(Reading time: 17 - 34 minutes)

எனக்கு நீங்க ரெண்டும் ஒண்ணு தான்டா..

சரி.. சரி.. கொஞ்சுனது போதும்.. நைட் சாப்படுக்கு எல்லாம் என்ன ஏற்பாடு பன்னீருக்கானாம்..

ஏன் உன்கிட்ட எதுவும் சொல்லலையா..

ம்.. அந்த குரங்குக்கு என்கிட்ட பேச நேரம் இல்லையே..

ஏன்டீம்மா.. என்ன ஆச்சு.. ஏன் என்னோட மனுகுட்டி கவலையா தெரியரா..

யாரு இங்க கவலையில்ல இருக்கரது.. என கிட்சனின் உள்ளே வந்தார் கண்ணன்..

வேர யாரு உங்க இளவரசி தான்..

ஏன்டா மனுகுட்டி.. என்ன ஆச்சு.. கேட்டு அருகில் வந்தவரை அப்படியே அணைத்துக்கொண்டாள்..

அவரும் ஆதரவாக அவளை அணைத்துக்கொண்டே அவளின் தலையை வருடிவிட்டார்..

என்னடாம்மா குழப்பம்.. என்னோட பட்டுக்கு..

அப்பா.. தெரியல்ல.. சில நேரம் சந்தோஷம், சில நேரம் கவலை, சில நேரம் என்னன்னே தெரியாம இருக்கும்..

பெற்றோர் இருவரும் அவளை கூர்மையாக பார்த்தனர்..

ஏன்டா ஆகாஷ் லண்டன் போறது கஷ்டமா இருக்கா..

இல்லைன்னு சொல்லமுடியாது.. ஆனா அது மட்டும் காரணம் இல்லாப்பா..

சரி உன்னோட மனசு என்ன சொல்லுது..

தெரியல்ல..

பெற்றோர் இருவரும் புன்னைக்கை பூத்தனர்..

ஏன் சிரிக்கறீங்க..

அது.. என்னோட மனுக்கு என்ன ஆச்சுன்னு நினைச்சோம்..

அப்பா..

நாங்க உன்னை முழுசா நம்பரோம்டா மனுகுட்டி.. அவளின் தலையை செல்லமாக ஆட்டி கூறினார்.. அதை கமலாவும் ஆம் என தலையசைத்தார்..

என்ன புரிஞ்சதோ.. எதுவும் சொல்லாம குழப்பத்துல ரூம்க்கு போனாள்..

ஏங்க மனுகுட்டிக்கு காதல் வந்திருச்சா..

ஆமா.. ஆனா அதை அவ ஏத்துக்கமாட்டீங்கரா..

எதுனால..

தெரியல்ல.. நம்மல பாத்த பிறகும் அவ காதலை ஏத்துக்க யோசிக்கரான்னா.. அதுக்கு காரணம் இல்லாமலா இருக்கும்..

ஒருவேல அவ பயப்படுவா போலங்க..

இருக்கலாம்.. கமலா.. ஆனா அவ இப்போ எதையும் முடிவு எடுக்க முடியாத குழப்பத்துல அவதிபடுரா..

நாம பேசி பாக்கலாமா.. இல்ல நீங்க பேசுங்க.. இல்ல ஆகாஷ் பேச சொல்லுங்க..

இல்லம்மா.. இதை அவளே தான் சரிபன்னனும்.. அவ பாத்துப்பாடா.. நாம அவளுக்கு துணையா இருப்போம்..

ஏங்க மனுகுட்டி நல்ல பையனை தானே பாத்திப்பா..

ரொம்ப நல்ல பையனா இப்பான் போல எனக்கு தெரிஞ்சு அவனும் இதே நிலைமையில்ல தான் இருப்பான்..

என்னமோ போங்க இந்த காலத்து பசங்க நினைக்கரது எல்லாம் ரொம்ப வித்தியாசமா இருக்குங்க..

அப்படியா.. நீங்க மட்டும் என்ன பாத்ததும் காதலை சொல்லீட்டீங்கலா என்ன.. அவர் மனைவியை ஆசையாக பார்க்க..

ச்சீ.. போங்க..

பாரா இப்போ கூட நீ ரொம்ப நல்லா வெட்கபடர செல்லம்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

Chillzee Special "ஐ லவ் யூ" - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

ஐய்யோ மாமா.. என அவரின் நெஞ்சில் முகம் புதைத்தார்..

ஹாஹா.. அவரும் சிரித்துக்கொண்டே அவரை அணைத்தார்..

நான் என்ன குழப்பத்துல இருக்கேன்.. எனக்குள்ள என்ன மாற்றம் நிகழுது.. சரி.. எதுவா இருந்தா என்ன.. அதை அனுபவிக்கனும்.. ஆராயகூடாதுன்னு கமலஹாசனே சொல்லீருக்காங்க.. அதனால விட்டர்லாம்.. இன்னைக்கு நடக்கபோர பார்ட்டி எனக்கானது.. நான் அதை அனுபவிக்கனும்.. என துள்ளலுடன் கிளம்பினாள்..

குளித்து கிளம்பி இருந்தவளை கமலா அழைத்தார்.. கீழே வந்தவள் ஷாக் ஆகி பாதி படிகட்டிலேயே நின்றாள்.. அவளை பார்த்துக்கொண்டு இருந்தவரின் நிலையும் அதே தான்..

அழகிய இளம்பச்சை வண்ண புடவையும்.. கால்லில் கொழுசுயொழியும்.. கையில் கண்ணாடி வலையல்களும்.. கழுத்தில் செயினும்.. காதில் ஜிமிக்கியும்.. தலையை பின்னி பூவை வைத்துக்கொண்டு காற்றில் பறந்து வந்தவளை பார்த்தவனின் இதயம் தாருமாறாக துடித்து வெளியே வந்துவிடும் போல இருந்தது.. வேற யாருங்க நம்ம அபி தான்ங்க..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.