(Reading time: 21 - 41 minutes)

இல்லைன்னா என்னடா பன்னுவ..

ஏய்.. அம்மூ எழு..

போடா.. அதான் எல்லா பரிசையும் முடிஞ்சிருச்சு.. இப்போவாச்சும் நிம்மதியா தூங்க விடுடா குரங்கு..

மனுகுட்டி நீ எழுவே நான் உனக்கு ஒரு சூப்பர் நியூஸ் சொல்லரேன்..

இப்படியே சொல்லு..

நீ என்னைக்கு அடங்கிருக்க.. சரி போ.. மனும்மா நாம எல்லாரும் ரூர் போக போரோம்.. நம்ம பிரின்சிகிட்ட பர்மிஷசன் வாங்கியாச்சு.. அவன் முடிக்கும் முன்..

எழுந்து உட்காந்து எப்படி டா.. பிரின்சி ஓகே சொன்னாரு.. ஆச்சரியமாக கேட்டாள்..

அபிதான் வாங்குனான்..

ஓ.. ஜித்து கேட்டதும் எப்படி பர்மிஷன் கொடுத்தாங்க..

அபி தான் பயங்கர கெட்டி.. நேக்கா பேசி சம்மதம் வாங்கியாச்சு..

அதானே.. சரி எப்போ கிளம்பரீங்க..

என்ன கிளம்பரீங்களா.. கிளம்பரோம் மனுகுட்டி..

நான் எல்லாம் வர்லை.. நீங்க போயிட்டு வாங்க..

அப்படி உனக்கு இங்க என்ன வேளையிக்காம.. சற்று காட்டமாக கேட்டான்..

ஸ்டேசன் போகணும்.. எதோ யோசனை இருக்கு டா..

அம்மூ சும்மா சமாளிக்காத.. உனக்கு தான் அந்த காதல் புரோகிராம் இன்னையோட கடைசி தானே.. அப்பரம் என்ன ஆராயும் பார்வையில் மனுவை அவன் நோக்கினான்..

உனக்கு யாருடா சொன்னது.. ஐஸ் சொன்னாலா என்ன.. அவளின் விளையாட்டு போச்சுகள் எதுவும் அவனிடம் எடுபடவில்லை..

பேச்சமாத்தாம என்னனு சொல்லு மனும்மா..

ஒண்ணும் இல்லடா நான் சும்மா சொன்னேன்.. எப்போ கிளம்பனும்..

இன்னைக்கு நைட்..

அச்சோ.. இன்னைக்கு எனக்கு காதல் கடைசிநாள் புரோகிராம் இருக்கு..

ஒண்ணும் பிரச்சனையில்லை.. நான் எல்லாம் அபிகிட்ட சொல்லீட்டேன்.. உன்னோட புரோகிராம் 10.30-க்கு நீ எல்லாத்தையும் முடிஞ்சு.. உன்னோட பார்ட்டியும் முடிஞ்சு 12 மணிக்கு வந்தா போதும்..

என்ன 12 மணிக்கா.. என்னடா பிளான் பன்னி வச்சிருக்கீங்க..

அது எல்லாம் சொல்லமாட்டோம்.. நீ வரதுக்கு ஏன் இவ்வளவு பன்னர.. முதல்ல எல்லாம் என்ன ஆட்டம் போடுவ.. முதல் ஆளா நீ தான் இருப்ப.. இப்ப என்னவாம்.. அவன் விடாமல் கேட்க சமாளிக்க பெறும் பாடாய் போயிற்று..

அது எல்லாம் ஒன்னும் இல்ல.. எனக்கு உன் கூடவே இருந்தா போதும்..

மனும்மா.. என்கிட்ட இருந்து எதாவது மறைக்கறீயா நீ..

அது எல்லாம் ஒன்னும் இல்ல சும்மா கண்டதையும் கற்பனை பன்னிக்காத.. ஒழுங்கா இன்னைக்கு முழுக்க நீ என்கூட தான் இருக்கனும்..

என்ன..

ஆமா.. இன்னைக்கு முழுக்க.. ஸ்டேசன்ல கூட நீ என் பக்கதுல தான் இருக்கனும்.. அப்பரம் நாம ஒண்ணாவே ரூர் பஸ்க்கு போலாம்..

அம்மூ.. இன்னைக்கு கொஞ்ச ரூர் சம்மந்தம்மா வேளை இருக்கேடா.. அவன் கூறிமுடிக்கும் முன் அவள் உம் என்று வைத்துக்கொண்டு பாத்ரூம்மிற்க்குள் சென்று மறைந்தாள்..

இவ ஏன் இப்படி முகத்தை வச்சுகிட்டு போறா.. ஏன் அம்மூ.. என தன் அலைபேசியில் அபியை அழைத்தான்..

ஹாலோ..

சொல்லு ஆகாஷ்..

அபி.. என்னால அங்க வரமுடியாது.. நீங்களே பாத்துக்கோங்க.. எதுனாலும் எனக்கு போன் பன்னுங்க நான் பேசிகரேன்..

உனக்கு தான் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு எல்லாரையும் முன்னாடியே தெரியும் வேற..

நான் ஏற்கனவே சொல்லீட்டேன் அபி.. எல்லாம் சரியா தான் இருக்கும்.. வேற ஏதாவதுன்னா சொல்லு பாத்துக்கலாம்.. அப்போ அப்போ எனக்கு போன்பன்னி சொல்லிகிட்டே இரு..

இப்போ ஏன் வர முடியாதுன்னு சொல்லர.. எந்த வேளையும் இல்லைன்னு தானே சொன்ன..

ஆமா அபி.. ஆனா அம்மூ இன்னைக்கு முழுக்க என்கூடவே நீ இருக்கனும்னு சொல்லரா.. வேளையிருக்குன்னு சொன்னதும் மூஞ்சி உம்ன்னு போயிருச்சு.. என்னால மனுகுட்டிய அப்படி பார்க்க முடியாது அபி நீங்களே பாத்துகறீங்களா..

ஏன் கர்னிக்கு என்ன ஆச்சு.. என சிறு பதட்டமுடன் கேட்டான்..

நல்லா தான் இருக்க.. ஏதோ டிஸ்டப்பா இருப்பா போல அதான்.. நீ பாத்துக்குவல்ல..

நான் இங்க பாத்துக்கரேன்.. நீ அவளை பாத்துக்க..

ம் சரிடா.. எனக்கு நீ அப்போ அப்போ போன் பன்னிகிட்டே இருக்கனும் புரியுதா..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.