Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 13 - சசிரேகா - 5.0 out of 5 based on 3 votes
Pin It

தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 13 - சசிரேகா

Kaanum idamellam neeye

ன்று

மறுநாள் காலையில் தர்னேந்திரன் பயிற்சி செய்ய கடற்கரைக்குச் செல்லாமல் நேராக ஆலயத்திற்கு சென்று அங்கிருந்த சுரங்கப்பாதை வழியாக பத்மாவதியின் மாளிகையை அடைந்தான்.  இன்னும் விடியவில்லை, இருள் அதிகமாகவே இருந்ததால் அவனை யாரும் பார்க்கவில்லை காவலர்கள் கூட உறக்க கலக்கத்தில் இருந்ததால் தர்னேந்திரனுக்கு மிகவும் வசதியாகிவிட்டது.

அந்த இடத்தில் யாருமே இல்லை, பாவை விளக்கை திறந்துக் கொண்டு வெளியே வந்த தர்னேந்திரன் சுற்றி முற்றி பார்த்தான். அந்த சாரட் வண்டியில் பூட்டப்படும் குதிரைகள் கூட அங்கு இல்லை. அனைத்தும் பத்மாவதியின் ஏற்பாடுகள் என நினைத்துக் கொண்டவன் உப்பரிகையை பார்த்தான்.

புதிதாக அந்த உப்பரிகைக்கும் கீழே இருக்கும் பாவை விளக்கைச் சுற்றி ஒரு அடர்ந்த கொடி செல்வதைக் கண்டு சிரித்தான். அந்த கொடியைப் பற்றிக்கொண்டு மெல்ல ஏறி உப்பரிகையில் குதித்தவன் சுற்றும் முற்றும் பார்த்தபடியே அந்த அறைக்குள் நுழைந்தான்.

அறைக்குள்ளும் வெளியாட்கள் யாருமில்லை, களறி பயிற்சி என்றதும் பத்மாவதி தனது அறையையே மாற்றியிருந்தாள். பயற்சிக்காகவே ஒரு பக்கமாக இருந்த பொருட்களை இன்னொரு பக்கத்திற்கு இடம் மாற்றி அந்த இடத்தை பெரிதாக காலி செய்து வைத்திருந்தாள்.

அந்த இடத்தில் பல வித கத்தி, வாள், குத்துவாள், மான்கொம்பு, கோடாலி மற்றும் கேடயமும் இருப்பதைக் கண்டு வியந்தான்

”பத்மாவதி தயார் நிலைக்கு வந்துவிட்டாள் போலும், இனி நாம்தான் தயாராக வேண்டும்” என நினைத்தபடியே பத்மாவதியை தேடினான்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அவளோ அவனுக்காகவே விரைவாக எழுந்து நீராடி களறிக்காகவே தனது உடையை மாற்றி கட்டியிருந்தாள், தர்னேந்திரனை அன்று காயம் பட்டப்பொழுது இங்கு அழைத்து வந்தாளே அன்று அவனது உடையை மாற்றி வேறு உடையை அவனுக்கு தந்திருந்தாள். அதே போல ரத்தினங்களின் பரிசோதனைக்காக அவனை மாளிகைக்கு அழைத்து வந்த போது அவனது ஆடையை எடுத்துக் கொண்டு சந்திரகலாவின் உடையை அவனுக்கு தந்திருந்தாள். அவ்விரண்டு உடைகளும் இப்போது அவளுக்கு பயன்பட்டது.

அவனது உடையை அணிந்துக் கொண்டு அவனுக்காக காத்திருந்தவள் அவனது குணத்தை நன்றாக புரிந்துக் கொள்ள எண்ணி வேண்டுமென்றே தனது மெத்தையில் படுத்துக் கொண்டு போர்வையை இழுத்து மூடிக்கொண்டு முகத்தை மட்டும் நன்றாக காட்டியபடி படுத்திருந்தாள். தர்னேந்திரன் வந்தால் உறங்கிக் கொண்டிருக்கும் பத்மாவதியை அவன் என்ன செய்வான் என அறியும் ஆவலில் அவள் அவனை எதிர்பார்த்து காத்திருந்தாள்.

தர்னேந்திரனும் அந்த அறையில் பத்மாவதியைத் தேடியவன் அவள் உறங்குவதைக் கண்டு ரசித்தான். அதே சமயம்

”விரைவாக இவளுக்கு பயிற்சி கற்றுத் தந்துவிட வேண்டும், மாதவனை நம்ப இயலாது என் மீது துளி சந்தேகம் வந்தாலும் பத்மாவதியை இதே அறையில் சிறைபடுத்திவிடுவான்” என நினைத்தவன் பத்மாவதியிடம் சென்று தன்னை குருவாக நினைத்துக் கொண்டு

”பத்மாவதி எழுந்திரு” என கத்தினான். அவளோ அவன் கத்தியது கேட்டும் அமைதியாக உறங்குவது போல் பாசாங்கு செய்யவே தர்னேந்திரனோ

”களறி கற்கும் எண்ணம் இருப்பவள் இப்படியா உறங்குவாள், என்னை அலைக்கழிக்க இவ்வாறு செய்கிறாளா” என நினைத்தவன் அங்கு ஒரு பக்கத்தில் இருந்த தண்ணீர் குவளையை எடுத்து அதிலிருந்த நீரை அவளின் முகத்தில் ஊற்ற பதறியபடியே எழுந்து அமர்ந்தாள். தர்னேந்திரன் கோபமாக இருப்பதைக் கண்டு அதிர்ந்தாள்

”மன்னித்துக் கொள்ளுங்கள்”

“களறி பயிற்சிக்கு நேரமாகிவிட்டது, சென்று நீராடி விட்டு வா” என சொல்ல அவளோ

”நான் எப்போதோ தயாராகிவிட்டேன்” என சொல்லியபடியே முகத்தில் படிந்த நீரை துடைத்தபடியே படுக்கையை விட்டு வெளியே வந்து அவன் முன் நின்று கைகூப்பி வணங்கினாள்.

அவளையே ஏற இறங்கப் பார்த்தான் தர்னேந்திரன்

”நீ எனது உடையை அணிந்துக் கொண்டு என்ன செய்கிறாய்”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பத்மினியின் "என் மடியில் பூத்த மலரே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

”என்னிடம் உள்ள ஆடைகளை அணிந்துக் கொண்டு பயிற்சி கற்பது சிரமம் என்றீர்களே அதனால்”

“சரி தயாராகிவிட்ட பிறகு எதற்கு உறங்கினாய்”

“அவ்வாறு உறங்குவதாக நடித்தால் தர்னேந்திரன் என்னை என்ன செய்வார் என தெரிந்துக் கொள்ள நான் நினைத்தேன்”

“நான் சுத்தமானவன், அநாதரவற்ற நிலையில் இருப்பவர்களை நான் என் ஆசைக்கு பயன்படுத்திக் கொள்ள மாட்டேன். உன்னுடன் காதல் புரியும் நேரம் இதுவல்ல, இது பயிற்சிக்கான நேரம், மாதவனுக்கு நம்மைப் பற்றின விவரம் தெரிந்துவிட்டால் உனக்கு ஆபத்து, அதற்குள் விரைவாக உனக்கு சில வித்தைகளை கற்றுத் தந்து விடுகிறேன் அதை கற்றுக்கொள் வா” என அழைக்க அவளும் சரியென தலையாட்டிவிட்டு அவன் பின் சென்றாள்.

அங்கிருந்த கத்திகளைப் பார்த்தவன்

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • Aazhiyin kadhaliAazhiyin kadhali
  • En idhayam kavarntha thamaraiyeEn idhayam kavarntha thamaraiye
  • Idho oru kadhal kathai Pagam 1Idho oru kadhal kathai Pagam 1
  • Kadhal CircusKadhal Circus
  • MashaMasha
  • Nilave ennidam nerungatheNilave ennidam nerungathe
  • Unnai kaanaathu urugum nodi neramUnnai kaanaathu urugum nodi neram
  • Ullathal unnai nerungugirenUllathal unnai nerungugiren

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 13 - சசிரேகாராணி 2019-02-08 17:06
அருமையான கதை தர்னேந்திரன் பத்மாவதியின் காதல் அழகு. அடுத்த எபியில் பத்மாவதியின் கதை முடியும் என நினைக்கிறேன் அடுத்த எபிக்காக ஆவலாக காத்திருக்கிறேன்
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 13 - சசிரேகாAdharvJo 2019-02-07 21:22
Sasi ma'am as you said indha screenplay and way of narration is completely different :clap: :clap: :hatsoff: Dialogues ellam semaya eluthi irukinga :clap: Looks like this Madhu is the black-sheep, ethukku ivanukku indha budhi 3:) Madhavan rombha dummy ps pole irukaru facepalm Nanba nanban solluranga mithrudhrogigal :angry: Ippo suspense ellam break aguradhu nala irukku but tharan-kum padmavati-kum ena anadhu :sad: dei niranja unamathiri nanum waiting facepalm innum konjam neram Esh thoongi irukka kudadha pch...curious to read the next epi.. thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 13 - சசிரேகாmahinagaraj 2019-02-07 15:01
கதை செம செம... :clap: :clap:
சூப்பரா இருக்கு மேம்... :GL: தர்னேந்திரன் இன்னும் கொஞ்சம் ஆழமா யோசனை செய்து இருக்கனும்.. :yes:
அழகிய காதல் கதை... ;-) :lol:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 13 - சசிரேகாViji. P 2019-02-07 14:00
Super epi
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 13 - சசிரேகாmadhumathi9 2019-02-07 08:20
wow very interesting & beautiful epi. :thnkx: :thnkx: 4 this epi & more pages. :clap: :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 13 - சசிரேகாSAJU 2019-02-06 20:50
Nice ud sis
Reply | Reply with quote | Quote
# KINAruna 2019-02-06 18:27
Sooperb mam :clap: aana adhukkaprom enna aachu :Q: eagerly waiting for the next update
Reply | Reply with quote | Quote

Coming Soon...

Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee
Go to top