுறம் கதிர் தனது குரலை உயர்த்து கத்திட..

“நான் ஒன்னும் தப்பா சொல்லல கதிர்.. அது இதுன்னு சொல்லாம வேற என்னன்னு சொல்றது.. அதுதானே உண்மை..”, அலட்சியமாய்..

லாவண்யா பேசியது கதிருக்கு மட்டுமல்ல மற்றும் சிலரை கோபப்படுத்தியிருக்க..

“திஸ் இஸ் நாட் பேர் லாவண்யா..”

“அவன் உன் பெஸ்ட் ப்ரென்ட்..”

தாரிகைக்கு வேண்டி சிலர் லாவண்யாவிடம் பேசிட.. வேறு சிலர் லாவண்யாவிற்கு சப்போர்ட்டாய்..!!

ஆக.. அங்கிருந்த அறுபது பேருமே ஆளாளுக்கு கத்திக்கொண்டிருந்தனர்..!! இது எதுவும்.. எதுவுமே பிடிக்கவில்லை தாரிகைக்கு..!! சிலரின் மீது அவள் கொண்டிருந்த நம்பிக்கை என்ற ஒன்று முழுமையாக சரிந்திருந்தது..!!

அவள் அனைத்தையும் எதிர்பார்த்தாள்தான்..!! இப்படித்தான் இது சென்று முடியும் என்று முன்பே அறிந்ததுதான்..!! ஆனால் கற்பனைக்கும் அனுபவிப்பதற்கும் வித்யாசம் உண்டல்லவா..??

உடலோடு சேர்த்து மனதும் இறுகிப்போக.. அப்படியே சிலையாய் அமர்ந்திருந்தாள் அவள்..!!

கூச்சலும் குழப்பமுமாக அந்த இடம் சந்தைக்கடையாய் காட்சியளிக்க.. என்ன தோன்றியதோ அப்படியே எழுந்து நின்றிருந்தாள் தாரிகை..!! இயற்கை குணமான அந்தக் குருட்டு தைரியம் அவளை எழுந்து நிற்கவைத்திருந்தது..!! ஒருவகையில் அதுவும் நன்மைக்கே என்று தோன்றும் விதமாய்..!!

“தரண்யா.. நான் பேசிக்கறேன்.. நீ உட்கார்..”, கதிர் அவளிடம் சமாதானம் சொல்ல.. தாரிகையின் தீர்க்கமான பார்வை அவனை அவளிடமிருந்து எட்டியே வைத்தது..!!

தாரிகை சட்டென எழுந்ததும் அலட்சியமே அனைவரிடத்திலும்.. என்ன பெரிதாகப் பெசிடப்போகிறாள் இவள் என்பதாய்..!!

நிதினின் மனது ஒரு குத்தாட்டமே போட்டு முடித்திருந்தது.. தாரிகையைப் பழித்தீர்த்த உணர்வு..!! ஆனால் இன்னும் போதவில்லை அவனுக்கு..!! என்னவோ அவள் இன்னும் இன்னும் அனுபவிக்க வேண்டுமென்ற எண்ணம்..!! சிலரை ஏற்றிவிட்டு வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்க..!! தாரிகை எழுந்து நின்றது இன்னும் வசதியாய்..!!

“ஏய்.. ச்சி.. வெளில போ முதல்ல.. ***********......... ******************............ *********************................ ***************************.......... உன்னை மாதிரி இருக்கற ஒன்னெலாம் பேசறதை கேட்கனும்னு அவசியமில்லை எங்களுக்கு..”, அத்தனை பேர் முன்பும் இழிவாய் கத்தியிருந்தான் நிதின்..!! 

உருவெடுப்பாள்..

Episode # 25

Episode # 27

{kunena_discuss:1168}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.