(Reading time: 7 - 14 minutes)

“துரை சார் எப்ப வருவாரு?”

“இன்நேரத்திக்கு வந்திருக்கணுமே”

இவை அனைத்தும் ரெகார்ட் ஆகியது. ஆனால் சுகி ஒரே மாதிரி உட்காராமல் ஆங்காங்கே தாவிக் கொண்டே இருந்தது.

“யாரு துரை?” பத்ரிநாத் கேட்க

“யாருக்கு தெரியும்?” செல்போனிலிருந்து விழிகளை அகற்றாமல் சொன்னான் ஆகாஷ்

அப்போது உள்ளே வேறு ஒரு நபர்வர . . ஒருசில மணி துளிகளில் சுகி பறந்துவிட்டது.

“சுகி” ஆகாஷ் பத்ரிநாத் இருவரும் ஒருசேர படபடத்தனர்..

அது மீண்டும் இங்கும் அங்குமாய் போக்கு காட்டியது. பின்பு அங்கே சென்று அமர்ந்தது. அவன் முகம் தெளிவாய் தெரிந்தது. அவன்தான் துரையாக இருக்க வேண்டும் என இருவரும் நினைத்துக் கொண்டனர்.

“உங்க அசிஸ்டெண்ட்ஸ் வந்தாச்சா?” ஆகாஷ் கேட்டான்

“வந்தாச்சு . . உங்களை மீட் பண்ண சொல்றேன்”

“வேண்டா நம்பர் குடுங்க . . நான் போன்ல பேசிக்கிறேன்”

சற்று நேரத்திற்க்கெல்லாம் சுகி திரும்பியது. ஆகாஷ் சுகியோடு ஆசிரமம் திரும்ப பத்ரிநாத் அவர் இருப்பிடம் சென்றார்.

ஆகாஷ் தன் அறைக்கு சென்று நெட்டில் தேட துரை மிகப் பெரிய தொழிலதிபர் என தெரியவந்தது. அவன் முழுவிவரத்தையும் முடிந்தவரை சேகரித்தான்.

அடுத்த இரண்டு  நாட்கள் அந்த இருவரும் உணவு உண்ணும் வேளை மட்டுமே வந்தனர்.

“இதுங்க ரெண்டு ஏன் இங்கயே சுத்துது . . கொட்டிக்க இடமா இல்ல” சாரு ஆகாஷ் அறையில் இருந்து வெளியே நோட்டமிட்டபடி கேட்டாள்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“அவங்க கொட்டிக்க வரல . . இங்க நோட்டம்விட வந்திருக்காங்க . . சந்தேகப்படற மாதிரி ஏதாவது நடக்குதானு உளவு பாக்க வராங்க” என்றான் தன் கையில் இருந்த அவளின் ஒட்டுதாடியை நீவியபடி

“இப்ப என்ன செய்யப் போற ஆகாஷ்”

“சுவாதி எப்படி பிஹேவ் பண்றா?”

“என்னோட பேசறதே இல்ல . . முகத்த திருப்பிக்கிட்டு போறா”

“குட்”

“என்ன குட்?”

“நீயும் அவளோட பேசாத . . அவள கண்டுகாத  . . ஆனா அவளோட ஒவ்வொரு அசைவையும் கவனிக்கணும் புரியுதா”

“அதுங்க ரெண்டும் கொட்டிக்கிட்டு கிளம்ப போகுது”

“ஐயோ டைம் ஆச்சு” என அவசரமாக வெளியேற தயாரானான்

“என்னடா செய்யபோறா?”

“தாத்தா ரெடி ஆகு” என தாடியை அவளிடம் வீசினான்

இருவரும் கீழே இறங்கி வந்தனர். தாத்தாவை தன்னோடு தரதரவென இழுத்துவராத குறையாக அழைத்து ஒரிடத்தில் அமர்ந்தான்.

“பேராண்டி நீ பண்றது ஒண்ணுமே புரியலடா” என்றாள் சாரு தாத்தா

“சும்மா இரு” என சைகை செய்தவன்

“இங்க மூலிகையெல்லாம் கொள்ளை அடிக்கறாங்களாமே” என ஆகாஷ் அந்த இருவர் காதில் விழும்படி சத்தமாக பேசினான்.

வெளியேற சென்றவர்கள் இவன் பேச்சு கேட்டு அதிர்ந்தபடி நின்று சுற்றும் முற்றும் பார்த்து ஆகாஷ் அருகில் வந்தமர்ந்தனர்.

சாரு நடுங்கி போனாள் “ஏண்டா இந்த கொலைவெறி” என்பதுப் போல ஆகாஷை முறைத்தாள்.

“எவ்ளோ நாள்தான் கண்ணாமூச்சி ஆடறது” என்றான் ஆகாஷ் மெல்லிய குரலில்.

“அப்ப இவங்களோட சண்டை போட போறியா . . பைட் சீனா ஜாலிதான். சூப்பர்” என்றாள் குதூகலமாக

“நான் அடி வாங்கறதுல அவ்ளோ சந்தோஷமா உனக்கு”

“நீ ஹீரோடா. ஒத்த ஆளா ஐம்பது பேற அடிக்கணும்” என்றாள்

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பத்மினியின் "என் மடியில் பூத்த மலரே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“அது சினிமா தாயே . . இங்க அதெல்லாம் செட் ஆகாது.”

“அப்ப என்னதான் செய்யப் போற?” அலுத்துக் கொண்டாள்

“அஹிம்சாவழில போராட போறேன்”

“புரியலயே”

“கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் நடக்கப் போகுது” என்றான் ஆகாஷ்.

தொடரும் . .

Episode # 19

Episode # 21

{kunena_discuss:1199}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.