(Reading time: 21 - 41 minutes)

மாமா.. எனக்கு என்னமோ மனுகுட்டி மனசுல்ல என்னமோ இருக்குன்னு தோணுது..

நீ கண்டதையும் போட்டு குழம்பாத.. நீ வா.. நீ லண்டன் தான் போர.. எப்ப வேணாலும் மனுகுட்டிகிட்ட பேசலாம்.. பார்க்கலாம்.. உலகம் சுருங்கி கைக்கு வந்தப்பரமும்.. லண்டன் போரத ஏதோ செவ்வாகிரகத்துக்கு போர மாதிரி படுத்தரான்..

மாமா..

நான் சொல்லரன்ல்ல வா.. ஒருவேல மனுகுட்டி மனசுல்ல எதாவது இருந்தாலும் அதை அவளா சொல்லாத வரைக்கும் நமக்கு தெரியாது.. உனக்கு மனுவ பத்தி தெரியும் தானே.. அவளே அந்த விஷயத்தை ஆராய்ந்து தீர்வை எடுக்கட்டும்.. நாம அவளுக்கு துணையா நிற்போம்..

சரி மாமா.. நீங்க சொல்லரது போலவே பண்ணரேன்.. பேசிமுடித்து இருவரும் உள்ளே வந்தார்கள்..

மனுவும் கிளம்பி கீழே வரவும்.. இருவரும் பெற்றோரிடம் விடைபெற்று கோவிலை நோக்கி சென்றனர்..

வழக்கம் போல கோவில் சென்று வழிபாடு முடித்து.. கடற்கரை மணலில் கால்பதித்து ஆகாவின் தோள்சாய்ந்து அமர்ந்திருந்தாள்..

அம்மூ..

டே டப்பா.. என்னோட மனசுல்ல என்னமோ இருக்கு தான் நீ சும்மா போட்டு குழம்பிக்காத.. நீ எங்க போனாலும் நம்ம அன்பு மாறாது.. கொஞ்சம் கஷ்டம் தான் நீ இல்லாம நான் எப்படி இருப்பேன்னு நினைச்சாலே தெரியல்ல.. ஆனா நான் சமாளிச்சுகரேன்.. நான் மனு.. மணிகர்னிகாகண்ணன்.. எதையும் தில்லா நின்னு ரெண்டுல்ல ஒன்னு பார்ப்பேன்.. நீ தேவையில்லாததையும் யோசிக்காத..

உனக்கு மட்டும் நான் என்ன நினைக்கரன்னு எப்படி டீ தெரியுது..

அதான் மனு.. என அவள் சொல்லி உற்சாகமாக புன்னகை பூக்கவே.. அவனின் முகமும் தெளிவு பெற்றது..

கடல்ல கொஞ்சம் ஆட்டம்.. அங்க இங்கன்னு ஆட்டம் போட்டுட்டு வீடுவந்து சேர்ந்தனர்..

வீடு வந்தவுடன் ராகுலிடம் கொஞ்சம் விளையாடிவிட்டு சாப்பிட போனார்கள்..

அம்மூ நீ சாப்பிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடு.. நான் பேகிங் எல்லாம் முடிச்சரேன்.. அப்பரம் நீ எழுந்ததும் கிளம்பி ஸ்டேசன் போகலாம் உன் புரோகிராம் முடிஞ்சதும் நாம கிளம்பளாம்.. அவன் பாட்டுக்கு ஒப்பித்துக்கொண்டே சென்றவனை..

கொஞ்சம் மூச்சுவிட்டுக்கோ டா..

எத்தனை மணிக்கு ப்பா போறீங்க.. கமலா கேட்கவே..

அம்மா 11.30-க்கும்மா..

என்னது 11.30-க்கா என அங்கு அதிர்ச்சியாக கத்தியவளை அவன் பொருட்டாகவும் மதிக்கவில்லை..

11.30-க்கு பஸ் எடுத்துருவாங்கம்மா.. எல்லாத்தையும் முன்னாடியே டைமிங் பன்னியாச்சு..

சாப்பாடு எதாவது செய்யனுமா.. எங்க தங்கரதா ப்ளான்..

சாப்பாட்டுக்கு ஆள் இருக்கு.. ரூம் எல்லாம் ரெடிம்மா..

எல்லாத்தையும் பத்திராமா பத்துக்கனும்.. பொண்ணுங்க எல்லைம் கூட வராங்கல்ல சாக்கரதை..

நாங்க பாத்துக்கரோம்மா.. எல்லாத்தையும் முன்னாடியே பிளான் பன்னீட்டோம்.. என்னோட பிஸ்னஸ் அரேஷ்மெஸ்கிட்ட தான் எல்லாம் ஒப்படிச்சிருக்கோம்.. நானும் அபியும் தான் எல்லாத்தையும் பாத்தோம்.. எங்களுக்கு எல்லாம் கிளியர் ஆகவும் தான் நாங்க செலக்டே பன்னினோம்.. ஒன்னும் பிரச்சனையில்லம்மா..

சாக்கிரதை.. சரி போய் ரெஸ் எடுங்க.. என்கவும் இருவரும் ரூம்மிற்கு சென்றனர்..

அம்மூ நீ தூங்கு..

ஏன் நீ எங்க போர.. என்கூடவே இருக்கனும்..

சரிடீ தாயே.. என அவளின் தலையை தடவியபடியே தட்டி கொடுத்தான்.. நிம்மதியாக உறங்கினாள்.. என்னமோ தெரியல்ல அம்மூ நீ எதையோ மனசுல போட்டு குழப்பிக்கர.. எனக்கு நம்பிக்கையிருக்கு நீ எடுக்கர எந்த ஒரு முடிவும் நிச்சயம் தப்பா இருக்காதுடாம்மா.. நீ இதே போல நிம்மதியா இருக்கணும் என்னோட செல்லகுட்டி என உறங்கிக்கொண்டு இருந்தவளிடம் பேசிவிட்டு நெற்றியில் முத்தம்வைத்தான்.. அதை ஆமோதிப்பது போல அவளும் புன்னகை பூத்தாள்..

அந்த நேரம் பார்த்து போன் வைப்ரேட் ஆக.. யாரு என பார்த்தவன் மந்தகாச புன்னகைவிட்டான்.. மனசுல என்ன நினைச்சானோ.....

சொல்லு மச்சான்..

என்னடா புதுசா இருக்கு..

ஏன் நான் அப்படி கூப்பிட கூடாத.. சரி விடு.. சொல்லு அபி..

ஏன்டா.. நீ எப்படி வேணாலும் கூப்பிடு.. என்ன பன்னீகிட்டு இருக்காங்க உங்க மனுகுட்டி..

டேய்.. அவ என்ன பன்னரான்னு தெரியனும்ன்னா நேராவே கேளு.. எதுக்கு இந்த வேண்டாத வேளை..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.