(Reading time: 21 - 41 minutes)

தொடர்கதை - வேலண்டைன்ஸ் டே... - 06 - மகி

valentines

காதல்.. கல்யாணம்.. இது எல்லாம் ரொம்ப பெரிய விஷயம்.. இது இல்லாமலும் இருக்கமுடியாது.. இருக்கும் போதும் நிம்மதியா இருக்கவும் விடாது...  அதை அனுபவிக்கரவங்களுக்கு தான் தெரியும்..

யார் தன் கடைமையில் இருந்து தவறினாலும்.. சூரிய தேவர் தவறுவதில்லை என்பதை தெரியபடுத்தவே வேகமாக உதித்து எழுந்தார்..

வழக்கம் போல அவர் அவர் பணிகளை செய்தனர்.. காவியாவும் மனுவை எழுப்ப அவள் அறைக்குள் சென்றாள்.. அங்கே..

மெத்தையில்.. ஆகாவின் மடியில் குழந்தையை போல உறங்கிக்கொண்டு இருந்தாள் மனு.. ஆகாஷ் அவளின் தலையில் இடது கையும்.. வலது கையை மனுவும் பிடித்து அன்யோனமாயி உறங்கிக்கொண்டு இருந்தனர் இருவரும்.. அந்த அழகிய காட்சியை தன் போனில் படம் பிடித்துக்கொண்டாள் காவி..

யார் கூறினார்கள் அன்யோனமாக கணவன்,மனைவி மட்டுமே இருக்க முடியும் என்று.. மாசு மறு அற்ற எல்லா உறவுகளும் அவ்வாறே..அந்த அற்புத பந்தமே இருவர்குள்ளும்.. இவள் குழந்தையாகும் போது.. தாய்யானான்.. அடம்பிடிக்கும் போது.. தந்தையாய் வழிகாட்டினான்.. தவறுகள் செய்யும் போது.. தோழனாய் உடனிருந்தான்.. அவளின் முன்னேற்றத்திற்கு.. ஏணியாய் இருந்தான்.. அவள் எதிர்த்து போராடும் போது.. அரணாய் அவளை பாதுகாத்தான்.. அவளுக்கு அனைத்திலும் உடன் இருந்தவன்.. அவளுக்கு அனைத்துமாகிபோனான்.. யார் கூறியது கணவன் மட்டுமே கண்சாடையில் புரிந்து கொள்வான் என்று.. அவளின் ஒவ்வொரு கண் அசைவையும் அவனைபோல வேறோருவர் புரிந்து கொள்ள முடியுமோ.. இன்றுவரை வெல்ல ஒருவராலும் முடியவில்லை.. இனி வரகூடுமோ...

காவியா உள்நுழையும் அரவரத்தில் முழிப்பு தட்டியது ஆகாஷ்க்கு.. ஏய் காவி..

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

ஆகாஷ் அண்ணா.. என அவனை மென்மையாக அணைத்தாள்..

ஸ்கூல் போகலையா..

போகனும்.. மனுவ எழுப்ப வந்தேன்.. நீங்க தூங்குனது சோ கியூட்டா இருந்ததா.. அதான் போட்டோ எடுத்தேன்.. என்ன ஆச்சு.. ஏன் அவ உன் மடியில்ல தூங்கரா..

அவ எப்பவும் தூங்கரது தானே.. இப்போ என்ன புதுசா கேக்கர..

இல்ல நீ எங்கயாவது விட்டுட்டு போயிருவீயோன்னு உன் சட்டைய எப்படி கெட்டியா பிடிச்சிருக்கா பாரு.. அவள் கூற அவன் பார்த்த போது.. இருக்கி இருந்தாள் அவன் சட்டையை இவள் கையோடு..

அது ஒன்னும்யில்ல சும்மா.. ஒரு பேச்சு..

சரி அவளை எழுப்பு.. நேரமாகுது.. அவள் சென்றுவிட்டாள்..

அவள் தூங்குவதை பார்த்து மெல்ல புன்னகைத்தான்.. முதல் சந்திப்பிலே தாயாகிபோனவளை.. 8-வயதிலேயே தாய்,தந்தையரை பலிகொடுத்திருந்தான்.. அளவுக்கு மீறின செல்வம் இருந்த போதிலும்.. அன்பு இல்லாமல் இருந்தது.. எத்தனை நாட்கள் பட்டினியில் வாடியிருப்பான்.. அன்றும் அதே போல தான்.. பள்ளியில் உணவுநேரத்தில் தன் பிள்ளைக்கு ஊட்டிக்கொண்டு இருந்தாள் ஒரு தாய்.. அதை பார்த்தவனின் கண்களில் அவ்வளவு ஏக்கம்.. வலி.. எனக்கு ஒரு வாய் கிடைக்காதா என்று ஏங்கி பாத்திருக்கையில்.. அந்த குழந்தைக்கு தாயானவள் உணவை ஊட்டும் போது எல்லாம் இவனும் வாய் திறப்பான்.. ஒருதடவையேனும் ஊட்டமாட்டாகளா என்று.. இல்லை கடைசிவரை கிடைக்கவில்லை.. கண்ணீரோடு எழும் போது இடக்கையை பிடித்து உட்கார வைத்து தன் பிஞ்சுவிரலால் அன்னத்தை அளித்து அவனின் அன்னையாகி போனாள் மணிகர்னிகா.. அன்றிலிருந்து தாய் என்று கூறினால் இவள் முகம் மட்டுமே அககண்ணில் தோன்றும்.. அன்றிலிருந்து அவளும் இவனை தன் சேய்யாகவே பாவித்தாள்.. யாராவது கேட்டா கூட இவன் என்னோட பையன்னு மனு சொன்னது இப்பவும் இவன் காதுகளில் கேட்டது.. இனிமையாக இன்றுவரை...

இவளுக்கு என்ன ஆச்சு.. காதலை போல அற்புதம் வேற இல்லைன்னு சொல்லுவாள்.. நேத்து என்னடானா கல்யாணமே வேண்டாம்ன்னு சொல்லரா.. சரி மாமாகிட்ட சொல்லி பேச சொல்லனும்.. அதை அப்பரம் பார்க்கலாம் இப்போ இவளை எழுப்பனும்..

மனும்மா.. எழுந்துக்கோடாம்மா.. டைம் ஆச்சு எழுந்திரும்மா..

என்னவிட்டு போகமாட்டன்னு சொல்லு..

என்ன சொல்லரா என அவளின் முகத்தை பார்க்கும் போது தூக்கத்தில் உலருகிறாள் என்று தெரிந்தது..

நான் எங்கயும் போகலம்மா.. நீ எழு..

கண்ணை கசக்கியவாறே எழுந்து அமர்ந்தாள்.. மணி என்ன ஆச்சுடா டப்பா.. கலையாத உறக்கத்தில் கேட்டாள்..

காலேஜ் போர டைம் ஆச்சு.. எழுந்து கிளம்பு ஒன்னா போகலாம்..

ஆமா கேக்கனும்ன்னு நினைச்சேன்.. மீட்டீங் எப்படி போச்சு.. என்ன சொன்னாங்க..

நல்லா போச்சுடா..

அதை ஏன்டா இப்படி மூஞ்சியவச்சுகிட்டு சொல்லர..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.