(Reading time: 14 - 28 minutes)

அவங்களுக்கு ஐஞ்சு வருஷம் முன்ன கல்யாணம் ஆச்சு.. ரொம்ப செல்லம்.. ஒரே பொண்ணா ரொம்ப அழகா கல்யாணம் பன்னி வெச்சாங்க.. அவங்களலால இப்போ எல்லாம் அம்மா,அப்பாவ பார்க்க கூடவரதுயில்ல..

கல்யாணம் ஆனா அப்படி தான்டாம்மா.. அதுக்காக பாசம் இல்லைன்னு ஆகுமாடாம்மா..

இல்லைடா நான் கௌரி அக்காவ போனவாரம் பார்த்தேன்டா..

இது எப்போடாம்மா..

அது நீ ஒரு மீட்டீங்கின்னு போனல்ல.. அப்போ எனக்கு மனசு என்னமோ போல இருந்தது அதனால கோவிலுக்கு போனேன் அங்க தான் பாத்தேன்.. அவங்க ரொம்ப மனசு ஒடிஞ்சு இருந்தாங்கடா டப்பா..

என்னடாம்மா சொல்லர.. அப்படி என்ன ஆச்சு.. நல்லாதானே இருந்தாங்க.. இப்போ அவங்களுக்கு நாலுவயசுல்ல பாப்பா கூட இருக்கேடாம்மா..

எல்லாம் உண்மை தான்டா.. ஆனா மனசளவுல அவங்க ரொம்ப உடைஞ்சு இருக்காங்க.. இங்க அந்தக்கா இருந்த வரைக்கும் எப்படி இருப்பாங்க.. இப்போ அப்படியே வேறமாதிரி இருக்காங்கடா அவங்க தோற்றம் இன்னும் என் கண்ணுமுன்னாடியே இருக்குடா..

என்ன ஆச்சுடாம்மா.. எதாவது கொடுமைபன்னராங்களா..

தெரியல.. அதை எப்படி சொல்லரதுன்னு தெரியல.. நான் கோவிலுக்கு போனேன்னா அப்போ..

ஹாய் கௌரி அக்கா.. இங்க என்ன பன்னரீங்க.. ஏன் வீட்டுபக்கமே வரதுயில்ல கேட்டுக்கொண்டே அருகில் அமர்ந்தாள்..

எப்படி இருக்கர மனுகுட்டி.. தனியாவா வந்த..

நான் சூப்பர் அக்கா.. ஆகாஷ் இல்லை அதான் தனியா வந்தேன்.. இல்லைனா யாரு தனியாவரது..

அதுவும் சரி தான்டா.. இப்போ தான் இந்தமாதிரி சுதந்திரமா போகமுடியும்.. ஸ்கூல் முடிஞ்சதுல்ல.. அடுத்து என்ன பன்னலாம்ன்னு இருக்க..

ஏன்க்கா ஏதோ போல பேசர.. நீ முன்ன போல இல்லக்கா..

முன்னபோல எதுவும் இல்லடா..

உன்மனசுல என்னக்கா இருக்கு.. என்கிட்ட பகிர்ந்துக்க.. உனக்கு கொஞ்சமாது பாரம் குறையும்..

மனுகுட்டி..

என்ன பிரச்சனைக்கா..

நான் கல்யாணமே பன்னியிருக்க கூடாதுடா..

ஏன்க்கா மாமா எதாவது பிரச்சனை பன்னராரா..

அந்த மனுசனும் என்ன பன்னுவான்.. என்னோட கனவுகளை அவர் இதுவரை காதுகொடுத்து கூட கேக்க நேரம் இல்லடா.. எனக்கும் வீட்டுவேலை, பாப்பாவ பாத்துக்கரது, அத்த,மாமாவ பாத்துகரது, அவருக்கு வேண்டியத செய்யரது.. இப்படியே போகுது..

ஆனா இதை எல்லா பெண்களும் தானே செய்யனும்.. இது எல்லா பெண்களும் கடமையா தானே செய்வாங்க.. இது தானே அன்பு.. அவங்க உங்க குழந்தை, உங்க மாமா,மாமி, உங்க கணவர் தானே..

ஆமாம்டா.. இவங்க எல்லாரும் என்னோட சொந்தம் தான்.. ஆனா நான் அவங்களுக்க எல்லாருக்கும் ஒரு வேலைக்காரியா போயிட்டேன்னு தான் கொஞ்சம் வருத்தமா இருக்கு.. என்னோட அப்பா, அம்மாவ பார்க்க கூட முடியல்ல.. என்னோட நண்பர்களை கூட நான் பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு தெரியுமா.. பார்க்கரத விடு நான் அவங்க கிட்ட எல்லாம் பேசியே எவ்வளவு நாள் ஆச்சு தெரியுமா.. எப்பவாது தான் நேரம் இருக்கும், மனசே ஒரு நிலையில்ல இல்லாம இருக்கும் அப்ப தான் இங்க வந்து கொஞ்சம் நேரம் உட்காந்திருப்பேன்.. உனக்கு ஒன்னு தெரியுமாடா.. எனக்கு இதை எல்லாம் இல்லாம சந்தோஷமா, சுதந்திரமா ஒரு நாளாவது எனக்காக நான் வாழனும்ன்னு தோணுதுடா.. என கூறி விரக்தி புன்னகையுடன் விடைபெற்றாள் அக்கன்னிகை..

உனக்கு ஒன்னும் தெரியுமாடா அவங்க பேசும் பேது நான் அவங்க கண்ணை மட்டும் தான் பார்த்தேன்.. அதுல அவ்வளவு வலி தெரிஞ்சது.. அதே சமயம் அவங்க நான் எனக்காக ஒருநாள் வாழனும்ன்னு சொல்லும் போது அந்த கண்கல்ல அவ்வளவு எதிர்பார்ப்பு, அவ்வளவு ஆசை.. அதை பார்த்ததுல இருந்து எனக்கு மனசு என்னவோ போல இருக்குடா.. கல்யாணம்ன்னா அவ்வளவு கொடுமையானதா என்ன.. என்னவோ போ.. நீ எப்பவும் என்கூட தான் இருக்கனும்..

ஏன் அவங்க எதுக்காக எல்லாத்தையும் இழக்கனும்.. அவங்க வேளைய பொறுத்து நேரத்தை ஒதுக்க வேண்டியதுதானே..

இல்லடா.. அதுக்கும் அந்த மாமா எவன் கூட பேசரன்னு சண்டைக்கு வரராமா.. ரொம்ப கஷ்டமா இருக்கு..

மனுகுட்டி.. எல்லார் வாழ்க்கையும் ஒரே போல இருக்காதுடாம்மா.. கல்யாணம் ஆனா என்ன செல்லம் நாம தினமும் பேசலாம்.. அப்போ அப்போ சந்திக்கலாம்டாம்மா..

என்ன அப்போ அப்போ சந்திக்கலாமா.. நீ என்கூட தான் எப்பவும் இருக்கனும்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.