(Reading time: 17 - 34 minutes)

நான் நினைச்சேன் ஆகாஷ்க்கு உன்னை விட பெரியவனா..

ம்.. அவன் என்ன விட 3 வயசு பெரியவன்.. நீயும் அவனும் சேம்ன்னு நினைக்கரேன்.. ஆமா நீ ஏன் லேட்டா காலேஜ் சேர்ந்த..

எனக்கு சின்ன பிள்ளையில்ல உடம்பு சரியில்லாம போனதால 3 இயர்ஸ் பேக்ல சேர்த்தாங்க..

ஆகா என்ன சொன்னான்.. என மனு கேக்கவும் அவனிடம் இருந்தே அழைப்பு வந்தது..

உடனே ஏற்று காதில் வைத்தாள்..

பட்டு..

அம்மூ சாரி.. என்னால வரமுடியல்லடாம்மா.. ஒரு மீட்டிங்ல மாட்டிகிட்டேன்.. அதான் அபிய பிக்கப் பன்ன அனுப்பினேன்..

பரவாயில்லடா.. நான் இப்போ நல்லா தான் இருக்கேன்.. நீ பதராம வேளையெல்லாம் முடிச்சிட்டு வந்திரு நான் காத்திருப்பேன்..

சரிடாம்மா.. வேற என்ன..

ஆகா.. நான் உன்கிட்ட ஒன்னு சொல்லனும்.. இப்போ பிஸியா..

இல்லடாம்மா சொல்லு..

ஆகா எனக்கு நம்ம காவிகிட்ட வித்தியாசம் தெரியுதுடா.. உனக்கு எதாவது அப்படி தோணுதா..

எதனால அம்மூ அப்படி சொல்லர.. காவி நல்லா தானே இருக்கா..

ம்.. ஆனா நம்ம கூட அவ ஒட்டல.. என்கூட பேசாம அவளால இருக்க முடியாது.. ஆனா என்கிட்ட சரியாவே பேசலை.. என்ன சுத்தியே வர பொண்ண காணோம்.. அம்மாகிட்டையும் விரிசல்.. எனக்கு எப்பவும் நீங்க ரெண்டும் தான் பேக்பன்னுவீங்க.. ஆனா இப்போ அதை அவ மறந்தே போயிட்டா.. இப்போ கிளம்பி வரும் போது தான் அவ எங்க கிட்ட பேசுனா.. நான் ஒருவாரம் இருக்கமாட்டேன்னு தெரிஞ்சும் என்கிட்ட அவ பேசலை..

ஆகா.. நான் எதாவது சொல்லீட்டனாடா.. எனக்கு அவ இல்லாம என்னவோ போல இருக்குடா..

அம்மூகுட்டி.. அது எல்லாம் ஒன்னும்யில்ல.. அவளுக்கு ஸ்கூல்ல செம டென்சன் அதான் உன்கிட்ட பேசல..

ம்..

அம்மூ.. உன்னால யார் மனசையும் புண்படுத்த முடியாதுடா குட்டி.. நீ கண்டதையும் போட்டு குழம்பிக்காத..

ம்.. சரி.. நாம அவளுக்கு ஊட்டியில்ல இருந்து கிப்ட் வாங்கிட்டு வர்லாம் ஓகே..

சரிம்மா..

நீ உன் வேளைய முடிசிட்டு வா ஆகா..

சரிடாம்மா.. நான் வச்சிடரேன்..  போனை வைத்துவிட்டு ஜித்துவை பார்த்தாள்..

ரொம்ப பாசமா தங்கச்சி மேல..

கொஞ்சம் இருக்குப்பா.. இப்போ திடீயிருன்னு பேசாம இருக்கவும் என்னவோ போல இருக்கு..

என்ன பன்னரது கர்னி.. அவங்க ஸ்கூல்ல தர பிரஷர் அப்படி.. சரி கேக்கனும்ன்னு நினைச்சேன்.. எதனால நீ அந்த புரோகிராம் விட்டு நிக்கர... நல்லாயிக்கும் கர்னிம்மா.. உன்னோட குரல் கேக்கும் போது இனிமையா இருக்கும்.. ஆகாஷ் சொல்லவும் கொஞ்சம் கஷ்டம் தான் எனக்கு.. என்னோட தம்பி,தங்கை உனக்கு பயங்கர விசிரிகள்..

எனக்கும் பிடித்தமான நிகழ்ச்சி தான்.. போட்டிகள் எங்க தான் இல்லை சொல்லு.. என்ன இருந்தாலும் நான் படிக்கர பொண்ணு.. அதனால நிரந்திரம் இல்லைன்னும், சில   பேச்சுக்கல் அடி பட்டுச்சு.. அதான் நானே விலகிட்டேன்..

உன்னால எப்படி இதை இவ்வளவு சாதாரனமா எடுத்துக்க முடியுது..

இதுக்காக கவலை பட்டுக்கிட்டு இருந்தா அடுத்த அடியை எடுத்து வைக்க முடியாது ஜித்து.. கவலை இருக்கு.. அதையே நினச்சுகிட்டு இருக்க கூடாது.. அதான் அடுத்து என்ன பன்னலாம்ன்னு யோசிச்சுகிட்டு இருக்கேன்..

செம பாஸ்டிவ் கர்னிம்மா நீ.. ஆச்சர்யமாக கூறினான்..

புன்னகைபூத்தாள் அடக்கமாக.. அதுவும் அவளுக்கு அழகே..

உனக்கு என்ன ஆகனும்ன்னு ஆசை கர்னி..

எனக்கு.. எனக்கு.. தெரியல்லையே..

என்ன.. அது சரி.. நீ எப்பவும் தனி தான் கர்னி..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "நீயிருந்தால் நானிருப்பேன்" - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

ம்..ம்.. ஹாஹா.. பேசிய படியே ஸ்டேசன் வந்தனர்..

ஸ்டேசன் வந்தும் மனு இறங்காமல் இருக்கவே..

என் கர்னி.. என்ன ஆச்சு.. போகலையாடா..

நான் தான் புரோகிராம் பன்னமுடியலைன்னு சென்னேன்.. ஆனா இப்போ கொஞ்சம் கஷ்டம்மா இருக்கு..

அதை கேட்ட அபி என்ன நினைத்தானோ உடனே இறங்கி மனுவின் கதவை திறந்துவிட்டு இறங்கு என கண்ணால் சமிங்கை செய்தான்.. அவளும் இவன் கண்ணசைவுக்கு கட்டுப்பட்டு இறக்கி தயங்கியவாறே நின்றாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.