உனக்கு ஒரு மேஜிக் காட்டணுமா திவ்? இரகசியமாய் வினவினான்.
இவ்வளவு நேரம் தீவிரமாக பேசிக் கொண்டிருந்தவன் இவன் தானா? எனும்படி ஆச்சரியமாக அவன் முகத்தில் பார்வை பதித்தாள் அவள்.
இப்ப நான் வாசல் பக்கம் பார்க்கலில்ல?
இல்ல
ஆனாலும் என்னால இப்ப அங்க யார் வந்திட்டு இருக்கான்னு கன்பர்மா சொல்ல முடியும்… என்ன சொல்லட்டுமா? சரியா இல்லையான்னு பார்க்கிறியா?
உடனடியாக வாயிலைப் பார்த்து திரும்ப முயன்றவளை தடுத்தான்.
நீ திரும்பாதே …இப்ப நான் சொல்லட்டுமா?
திவ்யாவுக்கு ஜீவனின் அந்த விளையாட்டின் சுவாரஸ்யம் கூடவே சரி சொல்லு என்றிருந்தாள்.
வாசல்ல அனிக்கா வந்திருக்கா, இப்ப உள்ளே வரப் போறா பாரு.
அவனது ஆருடத்தைப் பார்த்து, வாயிலை நோக்கிப் பார்த்தவள் வியந்தவளாய்…ஆமா ஜீவா… நீ எப்படி கண்டுப் பிடிச்ச?
இங்க எதிர்த்தாலப் பாரு ஒரு ஜொள்ளுப் பார்ட்டி, இவ்வளவுக்கும் காலையிலதான் கொஞ்சிட்டு வந்திருப்பான். ஆனா, பொண்டாட்டியை எத்தனையோ வருஷம் பார்க்காத மாதிரி பார்க்கிறதைப் பாரு… எதிரில் மனைவியை எதிர் நோக்கி புன்னகை முகமாய் நிற்கும் ரூபனைக் கிண்டலடித்தான்.
உண்மையிலேயே ரூபன் தன் மனைவியை எதிர்பாராத விதமாய் ஜீவனின் தொழிற்சாலையில் கண்டதும் ஜீவன் சொன்னதைப் போலவே பரவசமாய் பார்த்துக் கொண்டு சிரிப்பாய், சிலையாய் நின்றிருந்தான்.
அதெல்லாம் லவ் செய்யறவங்க பீலிங்க்..உனக்கெங்கே தெரியப் போகுது? சமயம் பார்த்து சீண்டினாள் திவ்யா…
ஏய்..
என்ன ஏய்ய்…
அதற்குள்ளாக அனிக்கா அவர்களருகே வந்திருந்தாள், சுடிதாரையும் மீறி அவளது ஆறு மாதக்கரு நான் உள்ளே இருக்கிறேனாக்கும் என்று வெளிப்படுத்திக் கொண்டு இருந்தது. அவர்களருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தவள் அருகில் இருந்த மின்விசிறியை தன் பக்கம் திருப்பி விட்டாள்.
என்ன இந்தப் பக்கம் மேடம், அண்ணி அவர்களே… தோழியைப் பார்த்தும் ஜீவனுக்கு கிண்டல் பெருக்கெடுத்தது.
நான் ஒன்னும் உன்னைப் பார்க்க வரலை, என் வீட்டுக்காரர் இங்கே இருக்கார்னு தெரிஞ்சது அதான் வந்தேன். திவ்யாவைப் பார்த்து கண்ணடித்து கைக் கோர்த்துக் கொண்டாள் அனிக்கா.
அதற்குள்ளாக அவளுக்கு தண்ணீர் பாட்டிலை கொண்டு வந்திருந்தான் ரூபன்.
இதைத்தான் பொண்டாட்டிக்கு கூஜா தூக்குவது என்பார்களோ?
பொறுடா உனக்கு கல்யாணம் முடியட்டும், கூஜா தூக்கிறியா, இல்லை அவளையே தூக்கிறியான்னு பார்க்கிறேன்.
வாய்ப்பில்ல ராஜா, வாய்ப்பில்ல பின்னாலிருந்து திவ்யா குரல் கொடுக்கவும் ஒருவரோடு ஒருவர் கைக் கொடுத்து கலாய்த்துக் கொண்டிருந்தனர்.
இங்கே ஒரு வேலையா வந்தேன்டா ஜீவா..அப்படியே உன்னையும் திவ்யாவையும் பார்த்துட்டு போகலாம்னு வந்தா அத்தானும் இங்கே இருக்கிறாங்க… ரூபனின் கையைப் பற்றிக் கொண்டாள்.
அவர்கள் பேசிக் கொண்டு நின்றது தொழிற்சாலையில் சற்று ஒதுக்கமான பகுதி. அங்கே ஒரு சில இருக்கைகள் எப்போதும் இருக்கும். யாருக்கும் தொந்தரவும் ஏற்படாது. எனவே இவர்கள் அரட்டைகள் யார் கவனத்தையும் ஈர்க்கவில்லை.
இதென்னடா இன்னிக்கு என்னாச்சு அடியேன் பேக்டரில லவ் பர்ட்ஸா வந்து சேருது? அவன் வாய்தான் அப்படி சொல்லிக் கொண்டிருந்ததே தவிர எதிரில் வந்துக் கோண்டிருந்த பெரிய அண்ணன் தீபனையும், பெரிய அண்ணி ப்ரீத்தாவையும் வரவேற்றான்.
அடே ரூபன் நீயும் இங்கத்தான் இருக்கிறியா? சாயங்காலம் வீட்டுக்கு வர்றதா இருந்தேன். இப்ப போகிற வழியில ஜீவனுக்கு ரிமைண்ட் செய்யலாம்னுதான் வந்தோம்.
வருக வருக அண்ணீ, உங்கள் வரவு இந்த எளியேன் இடத்தில் நல்வரவாகுக ப்ரீத்தாவிடமும் வம்பிழுக்க,
போடா வாலு… என அவளும் அவனை கொசுவைப் பொல துரத்தி விட்டுவிட்டாள்.
என்ன அண்ணா?
நம்ம ராபின் பர்த்டே இந்த முறை வீட்ல இல்லாம, வெளியே அவுட்டிங்க் போய் எல்லோரும் சேர்ந்து செலிபிரேட் செஞசா என்னன்னு ஒரு ஐடியா? எங்க போகலாம்னு ஐடியா சொல்லுங்க..
ஹே சூப்பர் … அனைவரும் மாற்றி மாற்றி உற்சாகமாய் கேபினில் அமர்ந்துப் பேசிக் கொண்டிருக்க, அனிக்காவின் கைப்பிடியிலே நின்றாள் திவ்யா.
ஒரு வழியாக இடம் முடிவாக திவ்யாமா அம்மா அப்பாவுக்கு வீட்ல போய் சொல்லிடறேன். உனக்கு இப்பவே சொல்லியாச்சு ராபினோட சித்தப்பாவையும் அதான் இந்த பொடிப்பையனையும் கையோட அழைச்சுட்டு வர்றது உன் பொறுப்பு.
சரியென மகிழ்வாய் தலையசைத்தாள் திவ்யா.
அண்ணா, என்னை நீ கூப்பிடலை… அதுவும் அவளை என்னை அழைச்சுட்டு வரச் சொல்லுற இதெல்லாம் எனக்கு அவமானம்… வடிவேலு ஸ்டைலில் பேசி வைக்க…
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
பிரேமாவின் சுப்பையாவின் "உன்னில் தொலைந்தவன் நானடி..." - காதல் கலந்த தொடர்கதை...
படிக்கத் தவறாதீர்கள்..
உன்னை கூப்பிட வேற செய்யணுமா? ஒழுங்கா மரியாதையா நேரத்துக்கே வந்து பலூன்லாம் ஊதுற… என்ன நான் சொல்லுறது?
ச்சே ச்சே வீட்ல கடைசிப் பையனா மட்டும் பொறக்கக் கூடாது… ஒரு பய மதிக்க மாட்டான்… விளையாட்டாய் முணுமுணுத்தான் ஜீவன்.
நீ இப்ப ஒருப்பய…ன்னு சொன்னது… நம்ம அண்ணனைத் தானே? ரூபன் போட்டு வாங்க…
யப்பா சாமி என்னை நீ கோர்த்து விடாத அவனை நோக்கி கையைக் கூப்பினான்
ஜீவன். அங்கே கொல்லென சிரிப்புச் சத்தம் நிறைந்தது. அவர்களுக்காக ராபினின் பிறந்த நாள் விழா பல்வேறு திருப்பங்களோடு காத்துக் கொண்டிருந்தது.
தொடரும்
Next episode will be published as soon as the writer shares her episode.
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site’s content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.
Thank u so much ma
நன்றிகள் பல சாஹித்யாராஜ்
Nice update janci...
மிக்க நன்றிகள் சாரு