(Reading time: 14 - 28 minutes)

ஏய் ஓட்டவாய் மெதுவா சாப்பிடு விக்கிக்க போகுது.. அப்பரம் நான் யார்கிட்ட சண்டைபோடரது..

போடா தகரடப்பா.. எப்போ பார்த்தாலும் நான் சாப்பிரதயே கண்ணுவைக்கரது.. அவனுக்கு பழுப்பு காட்டிவிட்டு தன் வேலையை தொடங்கினாள்..

நீயும் உட்கார்ப்பா சாப்பாடு எடுத்து வைக்கிறேன்..

சீக்கரம் வையுங்க அத்தை.. இல்ல இவளே எல்லாத்தையும் முடிச்சிருவா.. அவளை வம்பலந்தபடி உணவு உண்ண தொடங்கினான்..

ரெண்டுபேரும் அடிச்சுக்காம சாப்பிடுங்க .. திங்கர சோறு எப்படி உடம்புல ஒட்டும்.. பேசாம சாப்பிடுங்க..

பாரு உன்னால தான் மிசஸ்.கேகே என்னை திட்டராங்க தகரடப்பா..

அய்யோ சாமி.. இல்லைன்னா நீங்க ரொம்ப சமத்தா இருப்பீங்க.. யார்கிட்ட கதைவிடர..

அப்போ நான் சமத்து இல்லைன்னு சொல்லரீய குரங்கு..

யாரு நான் குரங்கா.. கண்ணாடி முன்னாடி போயி பாரு யார் குரங்குன்னு தெரியும்..

நான் ஏன் அவ்வளவு தூரம் போகனும்.. அதான் முன்னாடி நீ இருக்கீயே தெரியாதா..

நான் மனுஷன்டா செல்லம்.. நீ தான் குரங்கு.. அதுவும் வாலே இல்லாம சேட்டை பன்னர குரங்கு.. அவன் கூறவும் அவ்வளவு நேரம் பிடித்து வைத்திருந்த பொறும்மை காற்றில் பறந்து போனது மனுவிற்கு..

யார பாத்து வால் இல்லாத குரங்குன்னு சொல்லர.. பன்னிகுட்டி.. கூறிக்கொண்டே அவனை நாலு மொத்தல் கொடுத்தாள்..

அச்சோ இவங்க எப்போ சண்டைய முடிக்கரது.. நாம சொல்லரத ரெண்டுல ஒன்னாது கேக்குதா.. கன்னத்தில் கை வைத்துக்கொண்டு அவர்களை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்து கொண்டார்..

என்ன செல்லம் இங்க நடக்குது.. பயங்கர என்ஜாய்மெண்ட் போல என கூறிக்கொண்டே அவரை பார்த்து கண்ணடித்தார் கண்ணன்..

சும்மா இருங்க நீங்க வேர..

என்ன செல்லம் ரொம்ப சலிச்சுக்கர... அப்படி என்ன ஆச்சு..

இங்க இவங்கள பாருங்க.. வந்ததுல இருந்து சண்டை தான் போடராங்க.. இவங்களுக்கு எவ்வளவு சொல்லியும் கேக்கமாட்டீங்கராங்க..

அவங்களை விடு செல்லம்.. நீ ஏன் இவ்வளு நேரம் முழுச்சு இருக்க..

மனு வர வரைக்கும் காத்திருந்தேன்.. இவங்க வந்துல இருந்து சண்டை மட்டும் தான் போடராங்க..

அதுக்கு நீ ஏன் செல்லம் உன்முகத்தை இப்படி வச்சுருக்க.. கொஞ்சமே சிரியே..

ஏங்க நான் இங்க என்ன சொல்லிகிட்டு இருக்கேன்.. நீங்க என்ன சொல்லரீங்க.. ஏன் என் முகத்தை பார்க்கரீங்க அவகள பாருங்க..

போ.. செல்லம் எனக்கு உன்முகம் மட்டும் தான் தெரியுது.. அதுக்கு நான் என்ன பன்னரதாம்..

அது சரி.. இப்போ தான் உங்களுக்கு இளமை திரும்புது.. இன்னும் கொஞ்சராரு.. உங்க பொண்ணே எவ்வளவு பெருசா இருக்கரா பாருங்க..

ஏன்டி இப்போ நான் உன்ன கொஞ்சரதுக்கும்.. அவளுக்கும் என்னடி சம்மந்தம்..  நீ என்னோட பொண்டாட்டி.. நான் எப்போ வேணாலும் கொஞ்சுவேன்..

வர வர நீங்க ரொம்ப பன்னரீங்க.. மனுவ விட உங்கல சமாளிக்கரது தான் ரொம்ப கஷ்டம்..

ஏதுக்குடி இப்படி பேசர.. லவ் பன்னரது தப்பா.. அதுவும் தன் சொந்த பொண்டாட்டிய கொஞ்ச நேரம் கூட கொஞ்சவிட மாட்டேங்குராங்க.. என்ன கொடுமைடா..

அது சரி.. அப்பாவுகும், பொண்ணுகும் பேச சொல்லியா கொடுக்கனும்..

முன்னல்லாம் நான் பேசுனா வெட்கபட்டு சிரிப்ப.. இப்போ எல்லாம் தள்ளியே வைக்கர.. போடி என அவர் முகத்தை திருப்பி அமர்ந்து கொண்டார்..

இப்போ எதுக்கு கோவமா என் கண்ணனுக்கு..

சொல்லமாட்டேன் போடி..

டேய்.. என்ன இன்னைக்கு இத்தன தடவை டி போட்டு கூப்பரீங்க..

ஆமான்டி என் பெண்டாட்டி நான் அப்படி தான்டி கூப்பிடுவேன் டி.. யாரு கேட்பாங்க..

நிஜமா நாங்க எதையும் கேக்கலைப்பா.. கோரஸ்சாகமனுவும்,ஆகாஷ்ம் கூறவும் தான் அவர்களை கவனித்தவர்கள்.. அட இவங்களை மறந்துட்டோமே என தன் தலையில் தட்டிக்கொண்டார் கமலா..

என்ன மிஸ்டர்.கேகே ராத்திருல கூட ரொமான்ஸ்சா.. கலக்குரீங்க..

அடிங்.. இவ்வளவு நேரம் நீங்க ரெண்டும் அடிச்சுகிட்டு இருந்துட்டு இப்போ வாய் பேசரத பாரு..

நாங்க எப்போதான் சண்டை போடாம இருந்தோம்.. ஆனா அந்த சந்தடி கேப்புல கூட நீங்க ரொமான்ஸ் பன்னரீங்கல்ல..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.