(Reading time: 14 - 28 minutes)

ஆமான்டி என்னோட புருஷன்.. நாங்க பேசுவோம்.. நான் சோகமா இருக்கவும் தான் வந்து கேட்டாரு.. நாங்க ஒன்னும் ரொமான்ஸ் பன்னல.. அப்படியே பன்னுனாலும் என்ன தப்பு.. என்னங்க நான் சொல்லரது சரிதானே.. கணவரை பார்க்க அவர் விழிவிரித்து அவர் கூறுவதை காதலுடன் பார்த்துக்கொண்டு இருந்தார்..

நீ என்ன சொன்னாலும் சரி செல்லம்..

ஐய்யோ மிஸ்டர்.கேகே இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி தான் நீங்க முகத்தை திருப்பிகிட்டு உட்காந்தீங்க.. அதுக்குள்ள இப்படி சரண்டர் ஆகீட்டீங்க..

இது எல்லாம் அரசியல்ல சாதாரணம்ப்பா.. இப்போ உங்க பஞ்சாயத்துக்கு வர்லாம்.. எங்களுடையதை நாங்க அப்பரமா தீத்துக்கரோம்.. சொல்லுங்க இப்போ ஏன் இந்த சண்டை.. அதுவும் என்னோட செல்லத்தை சோகமா உட்காரவச்சுகிட்டு..

நீங்களே சொல்லுங்க மாமா.. மனு வாலு இல்லாத குரங்கு தானே சொன்னா என்கிட்ட சண்டைக்கு வரா..

யாருடா வாலு இல்லாத குரங்கு.. நீ தான் பன்னி..

அட இது தான் உங்க பிரச்சனையா.. ரெண்டுபேரும் சொல்லரது சுத்தமான உண்மை தானே.. அப்பரம் ஏன் அடிச்சுகரீங்க.. சாப்பிட்டு போயி தூங்குங்க.. நீ வா செல்லம்.. அவங்களுக்கு புரிஞ்சிருச்சு நம்மல கொன்னுருவாங்க.. அதுக்குள்ள எஸ்ஆயிர்லாம் வா என நைசாக நலுவினார் தன் மனைவியுடன்..

ஏன்டா டப்பா.. இப்போ அப்பா நம்ம ரெண்டு பேரையும் பன்னி,குரங்குன்னு திட்டுன மாதிரி தோணுதே... உனக்கு என்ன தோணுது..

ம்... எனக்கு உன்மண்டையில்ல ரெண்டு வைக்கனும் போல தோணுது.. இத கண்டுபிடிக்க இவ்வளவு நேரமா..

ஆ.. எங்க இந்த அப்பா..

அவங்க போயி அரைமணி நேரம் ஆச்சுடி.. அத விடு நீ இப்போ ஒழுங்க சாப்பிடு.. தூக்க போலாம் மனுகுட்டி..

எனக்கு கை எல்லாம் வழிக்குது டப்பா.. தூக்கவே முடியல்ல.. ஊட்டிவிடேன்..

அது எப்படி இவ்வளவு நேரம் வழிக்காத கை இப்போ வழிக்கும்..

இப்போ வழிக்குது.. நீ ஊட்டுவியா.. மாட்டியா..

இப்படி செல்லம் கொஞ்சுடி.. இங்க இருக்கவரை தான் எல்லாம்.. நாளைக்கு வேர வீட்டுக்கு போனா எல்லாம் இப்படி ஊட்டமுடியாது.. அவளிடம் பேசியவாரே அவன் தட்டில் உள்ள சாப்பாட்டை அவளுக்கு ஊட்ட தொடங்கினான்..

அது எல்லாம் முடியாது.. நான் எங்க போனாலும்.. நீ என் கூடவே இருக்கனும்..

அது எல்லா நேரங்களிலும் நடக்காது மனும்மா..

ஏன் நடக்காது.. எல்லாம் நடக்கும்..

யாரும் இல்லாதவனை நீங்க இந்தளவு கொண்டாரதே போதும்டா..

ஏய்.... யார் சொன்னா நீ யாரும் இல்லாதவன்னு.. நீ அடிக்கடி சொல்லுவியே நான் தான் உன்னோட அம்மான்னு.. அப்போ அது எல்லாம் பொய்யா.. இல்ல வெறும் வாய்வார்த்தை நடிப்பா.. கோவமாக பேசியவள்.. அவனின் பதிலுக்கு காத்திராமல் எழுந்து சென்றுவிட்டாள்..

அவளின் வார்த்தையில் அகம் குளிந்த அவன் மனுவையே பார்த்தான்.. எவ்வளவு கோபம் வருது.. உண்மையா நீ மட்டும் இல்லைன்னா நான் இல்லைடாம்மா.. புன்னகைத்துக்கொண்டே எல்லாத்தையும் எடுத்துவச்சிட்டு பால் எடுத்துட்டு மனுவை பார்க்க சென்றான்..

பெட்ல உட்காந்துகிட்டு தலகாணியை மடியில வச்சுகிட்டு எதையோ யோசனைபன்னிகிட்டு இருந்தாள்..

என்ன ஓட்டவாய் இவ்வளவு அமைதியா இருக்கர.. அப்படி என்ன முக்கியமான யோசனை..

நீ சொல்லு.. இப்பவர நீ உனக்கு யாரும் இல்லைன்னு தான் நினைக்கரீயாடா..

இல்லடாம்மா.. எனக்கு தான் எல்லாமுமா நீ இருக்கீயேடாம்மா.. ஆகாஷ் கூறவும் கண்ணீருடன் அவன் தோளில் உரிமையாக சாய்ந்துகொண்டாள்..

ஆனா டப்பா நான் சொன்னது தான் நீ எப்பவும் என்கூடவே தான் இருக்கனும்..

அது சரி.. என்னடாம்மா கல்யாணம் ஆனா நீ வேற வீட்டுக்கு போயிதானே ஆகனும்..

அப்ப நீயும் என்கூட வரனும்..

ம்.. அதை வரவங்க ஒத்துகனும்..

ஏன் ஒத்துக்கமாட்டாங்க..

என்னடாம்மா நீ எவ்வளவு பேசர.. ஆனா இதுக்கு இவ்வளவு அடம் பிடிக்கர.. அப்படி என்ன நடந்தது..

நீ தானே இதை ஆரம்பித்த..

மனுகுட்டி.. நான் தான் இதை ஆரம்பித்தேன்.. ஆனா உன்மனசுல என்ன இருக்கு அதை சொல்லுடாம்மா.. என அவள் தலையை மென்மையாக வருடிவிட்டான்..

அது உனக்கு கௌரி அக்கா தெரியும் தானே..

ம் தெரியும்டாம்மா..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.