(Reading time: 21 - 41 minutes)

நான் ஒன்னும் அதை கேக்க போன் பன்னலை.. எல்லாம் ரெடி.. நீ என்ன பன்னீட்டு இருக்க..

அம்மூவ தூங்கவச்சேன் இப்போதான்..

என்ன தூங்க வைக்க அவங்க என்ன பாப்பாவா.. விட்டா தூக்கி வெச்சு கொஞ்சுவபோல..

நீ போன் பன்னரதுக்கு முன்னாடி வரை நான் அதை தான் பன்னிகிட்டு இருந்தேன்.. எப்பவும் எனக்கு அவ அப்படி தான்.. என் கைய பிடிச்சுகிட்டு தான் எப்பவும் தூங்குவா.. இதுல உனக்கு என்ன பிரச்சனை..

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

எனக்கு என்ன பிரச்சனை.. உன்னோட மனுகுட்டி நீ நல்லா கொஞ்சிக்கோ.. பேகிங் எல்லாம் முடிஞ்சதா..

ரொம்ப சளிச்சுக்காதடா மச்சி.. என்னோடது எல்லாம் ஓகே தான்.. மனுகுட்டிக்கு தான் இன்னும் பன்னல.. இதோ இப்போ எடுத்துவைக்கனும்..

என்ன.. அவளுக்கு நீ பேக் பன்னனுமா...

அதுக்கு ஏன்டா இப்படி கத்தர.. காது வழிக்குது... நான் தான் எப்பவும் மனுகுட்டிக்கும் பேக் பன்னுவேன்..

ஏன்டா.. செல்லம் கொடுக்கலாம்.. அதுக்குன்னு இப்படியா செல்லம் கொடுப்ப..

நீ வேர.. நானாவது பராவயில்லை.. இன்னும் மாமா,அத்தைஸ், கவி, ஐஸ்-ன்னு எல்லாரும் இன்னும் செல்லம்.. அவ எங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சமான செல்லம்..

ரொம்ப செல்லம் கொடுத்து கெடுத்து வச்சுருக்கீங்க.. எத பத்தியும் பயமேயில்ல.. யாரை பத்தியும் கவலையில்ல..

இப்போ மனு யாரை கஷ்டபடுத்தினா கவலைபடரதுக்கு.. அவளுக்கு நாங்க எல்லா உரிமையும், சுதந்திரமும் கொடுத்தாலும் அவ அதை இப்போ வரை தப்பா பயன்படுத்தினதும் இல்லை.. அவ யாரையும் கஷ்டபடுத்தினதும் இல்லை..

யப்பா.. சாமி.. தெரியாம சொல்லீட்டேன் உங்க மனுகுட்டிய.. விட்டிருடா..

ஹாஹா.. பொழச்சு போ.. அவளுக்கு எல்லாத்தையும் நானே பன்னி பழகிருச்சு அதான்..

சரி.. கர்னி இப்போ எப்படி இருக்கா.. என்ன திடீர்ன்னு உன்னவிட்டு விழகமாட்டேன்னு இருக்கா.. எதையாவது பாத்து பயந்துட்டாளா..

இல்ல அபி.. நான் லண்டன் போகனும்.. அங்க தான் இனி இருக்க போரேன்.. நான் இதுவரைக்கும் மனுவ பிரிஞ்சு இருந்ததேயில்ல.. எங்க ரெண்டு பேருக்கும் இது தான் முதல் தடவை..

டேய்.. லண்டன் தானே போர.. இதனால என்ன..

நான் அவளைவிட்டு ரெண்டு நைட் கூட பார்க்காம இருக்கமுடியாதுடா.. எவ்வளவு வேளை.. எங்க போனாலும் இதே தான்.. அதான் அவளுக்கு வருத்தம்..

ம்.. புரியுது.. உனக்கு சரி.. கர்னிக்கும் சரி.. உங்களுக்கு நீங்க தான் முதல்ல.. எனக்கு உங்களை பார்த்தா ரொம்ப பிடிக்கும்.. அதுவும் உங்க இந்த உறவு எனக்கு எப்பவும் ரொம்ப பிடிச்சமான ஒன்னு.. நான் அப்போ சும்மா கிண்டல் பன்னேன்..

எனக்கு தெரியும்.. அதான் உன்கிட்ட மனுகுட்டிய பத்தி பகிர்ந்துகிட்டேன்..

சரி எல்லாம் சொல்லீட்ட தானே.. லேட் பன்னாம வந்திருங்கடா..

பாத்துக்கலாம்டா.. என் மனுகுட்டி இல்லாம பஸ்ச எடுத்துவாங்கலா.. ஒரு கை பாத்துரமாட்டேன்..

அதுசரி.. நீ பன்னாலும் பன்னுவ.. கிளம்பி வாங்க.. நான் கொஞ்டநேரம் தூங்கரேன் ரொம்ப டையடா இருக்கு..

நீபாரு.. நான் வேளையமுடிச்சிட்டு.. கிளம்பும் போது சொல்லரேன்..

இருவரும் விடைபெற்று அவர்கள் வேளையை தொடர்ந்தனர்..

தங்களின் கருத்துகளுக்காக காத்திருப்பேன் தோழமைகளே.... 

தொடரும்

Episode # 05

Episode # 07

Go to Valentines day story main page

{kunena_discuss:1230}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.