(Reading time: 14 - 27 minutes)

சரிம்மா.. நீ சொல்லரமாதிரியே பேசலை.. போதுமா.. நீ சொல்லு உனக்கு என்ன வேணும்.. நான் பன்னி கொடுக்கரேன்..

எனக்கு இப்போ.. என அவள் தன் தாடையில் ஆள்காட்டி விரலை வைத்து மேலே பார்த்து யோசித்தவளை பார்த்தவருக்கு அழகு கொஞ்ச வேண்டும் போல இருந்தது..

என் அழகுடீ செல்லம் என்ன வேணும் கேளு.. அவளின் கன்னத்தை கிள்ளி கேட்டார்..

ஸ்வீட்டி.. நான் கேசரி கிளரேன்.. நீங்க காபி போடுங்க.. சரியா..

சரி.. நான் அதுகூட கிச்சடியும் செய்யரேன்..

எனக்கு டபுள் ஓகே.. ஸ்வீட்டி..

இருவரும் காய்கட்பன்னும் போது மனு அவருடன் ஓயாமல் வாய்யாடிக்கொண்டே இருந்தாள்..

அவரும் சரிம்மா.. ஆமான்டாகுட்டி.. என அவளுக்கு ஏற்ப தலை ஆட்டிக்கொண்டு இருந்தார்..

நான் சமையல் பன்னரேன்.. எப்படி பன்னும்.. அதை இதை என அவரை பாடாய் படுத்தினாள்.. ஒருவழியாக ஒருமணிநேர போராட்டத்திற்கு பின் சமையல் அறையை விட்டு இருவரும் வந்தனர்..

சமையல் அறையைவிட்டு வெளியே வந்த மனு.. அப்பாட.. என்ன வேளை.. என்ன வேளை.. சளித்துக்கொண்டே வந்து டைனிங்டேபிளில் அமர்ந்தாள்.. அவர் பின்னேயே அப்பாவியாக வந்து அமர்ந்தார் பார்வதி..

அவர்கள் இருவரையும் கன்னத்தில் கைவைத்துக்கொண்டு பார்த்துக்கொண்டு இருந்தனர் சிவாஞானமும்,ஆகாஷ்ம்..

இந்த சமையல் வேளையெல்லாம் ரொம்ப கஷ்டமான வேளைடாசாமி.. எப்படி தான் இதை தினமும் செய்யராங்களோ.. அப்பப்பா.. என தலையில் கையை வைத்துக்கொண்டாள்..

ரொம்ப சளிச்சுக்கர.. அப்படி என்ன வேளை செய்த நீ.. அம்மாவ தான் போட்டு பாடுபடுத்தி எடுத்தியிருக்கர.. பாவம் அவங்களை பாருடி பன்னி.. எப்படி அப்பாவியா இருக்கராங்கன்னு..

போடா எருமை.. உனக்கு என்னடா தெரியும்.. நான் ஒன்னுமே பன்னல.. என்ன ஸ்வீட்டீ நான் சொல்லரது சரி தானே.. முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு அவள் கேக்கவே..

அச்சோ.. தங்கபட்டு.. என்னடிம்மா.. நீ என்னை எதுவும் கஷ்டபடுத்தலடாம்மா.. என கொஞ்சவே..

போச்சு.. இவளோட இந்த முஞ்சிய எங்க தான் வாங்கராளோ.. எல்லாரையும் கவுத்தீரா.. ஓட்டவாய்..

போடா.. எருமை.. வவ்வவாவே.. அவனுக்கு அழகு காட்டிவிட்டு.. நீங்க வாங்க நாம சாப்படலாம்..

அய்யையோ.. இந்த ஆட்டத்துக்கு நான் வரமாட்டேம்பா.. எதுக்கு வம்பு நீங்க முன்னாடி சாப்பிட்டு நல்லாயிருந்தா நான் சாப்பரேன்.. என சிவஞானத்தைமாட்டிவிட்டான்..

அவர் செமஷாக்காகி ஏன்டா என்பது போல பார்க்க..

இந்த பக்கிய வீட்டுக்கு கூப்பிட்டீங்கல்ல.. என்ஜாய்.. என்ஜாய்.. என கண்ஜாடை காட்டினான்..

அவன்கிடக்குரான் குரு.. நானே சமைச்சது.. எப்படி இருக்குன்னு சாப்பிட்டு பார்த்து சொல்லுங்க.. நீங்களும் தான் ஸ்வீட்டி.. என இருவரையும் அமரவைத்து அவர்களுக்கு பயங்கர பக்தியாக அவள் சமைத்த கிச்சடின்னு அவளே சொல்லிகரதை தட்டில் வைத்து சாப்பிட சொன்னாள்..

இருவரும் அவள் செய்ததை மிகவும் ரசித்து உண்டனர்.. கண்ணில் ஆனந்தத்துடன்..

சூப்பாரா.. இவங்க இந்த வாங்கு வாங்கராங்ன்னா.. நம்ம மனுகுட்டி அவ்வளவு நல்லா சமைச்சிக்கா போல.. நாம இதை டேஸ்ட் பன்னியே ஆகனும்.. என அவன் அவள் சமைத்ததை சாப்பிட்டவனின் முகம் நவபாஷையும் காண்பித்தது..

இதை எப்படி இவங்களால சாப்பிட முடியுது.. ஒருவாய் கூட நம்மால உள்ள தள்ளமுடியல்ல.. என அவர்களின் முத்தை பார்க்கவே.. அந்த ஆனந்தம் அவனுக்கு என்னவோ கூறுவது போல இருக்க அமைதியானான்..

ஓய்.. நான் எப்படி சமைச்சு இருக்கேன்.. நல்லா இருக்கா.. சொல்லுங்க..

பின்னீட்ட அம்மூ.. அப்பா என்ன அருமை.. அங்க பாரு அவங்க ரெண்டுபேரும் மிச்சவைக்கமாட்டாங்க போல.. அவன் பெருமைபாட.. இவர்களும் அவனுக்கு ஆமாம் போட்டனர்..

நிஜமாவா.. எங்க நான் சாப்பிட்டு பாக்கரேன்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீனுவின் "மழையின்றி நான் நனைகின்றேன்" - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

ஐய்யையோ.. வேண்டாம் நாங்க மாட்டிக்குவோம்..

என்ன மாட்டிக்குவா..

அது.. மாட்டிக்குவோம் இல்ல.. காபி கூடி நாம கிளம்பலாம்.. இல்ல மாமாகிட்ட மாட்டிக்குவோம்ன்னு சொன்னேன்..

அது எல்லாம் ஒன்னும் சொல்லமாட்டாங்க.. இருங்க நான் காபி கொண்டுவரேன் எல்லாருக்கு என உள்ளே சென்றாள்..

அவள் உள்ளே செல்லவும்.. எதுக்குமா நீங்க ரெண்டுபேரும் இதை அப்படி ரசிச்சுசாப்பிறீங்க.. வேண்டாம் விடுங்க போதும்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.