(Reading time: 21 - 41 minutes)

பின்ன.. எனக்கு டிரைன்னிங்க்கு போகனும் மனும்மா..

சரி.. போ..

மனும்மா.. லண்டன் போகனும்.. எனக்கு டிரைனிங்கு அங்க.. அது போக இரண்டுவருசம் அங்க இருந்து வேளைசெய்யனும்.. அப்போ தான் எல்லாம் கத்துகமுடியும்.. என்ன அங்கையே படிக்க சொல்லராங்க.. அப்போ தான் என்னால எங்க பிசினஸ் எல்லாத்தையும் பாத்துக்க முடியும்ன்னு சொல்லராங்க..

சரிடா.. அதுக்கு ஏன் நீ இப்படி இருக்கர..

அம்மூ உன்னைவிட்டு என்னால எப்படி இருக்கமுடியும் என அவள் மடியில் தலைவைத்தான்..

என்னடா பட்டு.. இப்போ மட்டும் அத்த,மாமா இருந்திருந்தா அவங்களும் உன்ன அங்க அனுப்பி தானே படிக்க வைப்பாங்க.. பின்ன என்ன..

ஆனா இப்போ தான் அவங்க இல்லைல்ல..

நான் இருக்கேன்லடா பட்டு.. என அவனின் தலையை கோதியவாரே மென்னையாக கூறினாள்..

அம்மூ..

எனக்கும் என்னோட இந்த பட்டு அவனோட இந்த சாம்ராஜ்யத்தை நல்லா நடத்தனும்ன்னு ஆசை இருக்காதா.. இந்த வயசுல்லையே நீ தன் சொந்த கால்ல நிக்கர.. அந்த வளர்ச்சிக்கு.. என்னோட பட்டுடோட வளர்ச்சிக்கு நான் தடையா இருப்பேன்னாடா குட்டி..

நீ சொல்லி நான் கேக்காம இருப்பேனாடாம்மா.. போரேன் அம்மூ.. கூறிவிட்டு கல்லூரி செல்ல சென்றவன்..

கதவுகிட்ட அவன் சென்றவுடன்.. பட்டு..

என்னடா அம்மூ..

இப்போவே போகதடா.. கொஞ்சநாள் பொறுத்து போரியா.. தாயானவள் ஏக்கத்தோடு கேக்கவே.. சேய்யானவன் உருகியே போனான்..

அம்மூ என அவளின் கையணைப்பில் சிறையில் சிக்கினான்..

அம்மூ உனக்கு கஷ்டம்னா நான் போகல..

அது சரி.. நாளைக்கு உனக்கு வரவ.. அம்மா பையன்னு சொல்லபோராங்க..

பின்ன இல்லையா.. மூன்றாம்குரல் கேக்கவே யார் என காணும் போது..

ஐஸ்.. வா.. என்ன மேடம் காத்து இந்த பக்கம் வீசுது.. ஒருநாள் கூட மாமாவ பார்க்காம இருக்க முடியலையா.. கிண்டல் தோணியில் கேக்கவே..

அச்சோ.. அண்ணி.. நான் சும்மா உங்கல பாக்க வந்தேன்..

ஓ.. நம்பிட்டேன்..

உண்மையாதான்.. உங்க கால்ல அடிபட்டுயிருக்குன்னு மாமா சொன்னாரா.. அதான் ஸ்கூல் போக முன்னாடி பாக்கலாம்ன்னு வந்தேன்.. இப்போ எப்படி இருக்கு அண்ணி..

ம்.. நல்லா இருக்கேன்.. இப்போ எல்லாம் நாத்தனார்னா பயம் இல்லாம போச்சு.. என்ன பண்ணரது என அவள் சலித்து சொல்லி முகம் சுருக்கவே..

அச்சோ.. நீங்க எனக்கு அண்ணி மட்டுமா.. மாமியாரும் தானே.. என்னன்னு சொல்லுங்க நான் இப்பவே செய்யரேன்..

ஹ.. அந்த பயம் எப்பவும் இருக்கனும்.. என்டா மகனே நான் சொன்னதுல உனக்கு ஏதாவது பிரச்சனையிருக்காடா.. அதிகாத தோரணியில் கேட்டாள்..

அய்யோ.. அம்மூ சொன்னதுக்கு மறுபேச்சேயில்ல.. பவ்வியமாக அவன் கூற..

 என்னது மறுபேச்சுயில்லையா.. அப்போ நான் என்ன பன்னாலும் நீ கேக்கமாட்டியா.. சரியா போச்சு ஐஸ்.. என்ன உன் மாமா இப்படி இருக்கான்.. இது சரியில்ல அவனுக்கு வந்து வேப்பிள்ளை அடி..

இதோவரேன் அண்ணி..

ஏன்டா மாமா உனக்கு எந்த பிரச்சனையும் இல்லையா.. எப்படி இருக்கும்.. பயம் விட்டு போச்சுயில்ல.. வா வா என அவனை தூரத்தி அடிக்கவே..

அய்யோ.. காப்பாத்துங்க.. அம்மூ காப்பாத்து.. அம்மூ காப்பாத்து என அவன் கதரலை அவள் காதில் வாங்காமல் கல்லூரி செல்ல தயாராக சென்றாள்..

அவள் சென்றவுடன்.. தன்னை அடிக்க தூரத்தியவளை கொத்தாக பிடித்தான்.. ரொம்பத்தான் அடிக்கர..

மாமா.. சாரி மாமா.. விடேன்..

அது அடிக்கும் போது தெரிஞ்சிருக்கனும்..

சும்மா அண்ணி சொன்னாங்கன்னு தான்.. அவங்க எப்படி இருக்காங்க மாமா..

நல்லா இருக்காடா..

மாமா.. அவங்க முகம் கொஞ்சம் சரியில்லாதது போல இருக்கு.. நீங்க அவங்களை எதுக்கும் கவனமா பாத்துக்க மாமா..

நான் ரொம்ப கொடுத்துவச்சன்னு அம்மூவையும், உன்னையும் பார்க்கும் போது தான் தோணும்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.