(Reading time: 21 - 41 minutes)

சரி.. போனை வைத்துவிட்டான்..

ஆகாஷ் போன் பேசி முடித்ததும்.. என் செல்லம் என கழுத்தை கட்டிக்கொண்டாள் மனு..

மலர்ந்த புன்னகையுடன் அவளை அணைத்து என் மனும்மாக்கு என்ன ஆச்சு.. என்ன வேணுமாம்.. என செல்லம் கொஞ்சினான்..

எனக்கு எதுவும் வேண்டாம் நீ என்கூடவே இரு அது மட்டுமே போதும்..

அப்படியா.. மனும்மா..

சொல்லுடா கண்ணா..

மனசுல என்னத்த வச்சுகிட்டு நீ குழம்பி இருக்க..

நான் எதையும் நினைக்கல.. உன்ன என்கூட இருக்க சொன்னது ஒரு குத்தமா.. சளித்துக்கொண்டவளை..

நான் அப்படி சொல்லுவேனாடாம்மா..

அது.. சரி நாம கோவிலுக்கு போயிட்டு வர்லாமா.. எனக்கு போகணும் போல இருக்கு டப்பா..

சரி.. நீ கிளம்பி வா நாம போலாம்..

இதோ.. சீக்கரமா வந்தரேன்..

எந்த அவசரமும் இல்ல.. இன்னைக்கு முழுக்க நான் உன்கூட தான் இருக்க போரேன்.. அதனால நீ பொறுமையா கிளம்பி வா.. நான் கீழ இருக்கேன்..

ம்.. சரி.. அவள் கோவிலுக்கு கிளம்ப தயாரானாள்..

கீழே வந்த ஆகாஷ்.. கண்ணன் அங்கு இருக்கவே.. அவரின் முன்வந்து நின்றவன்.. மாமா பிஸியா..

உனக்கு இல்லாத டைம்மா.. வா..

மாமா அப்படி போயிபேசலாம்..

தனியாக அழைத்து பேசவிரும்பும் மகனை ஊற்று நோக்கியவர்.. வாப்பா என சென்றார்..

ஆகாஷ்.. என்ன குழப்பம் உனக்கு.. எதை மனசுல வச்சுகிட்டு இருக்கர நீ..

மாமா.. மாமா எப்பவும் ஸ்பெஷல் தான் பா.. எந்தவித தயக்கமும் இல்லாம அவர்கிட்ட எல்லாவிஷயத்தையும் பகிர்ந்துக்கலாம்.. தனக்கு நண்பனாவும்.. சிறந்த வழிகாட்டியாவும்.. எதாவது பிரச்சனை பன்னும் போது அவரையும் கூட கோர்த்துவிட்டு எல்லாத்துக்கும் மாமா இருக்கார்டா என உல்லமாக உள்ளம் மகிழும்.. பையன், பொண்ணுன்னு எல்லாம் பாகுபாடு பார்க்காது.. சிறந்த வழியாக கேட்டார் கண்ணன்..

மாமா..

என்னப்பா புதுசா தயக்கம் எல்லாம் வருது..

அது.. மாமா.. மனுகிட்ட நீங்க எதாவது மாற்றத்தை உணர்ந்தீங்களா..

இல்லையே.. ஏன் என்ன ஆச்சு..

இல்ல மாமா.. அன்னைக்கு ரோடியோ ஸ்டேசன் போயிட்டு நைட் வந்த அப்போ ஊட்டிவிடுன்னு மனுகுட்டி கேட்டா.. நானும் ஊட்டிவிட்டுகிட்டே இப்போ தான் இப்படி சாப்பிடமுடியும்.. கல்யாணம் ஆனா அது முடியாதுன்னு பேசவும்.. ஏன் எதுக்குன்னு கேக்க ஆரம்பித்தா.. எல்லாரும் ஒரே மாதிரி நம்ம ஊறவை பார்ப்பாங்கன்னு இல்ல.. அதனால வரவரை பொறுத்து தான் எல்லாம்ன்னு சொன்னேன்.. அப்போ நான் கல்யாணமே பன்னிக்கமாட்டேன்னு சொல்லீட்டா..

அவளே போக போக புரிஞ்சுப்பா.. இல்லைன்னா.. உங்களை எப்படி ஐஸ் புரிஞ்சுகிட்டாலோ அதே போல உங்களை புரிஞ்சுகிட்டவனையே கல்யாணம் பன்னீட்டா போச்சு..

நானும் அதே பதிலை தான் சொன்னேன்.. அன்னைக்கு நைட் முழுக்க மனு என் கையை கெட்டியா பிடிச்சுகிட்டு என் மடியில்ல தான் தூங்குனா.. அவ கையை காலையில்ல வரைக்கும் கூட கெட்டியா விடாம பிடிச்சு இருந்தா.. எனக்கு அப்பவே என்னவோ ஒரு எண்ணம் வெளிபடுத்த முடியாத அவஷ்த்தை.. அவ கண்ணுல நான் அன்னைக்கு பார்த்த அதே வழியை நான் இப்போ மனு கண்ணுல பாத்தேன்.. இன்னைக்கு முழுக்க என்னை அவ கூடவே இருக்க சொல்லீருக்கா.. வேளையிருக்குன்னு சொல்லவும் முகம் வாடி போச்சு.. மாமா.. அவளோட அந்த பார்வை என்கிட்ட என்ன சொல்லுதுன்னு எனக்கு தெரியல்ல.. ரொம்ப வழிக்குது மாமா.. நான் வேணா லண்டன் போல அதை இப்பவே கேண்சல் பன்னீடவா..

ஏய்.. அது எல்லாம் வேண்டாம்.. உனக்கு தெரியுமா.. அவ உன்னை வீட்டுக்கு கூப்பிட்டு வந்தப்ப என்ன சொன்னான்னு தெரியுமா.. டாடி இங்க வந்து பாருங்க என்னோட பையனை.. எப்படி இருக்கான் பாருங்கன்னு என்னோட ரூம் உள்ள வந்து இழுத்து வந்து உன்னை காட்டினா.. அதே போல தான் கமலாவையும் சமையல் கட்டுக்கே போயி கூப்பிட்டு வந்தா..

இவன் தான் என்னோட பையன்.. பேரு ஆகான்னு சொன்னா.. அவளோட ஐஞ்சு வயசுல்ல இருந்து நீ அவளுக்கு மகனா வளர ஆரமிச்ச.. அப்பரம் வளர வளர நீங்க உங்களையே அழகா உருவாக்கீட்டீங்க.. ஆனா இப்பவும் அவ மனசுல்லையும் சரி.. உன் மனசுல்லையும் சரி.. தாய்,சேய்ங்கர உறவு இப்பவரை மாறாமல் தான் இருக்கு அதனால தான் நீ போரன்னு சொல்லவும் அவ வருதபட்டிருப்பா.. இது சதாரணம் நீ தான் அவளுக்கு தைரியம் சொல்லனும்.. இப்படி கண்டதையும் யோசிக்காத..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.