(Reading time: 14 - 27 minutes)

அவள் கூறியதை விழிவிறிய பார்த்தவர்.. கணவனின் கண்சிமிட்டலில் அதை பிறகு பேசலாம் என விட்டார்..

என்னோட பையன்.. மனு அப்படின்னு சொல்லவும் உள்ளம் குளித்தவன்.. அவ அப்படி தான் அம்மா.. நீங்க வாங்க நாம போய் காபி போடலாம் என சமையல் அறைக்குள் அழைத்துச்சென்றான்.. மனுவும் சாப்பிட்டு முடித்து விட்டு.. அனைவரும் தோட்டத்தில் அமர்ந்து கதை அடித்தார்கள்..

மனு மற்றும் ஆகாவின் குறும்புதனங்களில் தன்னை மறந்து ரசித்துக்கொண்டு இருந்தார் பார்வதி.. அந்த சூல்நிலையே அவரின் மனதை நிம்மதியாக்கியது.. புன்னகைத்துக்கொண்டே அவரிகளின் சண்டையை ரசித்தார்..

ஸ்வீட்டி.. நீங்க சொல்லுங்க.. இவனை என்னன்னு கேளுங்க.. முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு மனு கூறவே..

அம்மா.. இவ சரியான கேடி.. இவளை நம்பாதீங்க நான் சொல்லரத கேளுங்க என ஆகாஷ் கூறவே..

ஸ்வீட்டி.. நான் சொல்லரத கேளுங்க.. என பார்வதியை தன் பக்கம் மனு திருப்பவும்..

ம்மா நான் சொல்லரத கேளுங்க என ஆகாஷ் அவன் பக்கம் திருப்ப..

ஸ்வீட்டி நான் சொல்லரதை தான் கேட்பாங்க..

இல்லை நான் சொல்லரது தான் கேட்பாங்க..

நான் சொல்லரது..

இல்லை நான் சொல்லரது..

நான் சொல்லரது தான்..

இல்லை நான் சொல்லரது தான்னு.. மனுவும், ஆகாஷ் அவரை ஒருவழி செய்து கொண்டுயிருந்தனர்..

சரி.. சரி.. ரெண்டுபேரும் அடிச்சுக்காம சொல்லுங்க நான் கேக்கரேன்..

ம்.. நான் சொல்லரேன் என மனு அவரின் கையை பிடித்துக்கொண்டு ஸ்வீட்டி இதோ இந்த செடியை பாருங்கங்க.. நான் இந்த செடி எல்லாபக்கமும் பரவாலா இருக்குன்னு சொன்னேன்.. என ஒரு செடியை அவள் காட்டவே..

அம்மா இது செடியா.. மரம் தானே.. எவ்வளவு பெருசா இருக்கு.. அதை தான் நான் சொன்னேன்.. குரங்கு குட்டிக்கு தெரியாத எது மரம், எது செடின்னு கேட்டேன்.. அதுக்கு போய் சண்டைக்கு வராம்மா.. அவன் முகத்தை பயங்கர சிரீயஸ்சாக வைத்துக்கொண்டு கூறவே.. தன்னையும் மீறி அவர் சிரித்துவிட்டார்..

நல்லா பாரு அம்மாவே சிரிக்கராங்க..

போடா பன்னி.. எரும.. மாடு.. மனு ஆகாவை சரமாரியாக கழிவிஊற்றினாள்..

பதிலுக்கு அவனும்.. அவனும் குரங்குட்டி, நாய்குட்டி, பூனைகுட்டி என திட்டிவிட்டு அவளிடம் நான்கு மொத்துதையும் வாங்கிக்கொண்டுஅமைதியாக உட்காந்துட்டான்..

அவ்வளவு நேரம் அவர்களின் அராஜகங்களை எல்லாம் மெல்லியபுன்னகையுடன் பார்த்துக்கொண்டு இருந்த சிவஞானம்.. என்ன ஆகாஷ்.. பயங்கரமான தாக்குதலா..

பயங்கரமா.. ரொம்ப கொடுமையானது சார் அவன் மூச்சுவாங்கிக்கொண்டே கூறினார்.. அதில் அவர் வாய்விட்டே சிரித்துவிட்டார்..

அவர் சிரித்ததில் காண்டாகவே.. போகங்க குரு.. நீங்க மோசம்.. ஸ்வீட்டி தான் என் செல்லம்.. வாங்க ஸ்வீட்டி அவங்க கூட கா விட்டர்லாம்.. என அவரை இழுத்துக்கொண்டு வீட்டுக்குள் சென்றாள்..

கோவிச்சுகிட்டாளாமா... சார்... ஆகாஷ் இழுத்து கூறிவே மீண்டும் சிரிப்பொலி அங்கே..

சரியா வாலுங்கடா நீங்க.. உங்களை சமாளிக்கரது ரொம்ப கஷ்டம் போலவே..

அப்படி எல்லாம் இல்ல சார்..

மனு ரொம்ப வாலு..

அவ அப்படி தான் சார்.. எப்பவும் எல்லார் கூடவும் ஈஸியா மிங்கில் ஆயிருவா..

நீங்க வந்ததுல பாருக்கு ரொம்ப சந்தோஷம்.. பாருக்கு மனுன்னா ரொம்ப பிடிக்கும்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

Chillzee Special "ஐ லவ் யூ" - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

அவங்களுமா.. எப்படி தான் இவ எல்லாரையும் மயக்குரான்னு தெரியல்ல.. நான் எல்லாம் எவ்வளவு பன்ன வேண்டி இருக்கு.. இவளுக்கு ரொம்ப ஈஸியா இருக்கு..

மனு எப்பவும் ஸ்பெஷல் தான்.. அவ எப்பவும் எல்லாரையும் ஒரே போலவே நினைப்பா.. ஒரே மாதிரி நடத்துவா.. எல்லார் கூடவும் அன்பா பழகுவா.. அவ முன்னாடி யாரையும் சோகமா இருக்கவிடமாட்டா.. அவள போல பேச யாராலையும் முடியாது.. செமயா பேசுவா..

ஆகாஷ் சில பேர் பேசரது தான் கேக்க ரொம்ப நல்லா இருக்கும்.. அவ பேசுனாலே போதும் மனசுக்கு இதமா இருக்கும்.. யார்கிட்ட எப்படி பேசணும்ன்னு அவளுக்கு நல்லாவே தெரியும்..

உண்மை தான்.. நான் மனுகூட பலவருஷம் இருக்கேன்.. அதனால அம்மூவ பத்தி எனக்கு நல்லா தெரியும்.. ஆனா நீங்க எங்க கூட கொஞ்சநாள் பழக்கம் தான் மனுவ பத்தி சரியா சொல்லறீங்க.. அம்மூ சொல்லரது போல அனுபவம் தான் எப்பவும் சூப்பர் சார்..

நாம அவங்க கூட பேசகூடாது ஸ்வீட்டி.. நாம கா விட்டிருக்கோம்.. சரியா..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.