Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 22 - சாகம்பரி குமார் - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 22 - சாகம்பரி குமார்

Midimaiyum achamum meviya nencham

தோட்டத்தில் உலாத்திக் கொண்டிருந்தபோதுதான் புவன் அதனை கவனித்தான். அந்த தங்கவண்ண ரோஜா பூத்திருந்தது. சதா ஆசையாக நட்டு வைத்த செடி… இன்று பூத்திருந்தது.

ஒவ்வொருவரும் இப்படித்தான் மனதிற்குள் அழகிய கனவுகளை விதைத்து காத்திருக்கிருக்கின்றனர். அது முளை விட்டு கிளைத்து எழுந்து பூத்து குலுங்கும் தருணத்திற்காக காத்திருக்கின்றனர். ஏனோ தெரியவில்லை சில செடிகள் மட்டுமே காலத்தின் கட்டளைக்கு ஏற்ப புவியீர்ப்பு விசையை எதிர்த்து எழுந்து பூத்து குலுங்குகின்றன. சில மண்ணிற்குள்ளேயே புதைந்து போகின்றன.

புவனுக்கு கொஞ்சம் பயம் வந்தது. அவனுக்குள்ளே உள்ள கனவும் அப்படி ஆகிவிடுமோ என்று… விதைத்த வைத்த நாளின் கணக்குபடி பார்த்தால் இந்நேரம் பெரிய நந்தவனமே உருவாகியிருக்க வேண்டும். ஆனால் அவனுக்கும் சதாவிற்கு இடையே இன்னும் தூரம் அதிகம் இருந்தது. .அவள் அவனுடைய மனைவி என்பதெல்லாம் இருக்கட்டும்… இன்றுவரை அவனை அவள்  நிமிர்ந்து பார்க்கவில்லை.

எப்போதாவது அவள் அவனை பார்ப்பாளா? அந்த கண்களில் கேள்வி இருக்குமா… மகிழ்ச்சி இருக்குமா.. வேண்டுதல் இருக்குமா… இல்லை… இல்லை அன்பு…? அது இருக்குமா.? புவனுடைய இதயத்தின் தேவை ஒன்றுதான்.    அந்த பார்வையில் நம்பிக்கை இருக்க வேண்டும். முழு நம்பிக்கை…. மீதியிருக்கும் வாழ்நாள் முழுவதற்குமான நம்பிக்கை இருக்க வேண்டும்.

இந்த தங்க ரோஜா காலம் தாழ்த்திதான் பூத்திருக்கிறது. அதுபோல அவர்கள் அன்பு காலம் தாழ்த்தி வந்தாலும் முழுமையாக வரவேண்டும். ஒரு விஷயம் உறுதி… அவனுடைய அம்மாவிற்கும் அப்பாவிற்குமான அரைகுறை உறவாக அது இருக்காது. அவளுடைய நலனுக்காக அவன் எந்த காலத்திலும் எந்த இடத்திலும் எந்த செயலையும் செய்வான்.

“என்ன சிந்தனை புவன்?” அருகில் வந்த சதா கேட்டாள். அவனுக்கு தெரியும் இது ஒரு தோழியின் விசாரிப்புகூட இல்லை… ஒரே வீட்டில் வசிக்கும் இருவருக்கிடையேயான உரையாடல் மட்டுமே!

“ம்…. இந்த கார்மேகங்கள் எப்போது கலையும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்”

“மேகமா… முழுசா சூரியன் சுட்டெறிக்கிறது… எங்கே மேகம் இருக்கிறது?”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“அது எங்கிருக்கிறது என்று உனக்கு தெரியாதா?”

“ஹாங்.. புரியுதுப்பா. இன்னும் கொஞ்ச நாள்ல எல்லாம் சரியாகிவிடும். நான்தான் சரியில்லை. குழப்பிக் கொண்டிருக்கிறேன். சாரி” சதா சொல்ல,

“இல்லை… எனக்குள்ளும் எதுவோ சரியில்லை என்று தோன்றுகிறது சதா… சரியான ரெஸ்ட் இல்லாமல் இருப்பதுபோல தோன்றுகிறது.” புவன் குரலில் தளச்சி தெரியவும் சதா பதட்டமானாள். பழைய விபத்தின் பாதிப்பு இன்னும் தொடர்கிறதோ…?

“டாக்டரிடம் கன்சல்ட் செய்யலாமில்லையா? இப்பதானே அந்த விபத்தின் பாதிப்பிலிருந்து மீண்டு வந்துகிட்டு இருக்கீங்க…”

“ம்… அப்பாயின்மெண்ட் வாங்கியிருக்கேன். கரண்கூட உடன் வரதா சொல்லியிருக்கான்”

“ஓ… அவர் வந்தால் நல்லதுதான்” சதாவின் முகத்தில்  நிம்மதி படர்வதை கண்ட புவன்….

“அவரோட பிரச்சினை தீர்க்க வந்துட்டு… இப்போது நம்முடைய பிரச்சினையில் மாட்டிக் கொண்டு விட்டார்.” என்றான்.

“ம்ஹூம்…. அவர் வந்ததுதான் நல்லது. புவன்  பிரச்சினைகள் இல்லாமல் ஒரு வாழ்க்கை இருக்காது. அப்படிப்பட்ட வாழ்க்கையை கொடு கடவுளிடம்கூட கேட்க முடியாது. ஆனால் அந்த பிரச்சினையிலிருந்து மீண்டு வருவதற்கு சரியான கைடன்ஸ்.. வழிகாட்டுதல் தரக்கூடியவர் நம்முடன் இருக்க வேண்டும். நமக்கு கரண் அண்ணாதான்…”

“கரெக்ட்… ரொம்பவும் உதவியாக இருக்கிறான். நல்ல ஃப்ரெண்ட்…”

“சீக்கிரம் சரியாகி விடும்”

“அது சரியாக நீதான் முயற்சிக்க வேண்டும்.”

“நான் என்ன செய்ய வேண்டும் புவன்?”

“ம்….  ஒரு கம்ப்ளீட் மெடிக்கல் செக்கப் செய்யணும்… நாம் ரெண்டுபேருமே செய்யணும்னு கரண் அட்வைஸ் பண்றான்… இன்னிக்கு நான் கன்ஸ்ல்ட் பண்ணிட்டு வரேன்.“

சதாவிற்கு குழப்பமாக இருந்தது. இது மனநலம் தொடர்புடையது என்றால்… சதாவிற்குதானே ஆலோசனை தேவைப்படுகிறது. புவன் எதற்கு செல்ல வேண்டும்?

“அது ஏன்னா… எனக்கு கொஞ்சம் ரெஸ்ட்லெஸ் ஸ்லீப்பாக இருக்கு. அடிக்கடிகனவில் ட்ரெயின் வர்ற சப்தம் கேட்குது. ஏதோ ஆக்ஸிடெண்ட் நடந்த இடத்தில நிக்குற மாதிரி இருக்கு. நானே அடிபட்டு கிடக்குற மாதிரி தோணுது. ரொம்பவும் டிஸ்டர்பன்ஸா இருக்கு.”

“ஐயோ…”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

Chillzee Special "ஐ லவ் யூ" - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“பயப்படாதே. இதை போஸ்ட் ட்ரௌமாடிக் ப்ராப்ளம்னு சொல்லுவாங்க… அந்த விபத்தோட பாதிப்பினால் இந்த மாதிரி உறக்கத்தில் நினைவுகள் வந்து தொல்லை செய்யுமாம்…:

“அப்படின்னா… உங்களுக்கு நடந்தது கார் விபத்துதானே. ட்ரெயின் எதுக்கு கனவில் வரணும்.”

“கார் ஒரு சிரிய வண்டிதானே… பெரிய கனவுன்னு ட்ரெயின் வருது போலிருக்கு…”

“ஜோக்கு….” சதா முறைக்கவும்

“அதுக்குதானே டாக்டர்கிட்ட போறேன்.”

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

About the Author

Sagampari

Completed Stories
On-going Stories

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 22 - சாகம்பரி குமார்saaru 2019-01-30 21:49
Super ji
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 22 - சாகம்பரி குமார்AdharvJo 2019-01-30 11:01
Mesmerizing Ms sagampari :hatsoff: :clap: :clap: thank you for sharing these unknown information 👌 why didn't buvan share abt his plan of committing suide that is wen he met his angel isn't it :Q: interesting flow and look forward to read next update. Thank you and keep rocking ma'am .
Reply | Reply with quote | Quote
# superbSHIRUTHADEWI SETHAREN 2019-01-30 06:21
love will win all obstacles...love the way you bring the story..love it...awesome
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 22 - சாகம்பரி குமார்madhumathi9 2019-01-30 05:56
:clap: nice epi mam.interesting aaga poguthu. Waiting to read more. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
# MAMNAruna 2019-01-29 20:50
Sooperb update mam :clap: Neraya Solliteenga.... 😁 Seekrama indha vaibhav kitta irundhu kaapathunga mam :sad: eagerly waiting for the next update
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 22 - சாகம்பரி குமார்mahinagaraj 2019-01-29 18:23
ரொம் நல்லா இருக்கு மேம்... :clap: :clap:
படிக்க படிக்க ஆர்வம் அதிகரிக்குது மேம்... :yes:
:thnkx:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top