(Reading time: 17 - 34 minutes)

அவனை அங்கு எதிரிபார்க்காத மனுவுக்கும் ஷாக்கே.. அதுவும் புடவை கட்டினாள் பொண்ணங்களுக்கு வெட்கம் எல்லாம் வருமாமாம்.. மனுவுக்கும் அந்த அனுபவம் புதியதாகவே இருந்தது.. இருவரும் தன்னிலை அடைந்தனர்.. வெகு விரைவிலேயே.. ரொம்ப கஷ்டம்பா.. இவங்கள வச்சுகிட்டு நான் எப்படி இந்த கதையை முடிக்கரது..

இருவரும் தங்களுக்குள் ஏற்பட்ட இருந்த மாற்றத்தை மறைத்தனர்.. உண்மைதான் இந்த வயசுலயும் எவ்வளவு முதிர்ச்சி..

ஜித்து.. நீ.. இங்க.. அது டூர் அரேஞ்மென்ஸ் எல்லாம் நீதானே பாக்கர.. அதான் நீ எப்படி இங்க..

நான் கிளம்பும் போது தான் ஆகாஷ் கால் பன்னுனான்.. அவன் ஏதோ மீட்டிங்ல மாட்டிகிட்டானாம்.. அதனால உன்னை ஸ்டேசன் கூப்பிட்டு போக என்னை அனுப்பி வைச்சான்...

பாவம் பையன்.. அவனுக்கே எவ்வளவு வேளையிருக்கு மனுகுட்டி.. நீ ஏன் அடம்பிடிக்கர.. அதான் அப்பா இருக்கரார் தானே.. இப்போ பார் அபி தம்பிக்கும் தேவையில்லாத அலைச்சல்..

அச்சோ.. ஆன்டி அப்படி எல்லாம் இல்லைங்க.. இதுல என்ன இருக்கு..

சரி தம்பி.. நீங்க இருங்க நான் காபி கொண்டுவரேன்.. என அவர் காபி கொண்டுவர சென்றுவிட்டார்..

என்ன மனுகுட்டி எல்லாம் பேக் பன்னியாச்சு தானே..

ம்.. ஆகா பன்னீட்டான் ப்பா..

எதாவது வேணும்ன்னா.. அவர் கூறி முடிக்கும் முன்பே..

நாங்க ஏற்கனவே எல்லாத்தையும் அரேஞ்மென்ட் பன்னீயாச்சு அங்கிள்..

சிறுபுன்னகையை பதிலாக கொடுத்தார்..

காபி வரவே அதை அனைவரும் பருகினார்கள்..

மனுகுட்டி.. ஆகாஷ் எல்லாத்தையும் போக் பன்னீட்டான்.. நீ அதை எல்லாம் கொண்டுவந்து கார்ல வை..

அதுயெல்லாம் எப்போவோ கார்க்கு போயாச்சு..

எப்படி..

நீங்க காபி போட போன போதே எல்லாத்தையும் எடுத்து வைச்சுட்டாங்க..

அதானே.. நான் கூட என் மனுகுட்டிக்கு பொறுப்பு வந்து.. அவ செய்தாள்ன்னு நினைச்சேன்.. பரவாயில்ல.. நான் தப்புகணக்கு போடல..

மிசஸ்.கேகே...என பல்லை கடித்தாள்..

போடி.. மகளை பரிகாசம் செய்தார்..

மிஸ்டர்.கேகே உங்க வீட்டுகாரம்மா வர வர ரொம்ப சேட்டைபன்னராங்க.. சொல்லிவைங்க.. அவள் அதிகாரமாக கூறவே..

நீங்க சொல்லீட்டீங்கல்ல செஞ்சர்லாம்.. அவர் தலையை பழமாக ஆட்டவே.. சிரித்தேவிட்டனர் அனைவரும்..

மனுகுட்டி பாத்து போயிட்டு வரனும்.. உன்னோட சேட்டையெல்லாம் தெரியாத இடத்துல வேண்டாம்.. அப்பரம் நல்லா.. சூப்பரா.. என்ஜாய் பன்னுடா..

சரிப்பா.. என அவரை கட்டிக்கொண்டு சிறிது நேரம் செல்லம் கொஞ்சினாள்..

அப்பாட உன் தொல்லையில்லாம நான் ஒரு வாரம் நிம்மதியா இருப்பேன்..

அய்யோ மிசஸ்.கேகே நான் உங்க சாப்பாட்டிலிருந்து எஸ்சாகவே இந்த டூர் போரேன்.. நான் தான் ஹேப்பி..

ம்.. போடி.. என அவளை கட்டிக்கொண்டு வம்பளந்தனர்..

போதும்.. இதை பார்த்தா.. நீங்க கொஞ்சிகறீங்களா.. இல்லை சண்டை போடறீங்களான்னு எனக்கே சந்தேகமா இருக்கு.. இதுல புதுசா வந்தவரு வேற இந்த கொடுமைய எல்லாம் பாக்கனுமா... அவர்களை இயல்பிற்கு கொண்டு வந்தாள் காவியா..

சரி.. நான் போயிட்டு வரேன்.. ஆகாவும் அப்படியே வந்திருவான்.. நாங்க அங்க போயிட்டு நெட்வொர்க் பாத்து கால் பன்ரோம் என விடை பெற்றனர்..

சில நிமிடங்கள் மௌனமாகவே கரைந்தது.. என்ன மேடம் செம பிலிங்ஸ் போல..

அவள் அவனை முறைத்துக்கொண்டே.. கிண்டல்லா.. அடி படவா..

ஐச்சோ.. பயந்தவன் போல நடிக்கவே புன்னகைத்தாள் மனு..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீனுவின் "மழையின்றி நான் நனைகின்றேன்" - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

இல்ல ஜித்து.. நான் எங்க போனாலும் எப்படியும் வீடு வந்து அம்மாவ பாத்துட்டா தான் அவங்க தூங்கவே போவாங்க.. எனக்கும் அம்மாவ பாக்காம முடியாது.. ஆனா இப்போ ஒரு வாரம் அம்மா,அப்பா இல்லாம என்னவோ போல இருக்கு.. என்கூட ஆகா இருக்கான் அந்த காரணத்தால தான் நான் வரேன்.. இல்லைன்னா அவனும் லண்டன் போயிருவான்.. இதுக்கு அப்பரம் எப்போ பாக்க போரோம்ன்னு தான் நான் இந்த டூருக்கே வந்தேன்..

நீ ரொம்ப செல்லம் தானே வீட்டுல்ல..

ரொம்ப ரொம்ப குடுத்து கெடுத்து வச்சிருக்காங்க..

ஆகாஷ் லண்டன் போரதுல உனக்கு விருப்பம் இல்லையா கர்னி..

என்னால அவனைவிட்டு இருக்கரது தான் கஷ்டமா இருக்கு.. அவன் எப்பவோ போயிருக்கனும்.. எனக்காக தான் யுஜி இங்க பன்னுனான்.. இப்போ எனக்காக தான் என் கூட படிக்கர மாதிரி சுத்திகிட்டுயிருக்கான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.