(Reading time: 14 - 27 minutes)

என்னோட பொண்ணு சமைச்சிருக்கா ஆகாஷ்.. அதை நான் எப்படி குறை சொல்லுவேன்.. என பார்வதி கூறவே அவரின் வார்த்தையில் உருகியே போனான்..

பொதுவா பேச்சு வரும் போது எல்லாம் சொல்லுவங்க.. என்னோட பொண்ணு இன்னைக்கு தான் முதல்ல சமைச்சா.. அது அப்படி.. செம.. சூப்பர்ன்னு எல்லாம் சொன்னாங்க.. எனக்கு அதை அனுபவிக்க கொடுத்துவைக்கலைன்னு நினைச்சு இருந்தேன்.. இப்போ மனுகுட்டின்னால எனக்கு அந்த குறைதீர்ந்து போச்சு ஆகாஷ்.. மனசு நிறைஞ்சு இருக்கு.. எங்க பொண்ணு வீட்டுக்கு வந்திருக்காயில்ல.. வீடே கலகலன்னு இருக்கு.. இன்னைக்கு நாங்க நிம்மதியா தூங்குவோம் ஆகாஷ்..

சிவஞானம் வார்த்தையில் ஆகாஷ் நெகிழ்ந்தே போனான்.. பின் மனு காபி கொண்டுவர சிறிது நேரம் கலகலப்பாக பேசிவிட்டு விடைபெற்றனர் இருவரும்..

என்ன பாரு சந்தோஷமா..

மனசு நிறைஞ்சு இருக்கு சிவா.. அது சரி அவ எப்படி இங்க வந்தா..

என்கூட ஸ்டாப்ரூம் வந்தா புக்வாங்க.. அப்போ உன்னபத்தி கேக்கவே.. நான் நீ அவளை பாக்கனும்ன்னு சொன்னல்ல அதை சொன்னேன்.. உடனே ஒரே குதிதான்..

வாங்க வீட்டுக்கு போலாம்.. வாங்க வீட்டுக்கு போலாம்ன்னு..  அவளை சமாளிச்சு உன்னை பாக்க இங்க அழைச்சிட்டு வந்தேன்.. ரொம்ப குறும்பு..

அவ சேட்டைபன்னலைன்னா தான் கஷ்டமே.. அவ சிரிக்கும் போது அவ்வளவு அழகுங்க.. பேசியே ஆளைமயக்கிருவா..

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

ரொம்ப நல்ல பொண்ணும்மா..

அவ எப்பவும் சந்தோஷமா இருக்கணும்.. இப்படியே இவர்களின் உறவும் நல்லா தொடந்தது.. அழகான ஆழமான உறவாக.. இப்போ மனுவ பஸ் ஏத்திவிட தான் போராங்க.. அதுக்கு தான் இந்த அலப்பரை.. ஹாஹா உங்க பாசத்துக்கு ஈடே இல்ல போங்க பார்வதி..

உண்மை தாங்க.. பத்துமாசம் சுமந்துபெற்றாள் தான் தாயா.. இல்லை என யசோதா கண்ணன் மேல் வைத்திருந்த அன்பில் நிறுபித்தாளே.. இன்றளவும் அதை நம்மால் மாத்தமுடியவில்லையே.. அன்பு.. அன்பு தாங்க.. அதுக்கு எந்த தடையும், விதிமுறையும் இப்போவரையும் இல்லைங்க.. அப்படி தடையும், விதிமுறையும் போட்டால் அதற்கு பெயர் அன்பாகதே.. அப்படி ஒரு அற்புதமே இங்கு.. பார்வதி மனுவின் மேல் எல்லையில்ல அன்பைவைத்துள்ளார்.. மனுவும் குறைந்தவள் இல்லையே..

அண்ணா..

சொல்லுடா ஸ்வேகுட்டி..

நீங்க போயிட்டு எப்போ வருவீங்க..

ஒரு வாரம் தான்டா.. சீக்கரம் வந்திருவேன்டா.. சரி சொல்லு உனக்கு என்ன வேணும்.. அண்ணா வாங்கிட்டுவரேன்டா..

எனக்கு என்னோட ஆர்ஜே.மனு வாங்கரத வாங்கிட்டு வாங்க..

உனக்கு என்ன வேணும்ன்னு கேட்டா.. நீ என்ன பாப்பா சொல்லர.. அண்ணாகிட்ட என்ன வேணும்ன்னு சொல்லு..

விடு கார்த்தி.. உனக்கு என்ன வேணும்ன்னு சொல்லு..

மனுகிட்ட சொல்லி ஒரு செல்பி..

ஏன்டா.. உங்களுக்கு கேட்டா.. கர்னியவே இழுக்கறீங்க..

அது எங்களோட செல்ல ஆர்ஜே-வாச்சே அதான்.. என இருவரும் இணைந்து கூறவே.. அங்கே சின்ன சிரிப்பொழி..

நீங்க வர ஒருவாரம் ஆகுமா அபி அண்ணா..

ஆமான்டா குட்டி..

சரி.. போனா போகட்டும் இந்த ஒருவாரம் மட்டும் கார்த்தி அண்ணாவை மட்டும் தொல்லை பன்னீக்கரேன்..

அய்யோ.. என்னால முடியாது.. எனக்கு படிக்கனும்.. இல்ல அந்த பிரின்சி என்ன கொன்னுருவா..

பாப்பா.. நீ அவன் படிக்கும் போது மட்டும் எதுவும் பன்னாத.. அப்பரம் உன் இஷ்டம்.. ஓகே..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "நீயிருந்தால் நானிருப்பேன்" - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

எனக்கு டபுள் ஓகே.. அபி அண்ணா..

ஆனா எனக்கு ஓகேயில்ல..

உன்னை யாரும் இங்க கேக்கலை.. போ போய் அபி அண்ணாக்கு பேக்பன்னு..

உன்ன.. என ஸ்வேதாவை கார்த்தி துரத்தி விளையாடிக்கொண்டே அனைவரிடமும் விடைபெற்று அபி கிளம்பி இருந்தான்..

எப்படி ஊட்டி போராங்கன்னும்.. அங்க என்ன எல்லாம் நடக்க போகுதுன்னும் பொறுத்திருந்து பாக்கலாம்..

தங்களின் கருத்துகளுக்காக காத்திருப்பேன் தோழமைகளே.... 

தொடரும்

Episode # 06

Episode # 08

Go to Valentines day story main page

{kunena_discuss:1230}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.