(Reading time: 12 - 23 minutes)

“மாதர் குல மாணிக்கமே. என்னே உன் ஆசை. உன் விருப்பம் கண்டு யாம் காண்டாயிட்டோம். அதனால் இப்போதைக்கு அந்த வரம் தந்து அருள முடியாது. இந்த உன்னுடைய பேராசைக்குத் தண்டனையாக இன்னும் கொஞ்ச நாட்களுக்கு உனக்கு இந்த மூஞ்சிகளே சண்டை போட கிடைப்பார்கள் என்று வரம் அளிக்கிறோம்” என்று வசனம் பேசினான் ப்ரித்வி.

“ச்சே. போங்கடா. நீ சரின்னு சொல்லுவா. நானும் உனக்கு பொண்ணு பார்க்கறேன்னு அப்படி இப்படின்னு கொஞ்ச நாள் என்ஜாய் பண்ணியிருப்பேன். இப்போ மிஸ் பண்ணிட்டேன்”

“தெய்வமே. என் மிச்ச சொச்ச வாழ்க்கை உன் கையில் தான் இருக்கு. எதுவா இருந்தாலும் கொஞ்சம் பார்த்து பண்ணுமா”

அதற்கு மேலும் சற்று நேரம் அரட்டை அடித்து விட்டு தங்கள் அறைக்குச் சென்றவன் மொபைல் போனுக்கு ஒரு போட்டோ வர, எடுத்துப் பார்த்தான்.

பார்த்தவுடன் அவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது. அந்த போட்டோவில் இருந்த பெண் வீட்டில் உள்ள நாய்க்குட்டியை விரட்ட கம்பு எடுத்து வரும்போது எடுத்தப் போட்டோ. அதில் அவள் ஷார்ட் குர்தி வித் பாட்டியாலா போட்டு இருக்க, தலை முடியை சென்டர் கிளிப் போட்டு விரித்து விட்டு இருந்தாள். அதில் சிரிக்கக் காரணம் , கையில் கம்போடு தைரியமாக இருக்கிறாளே என்று பார்த்தால் கண்கள் மூடி, முகத்தில் பயம் தெரிய நின்று இருந்தாள். என்னவென்று கவனித்தால், நாய்க்குப் பக்கத்தில் ஒரு கரப்பான் பூச்சி இருக்க அதைப் பார்த்துதான் பயம் என்று புரிந்தது.

அந்தப் படத்தை வைத்துப் பார்த்தால் அவள் துரத்தியது நாயையா, கரப்பானையா என்றும் தெரியவில்லை. பயமும் எதற்கு என்று தெரியவில்லை. அதனால் தான் சிரிப்பு வந்துவிட்டது.

மேலும் அவளைப் பற்றிய விவரங்கள் அடங்கிய மெயில் ஓபன் செய்து பார்த்ததில், காலையில் பேசியவரின் பயம் புரிந்தது.

கிருத்திகாவின் வீட்டில் அவள் பெரியப்பா டூர் பற்றிய விவரம் கேட்க,

“பெரியப்பா, டெல்லி, ஆக்ரா , உத்தர் பிரதேஷ் , ராஜஸ்தானில் சில முக்கிய இடங்கள் தான் சுற்றிப் பார்க்கப் போகிறோம். இங்கிருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் தேர்ட் ஏசி கோச்லே புக் பண்ணிருக்காங்க. ஒரு போகி (Bhogie) முழுக்க எங்கள் கல்லூரி மாணவர்களுக்குத் தான். ரெண்டு ப்ரோப்சர்ஸ் வராங்க. அதோட இத மொத்தமா ஆர்கனைஸ் செய்யும் டூரிசம் ஆபீசர் ஒருத்தரும் வராங்க”

“ஹ்ம்ம். ஓகே. ஜாக்கிரதையா போயிட்டு வா. தப்பத் தட்டிக் கேட்கறது நல்ல விஷயம் தான். அதுக்கு இடம் பொருள் இருக்குன்னும் தெரிஞ்சிக்கனும். நம்ம இடத்திலே நாம் ராஜாவா இருக்கலாம். ஆனால் நமக்குத் தெரியாத, பழக்கமில்லாத இடத்தில் எதுவும் சண்டை வேண்டாம். உனக்கு ஆபத்துன்னா மட்டும் காப்பாத்திக்க முயற்சி பண்ணு. மற்றபடி எங்கே போனாலும் எல்லோருடும் சேர்ந்து போ. அடுத்தவங்களுக்குப் பிரச்சினை வர மாதிரி இருந்தால் அவங்களைக் கூட்டிகிட்டு அந்த இடத்தில் இருந்து நகர்ந்துரு. அவங்களுக்கு சப்போர்ட் பண்றேன்னு அவங்களையும் மாட்டி விட்டு, நீயும் மாட்டிக்காதே.”

என்று இன்னும் கொஞ்சம் நேரம் அட்வைஸ் செய்தார். அதை எல்லாம் சரி, சரி என்று தலை ஆட்டிக் கொண்டு கேட்டுவிட்டு, கவலை இல்லாமல் சென்றாள்.

அவள் அம்மா துர்காவோ தயவு செய்து எந்த வம்புக்கும் போகாதே என்று கொஞ்சி, கெஞ்சிக் கேட்டார்.

“மம்மி. நோ வொர்ரி. எங்கிட்ட யாராவது வாலாட்டினா ஓட்ட நறுக்கிடுவேன்” என்று கூற,

“வாயிலேயே போடறேன். அதைதானே செய்யாதேன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன். நீ என்னடான்னா திரும்பி அதையே சொல்றே”

“போ மம்மி. உன்னை விட்டு ஒரு மாசம் இருக்கப் போறேனே. பாவம் நமக்கு வாய்த்த அடிமை நம்மள விட்டுப் போகுதேன்னு பீலிங் பண்றியா. ஒரு ஊறுகாய் பாட்டில், மிளகாய்பொடி , கை முறுக்கு, சீடை, இப்படி எல்லாம் செஞ்சு கொழந்தைய வழி அனுப்புவோம்னு இல்லாம அட்வைஸ் பண்ணிட்டு இருக்கியே. ஆல் மை டைம்”

“அடிக் கழுதை. வீட்டில் இருக்கும் போதே இதை எல்லாம் தொட்டுக் கூடப் பார்க்க மாட்ட. நாண் , பன்னீர் பட்டர் மசாலா பண்ணு, கோப்தா பண்ணுன்னு என்னை உயிரை வாங்குவ. இப்போ அங்கேதானே போறே. போ. நல்லா அதையே தின்னுட்டு, எப்படா இட்லி கிடைக்கும்னு நாக்கு செத்து வருவ”

“நோ ப்ரோபஸ் மா. அந்த காஞ்சுப் போன நாக்குக்கு இங்கே வந்தவுடன் நீ போடுற பழைய சோறு சாப்பிட்டதும் உயிர் வந்துடும்”

இப்படியே அவள் அம்மாவிடம் வம்பு செய்து, அவள் அப்பாவிடம் தாஜா செய்து சில பல அமௌன்ட் கரெக்ட் பண்ணி விட்டாள்.

இது போக கிளம்பும் முன் அவள் பெரியப்பா,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் "காணும் இடமெல்லாம் நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“கிருத்திகா , உன் அக்கௌன்ட்லே ஒரு இருபதாயிரம் ரூபாய் ட்ரான்ஸ்பார் பண்ணிருக்கேன். செலவுக்கு யூஸ் பண்ணிக்கோ” என்று கூற, அவளுக்கு மயக்கம் வந்து விட்டது.

“அப்பா கிட்டே பணம் வாங்கிருக்கேன் பெரியப்பா” என்று மகள் கூற, பிரதாப்போ

“ஏன் நான் கொடுத்தா வாங்கிக்க மாட்டியா?” எனவும்

“சரி பெரியப்பா” என்று உடனே ஒத்துக் கொண்டாள்.

“வேணுங்கறத வாங்கிக்கோ, நல்லா சாப்பிடு, எங்கே போகனும்னாலும் வசதியா போயிட்டு வா. ஆனால் துணையோட போ . பணம் பத்தலைனால் போன் பண்ணு. நான் ட்ரான்ஸ்பார் பண்றேன்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.