(Reading time: 21 - 41 minutes)

என்ன மாமா பெரிய வார்த்தையெல்லாம் பேசர.. அண்ணி உனக்கு மட்டும் இல்ல எனக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.. எங்க ஸ்கூல்ல பெரிய ரசிகர்பட்டாளமே இருக்கு அவங்களுக்கு..

அவளை யாருக்கு தான் பிடிக்காது.. எனக்கு அந்த லண்டன் புரோஜக்ட் கிடைச்சிருச்சு.. டிரைனிங் அங்க தான் அதனால என்ன அங்கயே படிக்க சொல்லராங்க.. நான் எப்படி போரது..

எனக்கு புரியுது.. அண்ணியவிட்டு போக மனசுவல்ல.. பேசாம அண்ணியையும் நீங்க கூப்பிட்டு போங்க..

அவ வரமாட்ட.. போக சொல்லீட்டா.. ஆனா இப்போ கொஞ்ச நாள் கழிச்சு போன்னு மனசேயில்லாம சொன்னா..

அப்படின்னா இந்த வருஷம் இங்கயே படிங்க.. அடுத்த வருஷம் அங்க கன்டன்யூ பன்னுங்க..

சரி.. நீ அம்மூ கஷ்டபடுவான்னு சொல்லி.. உன் கஷ்டத்தை மறைக்கரது.. எனக்கும் உன்ன போலவே வழிக்கும்டா..

மாமா நீ எங்க போனாலும் என்ன பன்னாலும் என்னோட மாமா.. எனக்கு நல்லாவே தெரியும் உனக்கு என்னவிட அண்ணி மேல பாசம் அதிகம்ன்னு.. அதுக்கா நான் என்னைக்கும் பொறாமைபடமாட்டேன் மாமா.. உன் சந்தோஷம் தான் எனக்கு எல்லாத்தையும் விட ரொம்ப முக்கியம்.. அதனால  நீ எனக்காக ரொம்ப கவலைபட வேண்டாம்..

ரொம்பத்தான்டி பன்னர என் மாமா பொண்ணே..

மாமா அம்மூ முகம் ஏன் ஒரு மாதிரி இருக்கு.. உண்மையான கவலையில் கேட்டாள்.. தான் உயிராய் நேசிக்கும் தன் மாமா இன்று உயிர்வாழ அவள் அல்லவா காரணம்.. எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் தூயஅன்பை அல்லவா அவர்கள் மீது அவள் வைத்துள்ளாள்..

மாமா நீ எப்படி அவங்களை அம்மா போல நினைக்கரியோ அதே போலத்தான் அவங்குக்கு நீ தான் முதல் பையன்.. பின்ன கேக்கவா வேணும்..

அப்படினா..

அப்படின்னா.. எப்பவும் அம்மாகளுக்கு பைசங்கன்னா ஒரு தனி பிரியம் எப்பவும்.. அதுவும் தன்னோட முதல் பையன்னா.. சொல்லவே வேண்டாம்.. எப்பவும் கொல்லை இஷ்டம் தான் மாமா..

இப்படி வேறயிருக்கா..

மாமா இன்னும் நிறையா இருக்கு.. பொண்ணுங்களை எப்பவும் புரிஞ்சுக்கவே முடியாது மாமா என கூறி கண்சிமிட்டினாள்..

ஏய்... அது எல்லாம் இருக்கட்டும்.. உனக்கு எப்படி இது எல்லாம் தெரியுது.. ஸ்கூலுக்கு படிக்கரதை தவிர மத்த எல்லாத்தையும் கத்துக்கர போல.. அவள் தலையில் இரண்டு கொட்டுவைத்தான்..

மாமா இது எல்லா பொண்ணுங்க மனசுல்லையும் இருகரது தான் மாமா.. அதை எல்லாரும் வெளிப்படையா சொல்லமாட்டாங்க..

அப்படிங்கலா மேடம்.. சரி.. என அவன் கூறிக்கொண்டே அருகில் வரவும்..

அவனின் மூக்கை கிள்ளிவிட்டு ஓடிவிட்டாள்..

சரியான கேடி.. என அவனும் கல்லூரி செல்வதற்கு தயாரானான்..

இப்படியும் அப்படியாக நாட்கள் வெகு விரைவாக நகர்ந்தன.. ஆகாஷ்,மனு,அபியின் நட்பும் நாள்பட வளர்ந்தன..

 மனுவும் அவளின் ரேடியோ.. ரசிகர்கள் என பயங்கர பிசி.. அதற்கிடையில் அவளுடைய கிரு மற்றும் ராகுலுடன் வேறு செல்ல கொஞ்சல்கள்.. அவளுடைய குருவிடமும் நன்கு பழக ஆரம்பித்தாள்.. இதற்கிடையில் அவளின் நண்பர் பட்டாளம் வேறு..

ஆகாஷ் அவனுடைய பிஸ்னஸ்.. மனு,ஐஸ் என அவனும் பயங்கர ஓட்டம்தான்..

அபியும் கல்லூரி தோழமை, அவனின் தம்பி,தங்கையின் சண்டைகள் என கலகலப்பாக ஓடியது..

எப்படியோ கஷ்டப்பட்டு முதலாம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்தனர்.. இதனால் தேர்வுகள் முடிந்து சுற்றுலா செல்ல ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்தது..

யாருக்கு என்ன கவலை இருந்தா நமக்கென்னனு.. எந்த கவலையும் இல்லாமல் இழுத்து போர்த்திக்கொண்டு உறங்கிகொண்டு இருந்தாள் மனு..

எப்பா சாமி.. இவள போல யாராலையும் தூங்கவேமுடியாது.. ஒருவேல கும்பகர்ணனோட ரிலேடிவா இருப்பாலோ.. அட்லீஷ் எதிர்வீட்டிலியாவது இருந்திருப்பா.. என கூறிக்கொண்டே அவளின் முகத்தில் இருந்து போர்வையை எடுத்தான் ஆகாஷ்..

தூங்கும் போது எவ்வளவு அழகா இருக்க என்னோட அம்மூ.. குழந்தை போல உறங்கியவளை பார்த்துக்கொண்டே அவளின் தலையை வருடி மெல்ல அவளின் நெற்றியில் முத்தம் வைத்தான்..

அம்மூ எழுந்துக்கோ.. தூங்குனது போதும்.. அவளை குழுக்கினான்..

தூக்கத்திலேயே.. போடா டப்பா என்னோட தூக்கத்தை கெடுக்க வந்துட்டீயா டா டப்பா..

தூக்கத்துல கூட என்ன வாய் பாரு.. ஓட்டவாய்.. ஒழுங்கா எழுந்துக்கா..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.