(Reading time: 14 - 28 minutes)

மனும்மா.. நம்ம நட்பை எல்லாரும் நல்ல எண்ணத்துல தான் பார்ப்பாங்கன்னு இல்லடாம்மா..

ஏன் நாம சின்னவயசுல்ல இருந்து ஒன்னா இருக்கோம்.. ஒரே ரூம்ல கூட தூங்கியிருக்கோம்.. ஆனா இப்போவரை அதை யாரும் தப்பு சொல்லலையே..

அது நம்ம வீட்டுல இருக்கரவங்க தான் எதுவும் சொல்ல.. மத்தவங்க பாத்தா தப்பா தான்டாம்மா பேசுவாங்க.. ஏன்னா என்ன இருந்தாலும் நீ பொண்ணு.. நான் பையன்.. இது தான் எல்லாருக்கும் பொது.. இதை நீயில்ல நான் இல்ல யாரும் மாத்த முடியாதுடாம்மா..

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

இல்ல நீ சொல்லர மாதிரி தான்னா எனக்கு கல்யாணமே வேண்டாம்.. நான் உங்க கூடவே இருந்தரேன்..

அதுசரி.. ஏன்டி செல்லம் அப்படி சொல்லர.. எப்படி நம்மல ஐஸ் புரிஞ்சுகிட்டாளோ.. அதே போல உன்ன புரிஞ்சுகரவானா பாத்துட்டா போச்சு என்ன..

இல்ல இதுவரைக்கும் அப்படி யாரும் இல்லை.. நான் சொன்னது தான் எனக்கு கல்யாணமே வேண்டாம்..

சரி இப்போ ஏன் இந்த பேச்சு.. அதை அப்பராமா பாத்துக்கலாம்.. நீ பாலை குடி என அவளை குடிக்கவைத்தான்..

ஆகா.. என் கூடவே இருடா எங்கையும் போகாத..

நான் டம்ளர்வைக்க தான் போரேன் கைய விடுடாம்மா..

மாட்டேன்..

என்ன நீ இன்னைக்கு இவ்வளவு அடம் பிடிக்கர.. சரி என அவன் புன்னகையுடன் அங்கேயே டம்ளரை வைத்துவிட்டு அவள் அருகில் அமர்ந்து அவளுக்கு தலைகோதி உறங்கவைத்தான்.. அவன் மடியில் அவன் தலைகோதலிலும் அமைதியாக கண்ணயர்ந்தாள் மணிகர்னிகா..

அமைதி.. புயலுக்கு முன் அமைதியோ..... இவள் மனதில் ஏற்பட்ட ஒரு பாதிப்பு இவள் வாழ்வையே மாற்றிவிடுமோ.. சொல்லுவாங்கல்ல சாது மிரண்டா காடு பொல்லாதுன்னுவாங்க...

தங்களின் கருத்துகளுக்காக நான் காத்திருப்பேன் தோழமைகளே.... 

தொடரும்

Episode # 04

Episode # 06

Go to Valentines day story main page

{kunena_discuss:1230}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.