(Reading time: 14 - 28 minutes)

தொடர்கதை - வேலண்டைன்ஸ் டே... - 05 - மகி

valentines

ரவின் இனிமையுடன்.. பாடலை கேட்ட சுகம் அனைவருக்கும் பிடித்து இருந்தது..

ஏங்க மனுகுட்டி என்ன அழகா பேசுனாயில்ல..

ஆமா.. ரொம்ப அழகா பேசுரா.. அவ கொஞ்சவாய் தான்.. ஆனா பாத்தா சின்ன பொண்ணு போல இருக்கா.. எவ்வளவு பெரிய விஷயம் எல்லாம் பேசரா..

பின்ன யார்கிட்ட எப்படி எப்படி பேசனும்ன்னு எல்லாம் அவளுக்கு நல்லா தெரியும்.. ஆனா என்ன கொஞ்சம் வாலு..

நீ இதுவரை ஏன் அவள பார்க்க முயற்சி பன்னல பாரு செல்லம்...

எங்க அவளை பார்த்தா.. என்கூடவேவான்னு சொல்லீட்டன்னா.. எனக்கு அவளை பார்த்துட்டு அனுப்பிவைக்க முடியாதுங்க..

மனுகிட்ட பேசு செல்லம்.. உன்மனசுல்ல இருக்கரதை பகிர்ந்துக்க.. அவ உனக்கும்.. உன் மனசுக்கும் நல்ல துணையா இருப்பான்னு எனக்கு தோணுதுடா..

கண்டிப்பா.. பார்க்கணும் சிவா..

சரிடாம்மா.. நேரம் ஆகுது தூங்களாம் வா.. என அழைத்துக்கொண்டு உறங்கச்சென்றார்..

வாவ்... வாவ்... ரொம்ப சூப்பரா இருக்கு அண்ணா.. எவ்வளவு அழகா பேசராங்க.. காதலை பத்தி ரொம்ப நல்லா பேசுனாங்க..

பின்ன எங்க ஆர்ஜே மனுன்னா சும்மாவா.. எங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும்ன்னா அது சாதார்னமா.. அவங்க எப்பவும் சூப்பர் தான் என்னோட அண்ணாஸ்.. அவ்வளவு ஆனந்தமாக கூறி குதூகளித்தாள்..

ஆமா பாப்புகுட்டி.. உங்க ஆர்ஜே மனு ரொம்ப சூப்பர் தான்.. இன்னில இருந்து நானும் அவங்களோட விசிறி.. எவ்வளவு அழகா காதலை பத்தி பேசராங்க.. சோ ஆசம்... நீங்க என்ன சொல்லறீங்க அண்ணா என கேட்ட பின்பே நினைவுலகத்திற்து வந்தான் அபி..

கார்த்திக்காக வெறுமனே ம் ரொம்ப நல்லாபேசுனா என்பதோடு நிறுத்தினான்..

சரிண்ணா நான் போயி கொஞ்ச நேரம் படிச்சிட்டுவரேன்..

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

இப்போ தான் தூக்கம் வருதுன்னு சொன்ன.. திரும்பவும் படிக்க போறீயாடா..

நம்ம ஆர்ஜே மனு பேசுனதுல்லயே எனக்கு பயங்கர எனார்ஜி வந்திருச்சு.. இதமா இருக்கு.. மனசுலேசாயிருச்சு.. கொஞ்சம் மட்டும் படிச்சிட்டு வந்தரேன்.. அவன் படிக்க சென்றுவிட்டான்...

வாவ் என்னோட ஆர்ஜே மனு ரொம்ப நல்லா பேசுனாங்க.. செம ஹோப்பி.. சரி நான் போயி தூங்கரேன் என தன் இரு அண்ணன்களிடமும் விடைபெற்று சென்றாள்..

தனிமையில் இருந்த அபிக்கு தூக்கம் பிடிபடுவதாய் இல்லை.. அவளின் அந்த காந்தகுரலே அவன் செவிகளில் கேட்டுக்கொண்டே இருந்தது.. எவ்வளவு முயன்றும் அவளின் புன்னகைமுகம் மட்டுமே மனக்கண்ணில் வந்து நின்றது..

உன்னுடைய குரலில் காந்தம்

உள்ளது பெண்ணே..

அந்த குரலை கேட்போர் அனைவரும் கட்டுண்டு

 நிற்கவைக்கிறது பெண்ணே..

என்ன தவம் இருந்து பெற்றுவந்தாயோ இந்த வரத்தை

தெரியவில்லையே பெண்ணே...

எதற்கும் சஞ்சலப்படாத என் மனம் ஏன் உன்னை மட்டும் காணும் போது என்னிடம் இருந்து என் கட்டுபாட்டை இழக்கிறதே..

ஆனா இது காதல்தான்னு எப்படி தெரியும்.. வெறும் ஈப்பாக கூட இருக்கலாம் இல்லையா..

வேர எந்த பெண்ணையும் பார்க்கும் போது ஏற்படாத ஒரு உணர்வு அவளை பார்க்கும் போது ஏற்படுதே..

லவ் அட் ப்ஸ்ட் சைட்ன்னு சொல்லுவாங்க.. அது எந்த அளவு உண்மைன்னு தெரியவில்லையே..

இப்போ தானே பழக தொடங்கி இருக்கோம்.. கொஞ்சம் மெச்சூரிட்டி வரட்டும்..என்னோட சொந்த கால்ல நான் நிக்கனும்.. எவ்வளவு கனவு இருக்கு.. வீணா மனசஅலை பாய விடாதே அபி.. மனு உனக்குன்னு இருந்தா அதை தடுக்கயாரால முடியும்..(நாம நினைக்கரது தான் நடக்கும்ன்னு என்ன இருக்கு.. பாக்கலாம் அபி நினைக்கரது நடக்குதான்னு...)

மிகுந்த உற்சாகத்துடன் வீட்டின்னுள் நொண்டிக் கொண்டே சென்றாள்..

அங்கு அவள் நினைத்து போலவே கமலா சோபாவில் மகளின் வரவுக்காக காத்திருந்தார்..

என்ன மிசஸ்.கேகே தூக்கம் வர்லையா.. இங்க என்ன பன்னிட்டு இருக்கீங்க..

ம் பேசுவடி..பேசுவ.. ஏன் பேசமாட்ட.. பாவம் என்னோட பெண்ணு பசியில்ல வருவான்னு சூடசமைச்சு வச்சு காத்திருந்தா.. நீ இன்னும் பேசுவ.. என அவர் முகத்தை திப்பிக்கொண்டு கோவம் போல கூறி திரும்பும் போது அங்கு மனுவை காணவில்லை.. எங்க இன்னும் அவ வர்லையோ.. என நினைத்து வாசலை பார்க்கும் போது.. சிரித்துக்கொண்டே ஆகாஷ் உள்ளேவந்தான்..

என்னம்மா நீங்க அவகிட்ட சாப்பாடு பத்தி பேசுனதுக்கு அப்பரமும் அவ இங்க இருப்பாளா.. எப்போவோ போயிட்டா.. அங்க பாருங்க.. அவரின் தோழிலில் கைபோட்டு உடன் அழைத்து வரும் போது சாப்பாட்டை ஒரு வெட்டு வெட்டிக்கொண்டு இருந்தாள் மனுகுட்டி..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.