Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - என் ஜீவன் நீயே - 02 - ஜான்சி - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - என் ஜீவன் நீயே - 02 - ஜான்சி

en jeevan neeye

உன்னவள் தானே

என்ற உரிமையில்

பற்பல வார்த்தை அம்புகளை

எறிந்து,

அவை எனில் ஏற்படுத்திய

காயங்களை உணராதவனாக

இலகுவாய்

இளைப்பாறுகின்றாய் நீ

 

நானோ பொறுத்திருக்கிறேன்

நம் காதலின் எல்லை மட்டும்

உந்தன் அலட்சியத்தை

சகித்திருக்கிறேன்.

 

இது தியாகம் அல்ல

நம் காதலுக்காக

தகித்துக் கொண்டே இருக்கும்

எந்தன் யாகம்.

தியம் மணி இரண்டு, இயந்திர கதியில் தொழிற்சாலையில் வேலை நடந்துக் கொண்டிருக்க, அப்போதுதான் புது டெண்டர் கிடைத்த மகிழ்ச்சியை கேபினுக்குள் திவ்யாவிடம் பகிர்ந்துக் கொண்டு இருந்தான் ஜீவன். கூடிய விரைவில் தொழிற்சாலையை விரிவுப் படுத்த வேண்டும் எனும் சிந்தனையில் அவன் கைகள் லேப்டாப்பில் வந்த மின்னஞ்சலையேச் சுற்றி வட்டமடித்துக் கொண்டிருந்தது.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

புது டெண்டருக்கான செய்தி வந்ததும் அவன் சொன்னபடியே ப்யூன் வாங்கிக் கொண்டு வந்த பேடா பெட்டியிலிருந்து ஒரு துண்டு இனிப்பை திவ்யாவுக்கு வாயில் கொடுத்தவன். இன்னொரு விள்ளலை எடுத்து தானும் வாய்க்குள் போட்டுக் கொண்டான்.

அவனது மகிழ்ச்சியைக் கண்டு திவ்யாவுக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது. தன் அருகே இருந்த அவனது இடக்கைக்குள் தன் இடக்கையைச் சேர்த்துப் பூட்டிக் கொண்டாள். உலகத்தையே வென்ற உற்சாகத்தில் இருந்த ஜீவன் அவளைப் பார்த்து பெரிதாய் சிரித்து வைத்தான்.

என்னா பெரிய ஸ்மைல்… அவனது புன்னகை அளவிற்கு முகவாய் குழிய சிரித்து வைத்தாள் திவ்யா. அந்த மோவாய்க் குழியைக் கண்டதும் ஜீவனின் வலக்கை விரல்கள் தன் கட்டுப்பாடின்றி அவளது முகவாயை வருடின.

அவன் கைகள் முகவாய் அடுத்து முகத்தை அளக்க துவங்கவும் தன் வலக்கையால் அவன் கையைப் பற்றிக் கொண்டவள்.

ஜீவா ஒரு விஷயம் சொல்லணும்பா… மறுபடி மறுபடி ஒவ்வொரு ஞாயித்துக் கிழமையும் அக்காவும், அத்தானும் வீட்டுக்கு வந்து என் மேரேஜ் பத்தியே கேட்கிறாங்கப்பா? உன்னோட ப்ளான் என்னன்னு சொல்லு?

அவளையே மௌனமாய் பார்த்துக் கொண்டிருந்தான் ஜீவன்…

அதுதான் நீங்க நினைச்ச மாதிரியே கடன்லாம் ஏறக்குறைய திருப்பிக் கொடுத்தாச்சே. அப்படியே கடன் இருந்தாலும் அடைச்சுக்கலாம்… அடச் சொல்லுடா டேய்..

அவளைப் பார்த்து ஹா ஹாவென சிரிக்க ஆரம்பித்து விட்டான் ஜீவன்.

….சிரிக்காதீங்க .. கோபத்தில் அவனை அவள் உலுப்பினாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மதி நிலாவின் "தாரிகை..." - சமூக தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

அதான் உனக்கு என்னை மரியாதையா கூப்பிட வரலில்ல, அப்புறம் எதுக்கு வராததை இழுத்துப் பிடிச்சு தொல்லைப் பண்ணுற, அம்மா என்ன சொல்லுவாங்க, அத்தை என்ன சொல்லுவாங்கன்னு… ஒரு முறை நீன்னு சொல்ற, ஒரு முறை நீங்கன்னு சொல்லுற சும்மா கிடந்து குழப்பி அடிக்கிறதுக்கு, எப்பவும் போல நீ வான்னே சொல்லு…

அவனை முறைத்தவள்… நான் என்ன பேசறேன், நீ என்ன சொல்லுற பார்த்தியா? முக்கியமான விஷயம் பேசுனா எப்படி பேச்சை திருப்பற? நான் உன்னை மரியாதையா கூப்பிட முயற்சி செஞ்சிட்டு இருக்கிறேன். அதை முடிஞ்சா பாராட்டணும், இல்லைன்னா சும்மா இருக்கணும்… கெக்கே பிக்கேன்னு சிரிப்பு..

சத்தியமா மிடிலடி…உனக்கு என் மேல கோபம் வந்தா மரியாதையெல்லாம் காத்துல பறந்திடுது. இதில இவங்க எனக்கு மரியாதை கொடுக்கிறாங்களாம் மறுபடி வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தான். சிரித்து கண்களில் கண்ணீர் வரவும் நிமிர்ந்தவன் எதிரில் காளி அவதாரத்தில் இருந்தவளைப் பார்த்து சுதாரித்தான்.

சரி சரி… பொறு உனக்கு பதில் சொல்றேன். அவள் கைகளைப் பற்றிக் கொண்டான். ஈயென சிரிப்பு மூஞ்சை அவளிடம் காட்ட , அவளோ கடுப்பில் இருந்தாள். அசடு வழிந்தவாறே அவள் கைகளில் முத்தமிட்டவன்…

சும்மா சோட்டு… உன் கிட்ட விளையாடாம நான் யார் கிட்ட விளையாடுவேன் சொல்லு?… நம்ம வீட்ல நீதானே எல்லாரையும் விட சின்னவ…

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

About the Author

Jansi

Completed Stories
On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
+1 # RE: தொடர்கதை - என் ஜீவன் நீயே - 02 - ஜான்சிAbiMahesh 2019-02-03 19:59
Mam, Is this continuation of your first story.. I liked the story very much :) Great update Mam.. Looking forward to read more
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் ஜீவன் நீயே - 02 - ஜான்சிmadhumathi9 2019-02-03 17:17
:clap: nice epi mam.waiting to read more. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் ஜீவன் நீயே - 02 - ஜான்சிAdharvJo 2019-02-03 11:54
Lovely update jansi ma'am 👏👏👏 poem :cool: y is Jeevan like dis steam divya-va kandukura mathiriyum irukku appadi illandra mathiriyum therirare. :Q: it's offending chottu facepalm as always his love n care towards ani and ruban is cute 😍😍 and everlasting energy 👌 what is the thirupam.waiting in Robin's bday ? Look forward to read the next update. Thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் ஜீவன் நீயே - 02 - ஜான்சிJansi 2019-02-03 11:22
நிறைய ஸ்பெல்லிங்& வார்த்தைகள் மிஸ்டேக் இந்த எபில...ப்ளீஸ் மன்னிச்சு ப்ர்ண்ட்ஸ்
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் ஜீவன் நீயே - 02 - ஜான்சிSAJU 2019-02-03 09:19
Super ud sis
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் ஜீவன் நீயே - 02 - ஜான்சிJansi 2019-02-03 11:31
Quoting SAJU:
Super ud sis

Thank u so much ma
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் ஜீவன் நீயே - 02 - ஜான்சிSahithyaraj 2019-02-03 08:14
Hey welcome back :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் ஜீவன் நீயே - 02 - ஜான்சிJansi 2019-02-03 11:30
Quoting Sahithyaraj:
Hey welcome back :clap:

நன்றிகள் பல சாஹித்யாராஜ்
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் ஜீவன் நீயே - 02 - ஜான்சிsaaru 2019-02-03 07:10
Welcome back
Nice update janci...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் ஜீவன் நீயே - 02 - ஜான்சிJansi 2019-02-03 11:29
Quoting saaru:
Welcome back
Nice update janci...

மிக்க நன்றிகள் சாரு
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top