(Reading time: 17 - 34 minutes)

தொடர்கதை - வேலண்டைன்ஸ் டே... - 08 - மகி

valentines

ம்மூ.. அம்மூ.. எழும்புடா.. இப்போ கிளம்புனா தான் போக சரியா இருக்கும்.. எழும்பு.. நான் பேக் பன்னதுல்ல எல்லாம் எடுத்துவைச்சுட்டனான்னு பாரு.. ஒரு தடவை நீ பாத்திரும்மா.. அரக்க பறக்க எடுத்துவைத்துக்கொண்டு இருந்தான் ஆகாஷ்..

வழக்கம் போல என்ன நடந்தா நமக்கென்னனுன்னு நல்லா தூங்கி எழுந்துட்டு.. தூங்க கலக்கத்தில் அவனை வேடிக்கைபார்த்துக்கொண்டு இருந்தாள் மனு..

என்ன அம்மூ இப்படி பாக்கர.. போ.. போயி குளிச்சிட்டு கிளம்பி வா..

இப்போவேவா.. போடா.. நைட் 9.00 மணிக்கு போனா போதும்.. அதுக்கு ஏன்டா இப்பவே என்ன தொந்தரவு பன்னர..

இப்போ தான் திடீர்ன்னு மீட்டிங்கின்னு கால் வந்தது.. அதான் எல்லாத்தையும் இப்போவே எடுத்துவைக்கனும்..

மீட்டீங்கா... அப்போ என்கூடவே நீ இருக்கமாட்டியா..

அதுக்கு ஏன்டீ உன்முகம் அப்படி போகுது.. அம்மூ நீ முகத்த சுளிச்ச நான் எங்கையும் போகல.. நீ இப்படி வைக்காதடீ..

சரி.. போயிட்டு வா..

நிஜமாவா அம்மூ விழிவிரித்து கேட்டான்..

சிரித்துக்கொண்டே அம்மான்டா பட்டு.. போயிட்டு வா.. ஆனா 8.30-க்கு வந்தர்ன்னும்..

கண்டிப்பாடாம்மா.. நான் மீட்டிங் முடிச்சதும் நேரா இங்க தான் ஓடி வருவேன்.. நீ கிளம்பி இரு.. நான் வந்து உன்ன கூப்பிட்டு போரேன் டன்..

டபுள் டன்டா பட்டுகுட்டி.. என அவனை அணைத்துக்கொண்டாள்..

அவனும் அவளை அணைத்து நெற்றிமுத்தமிட்டு கிளம்பினான்..

அவன் போவதை புன்னகையுடன் பார்த்துக்கொண்டவளது மனம் தனக்குள் மூழ்கியது.. அதை அடக்கிவிட்டு காவியாவை பார்க்க சென்றாள்..

வழக்கத்திற்கும் விட அவளின் அறை பூட்டி இருப்பது புதியது.. கதவை தட்டி.. காவி என்ன பன்னர.. சத்தமாக கேட்டாள்..

சிறிது நேரத்தில் கதவு திறந்தது புன்னகைத்தாள் காவி..

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

என்ன பன்ன..

சும்மா தான் மனு.. தூங்கலாம்ன்னு பாத்தேன்..

தூங்கலாம்ன்னு பாத்தியா.. காவி எக்ம்ஸ் இருக்கு படிக்கலையா கேள்வியாக பார்த்தவளை தவிர்த்தாள் காவி..

படிக்கலாம் மனு.. நீ சொல்லு.. காலேஜ் பத்தியெல்லாம் இப்போ சொல்லரதேயில்ல..

ஏய்.. நீ தான் பிஸி.. எப்போ வந்தாலும் படிக்கர.. சரி பயபுள்ளைய தொல்லைபன்னகூடாதுன்னு பாத்தா ரொம்பத்தான்..

சரி நான் சும்மா சொன்னேன்.. டூருக்கு எல்லாம் பேக் பன்னியாச்சா..

பேக் பன்னியாச்சாவா.. எப்பவும் நீயும்,ஆகாவும் தானே பன்னுவீங்க இப்போ என்ன புதுசா என்ன கேக்கர காவி.. இப்போது மனுவின் பார்வை கூர்மையானது..

ஆகாஷ் அண்ணா பேக் பன்னும் போது நான் சம்போட்டு இருந்தேன்.. அதனால அவங்களே பேக்பன்னீட்டாங்க அதான் கேட்டேன்..

சரி விடு..

ஏய் மனு இதோ பார் நீயும்,ஆகாஷ் அண்ணாவும் தூங்கரது எவ்வளவு க்யூட்..

எங்க காட்டு..

இதோ.. என அவளின் போனில் எடுத்த போட்டோவை காட்டினாள்..

அதில்..   ஆகா கட்டிலில் சாய்ந்தவாறு அமர்ந்து உறங்கிக்கொண்டு இருக்க.. அவனின் மடியில் பூவை போல அவனின் கையை இருக்க பற்றிக்கொண்டு விழிமூடி உறங்கிக்கொண்டு இருந்தாள் மனு.. அதிகாலை சூரியஒளி அந்த அறையில் மெல்லபரவியும் அந்த காட்சியை இன்னும் அழகாக்கியது..

ரொம்ப அழகா இருக்கு காவி..

ஹாஹா எடுத்து யாரு.. இந்த காவி ஆச்சே.. சூப்பரா தான் இருக்கும்..

ஆமா.. ஆமா.. என இருவரும் செல்ல சண்டை போட்டனர்..

கீழே வந்தவளை ராகுல் வரவேற்றான்.. அவனுடன் கொஞ்சம் விளையாடிட்டு.. கிட்டசனுக்குள் சென்றாள்..

மிசஸ்.கேகே என்ன பன்னறீங்க.. கேட்டுக்கொண்டே சமையல் கட்டு திண்டில் ஏறி அமர்ந்தாள்..

ஏய் வாலு.. எங்க ஏறி உட்காந்திருக்க..

போம்மா..

சரி இந்தா காபி..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சாகம்பரியின் "மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம்" - மர்மமும் காதலும் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

நீ எப்பவும் சூப்பர்ம்மா..

போதும் கொஞ்சுனது.. இன்னைக்கு டூர் போக எல்லாம் எடுத்து வச்சுட்டீயா..

அது எல்லாம் ஆகா பாத்துப்பான்..

அவன் பையன் அவன் எடுத்து வைக்கணும்.. மேடம் சொகுசா கிளம்பி போவீங்களோ..

போம்மா.. நீ எப்பவும் அவனுக்கு தான் சப்போர்ட் பன்னுங்க..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.