(Reading time: 7 - 14 minutes)

தொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 20 - சுபஸ்ரீ

idhaya siraiyil aayul kaithi

காஷ் சாருவைப் பற்றி முதலில் கவலைக் கொண்டான். ஆனால் பாசம் என்கிற கவசம் சுவாதியை சாருவிடமிருந்து நிச்சயம் காப்பாற்றும் என நம்பினான்.

மறுநாள் அதிகாலையில் தன் நண்பன் சுகியோடு கிளம்பினான். சதுரகிரி என்பது நான்கு திசைகளில் சமஅளவில் நான்கு மலைகள் கொண்டது. அவற்றில் சில மலைகளில் மனித நடமாட்டமே இல்லை. அந்த இடத்திற்குதான் பயணம்.

அவனுக்காக வழியில் காத்திருந்த பாடனிஸ்ட் பத்ரிநாத்தும் சேர்ந்துக் கொண்டார். இருவரும் தாங்கள் இருக்கும் மலைக்கு எதிர்திசையில் உள்ள மலைக்குதான் செல்ல வேண்டும். மதிய வேளையில் ஆசிரமம் அடிவாரத்தில் இருந்து அதனை ஒட்டியுள்ள மலையை ஏறிவிட்டனர்.

எதிர் திசையில் தெரிந்த மலையை பார்த்த ஆகாஷ் “அங்கதான் இருக்காங்க” என்றான்.

அங்கே ஒன்றும் தெரியவில்லை. பச்சைவிரிப்பு போர்த்திய மலை மட்டுமே தெரிந்தது. மரங்களின் அடர்த்தி மிரள வைத்தது.

“உன் பிரெண்ட் கரெக்டா முடிப்பானா?” பத்ரிநாத் கேள்வியில் அவநம்பிக்கையும் ஏளனமும் கூட்டணி போட்டிருந்தது. அவர் கண்களும் அதை பிரதிபலித்தது.

தன் பேக்பேக்கிலிருந்து வெளியே ஒரு புறாவை எடுத்தான் “சுகி நான் சொன்னது நியாபகம் இருக்கா? சரியா முடிச்சுடுடா மானத்த வாங்காம்ம” என சொல்லியவன் அதன் கால்களில் கட்டப்பட்டிருந்த மைக்ரோ கேமரா முதலியவற்றை சரிபார்த்தான்.

அதுவும் பக் பக்கென சத்தத்தோடு கழுத்தை எல்லா பக்கமும் திரும்பிப் பார்த்தது. வெள்ளையான மிருதுவான புறாவை இதமாக தடவிக் கொடுத்தபடி “பழங்காலத்துல ராஜாகளும் காதலர்களும் புறாவதானே தூது அனுப்பினாங்க” என்றான்.

“அப்ப ஓ.கே. ஆனா இப்ப . .” என இழுத்தார் பத்ரிநாத்

“இப்பவும் இதுதான்  . . அங்க போகம காரியத்த முடிக்க டிரை பண்றேன்” .

“எப்படி புறா கரெக்டா போகும்?”

“நான் ஒருதடவை அங்க போயிருக்கேன் . .சுகியோட”

“அப்படியா? எப்படி பிராக்டிஸ் கொடுத்த” ஆச்சரியமாய் கேட்டார்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

புன்னகையோடு பேச்சை மாற்றினான் “சார் உலகத்துல எத்தனையோ பறவை இருக்கு. ஆனா புறாவ மட்டும் ஏன் தூதுக்கு பயன்படுத்தினாங்க?” என ஆகாஷ் கேட்க

தோளை குலுக்கி தெரியாது என்றார் பத்ரிநாத்.

“புறாவோட மூளையில 53 நரம்புக் கலங்களைக் கொண்ட விசேஷ பகுதி இருக்கு. அது GPS NEURONS. பூமியில இருக்கிற காந்த சக்திய கிரகச்சிக பயனப்படுது. அது எத்தனை தொலைவு போனாலும் திரும்ப கரெக்டா வரும். பலவகையில பிராக்டிஸ் குடுப்பாங்க. அதாவது ஒன்வே மட்டும் . . தென் போயிட்டு திரும்ப வரது. .இப்படி நிறைய இருக்கு. பழக்க பழக்க நம்ம குரல நினைவு வெச்சிக்கும் . . ஓரளவு புரிஞ்சிக்கும்”

“இதுக்கு பிராக்டிஸ் கொடுக்கிறது ரொம்ப சுலபம். அதான் மேஜிக் பண்ணும் போதுகூட யூஸ் பண்றாங்க. சின்ன இடத்துல கூட சத்தம்போடாம சமத்தா உட்காரும்”

“ஓ இவ்ளோ இருக்கா? எல்லா கேட்க நல்லாதான் இருக்குது . . ..” நல்லபடியாக எல்லாம் நடக்க வேண்டுமே என்ற ஆதங்கம் பத்ரிநாத் முகத்தில் தெளிவாக தெரிந்தது.

“என்ன அப்படி சொல்லிட்டிங்க இன்னிக்கும் ஓடிஷால புறாவிடு தூது நடக்குது . . அதுவும் போலீஸ் பயன்படுத்தாங்க தெரியுமா?”

சொல்லிக் கொண்டே புறாவை பறக்கவிட்டான். பின்பு தன் செல்போனை இயக்க புறாவின் காலில் கட்டியிருந்த கேமரா மூலம் இருவரும் பார்க்க தொடங்கினர்.

அது முதலில் இங்கும் அங்குமாக பறந்து எங்கெங்கோ அமர்ந்து பத்ரிநாத் பொறுமையை சோதித்தது. “என்னப்பா?” என அலுத்துக் கொண்டார்.

“அதுக்குள்ள அவசரபட்டா எப்படி?” என்பதை போல கீற்று புன்னகையுடன் அவரை பார்த்தான் ஆகாஷ்.

கடைசியாக அந்த மலையில் உள்ள ஒரே வீட்டின் ஜன்னலில் அமர்ந்தது. காலில் கட்டியிருந்த கேமரா 360 டிகிரி சுற்றும் என்பதால் பிரச்சனை இல்லை. ஆகாஷ் வீட்டின் உள்ளே போக்கஸ் செய்து ஸ்னாப்ஷாட்ஸ் எடுத்து தள்ளினான். அத்தனையும் ரெகார்ட்டும் ஆகியது.

அது பழைய வீடு யார் அந்த இடத்தில் கட்டி இருக்கிறார்கள் என்பதெல்லாம் தெரியவில்லை.

அங்கே ஆசிரமத்தில் அவ்வப்போது வரும் இருவர் மற்றும் அவர்களோடு மூவர் என மொத்தம் ஐந்து பேர் இருந்தனர்.

“இது என்னடா சோலி . . ஆடு மாடு மேயுற மாதிரி இல தழ கொண்டாந்து வைக்கறது. கத்தியும் ரத்தமும் பாத்த கைடா இது” என ஒருவன் ஆலுத்துக் கொண்டான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் "காணும் இடமெல்லாம் நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“டேய் பாலா . . . சரக்கெல்லாம் சீக்கிரமா கொண்டு போவணும் . . இங்கயே ரொம்ப நாள் வெச்சிருக்க முடியாது”

“ஆமா எவனோ மோப்பம் பிடிக்கிறான். அது நல்லா புரியுது” என்றான் ஆசிரமத்திற்க்கு வரும் இருவரில் ஒருவன்.

“நாம பண்றது ரொம்ப தப்புடா” என ஒருவன் சொல்ல

“இவனுக்கு என்ன திடீல்னு நானோதெயம்” என குடி போதையில் வாய் குளறியது

“வெளிநாட்டுகாரன் புத்திசாலிப்பா நம்ம சரக்கயே எடுத்து நமக்கே பத்து மடங்கு வெல அதிகமா விக்கிறான்” என ஒருவன் சொல்ல மற்றவர்கள் அதை ஆமோதிப்பதைப் போல சிரித்தார்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.