Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 13 - சசிரேகா - 5.0 out of 5 based on 3 votes

”பத்மாவதி உனக்கு காயம் பட்டுள்ளது” என பதட்டமாக அவளை நெருங்கி காயம்பட்ட இடத்தை தடவி விட்டான், அவன் கண்ணில் கவலை மாத்திரமே தெரிந்தது அதைக் கண்ட பத்மாவதியோ

”அதனால் என்ன நான் காயத்திற்கு மருந்திடுகிறேன்”

“இதற்குத்தான் நான் சொன்னேன், மரக்கத்தியை கொண்டு பயிற்சி எடு என்று கேட்டாயா பார் எப்படி காயம் பட்டுள்ளது, நீ வா முதலில் உனக்கு மருந்திடுகிறேன்” என அவளது கையை பிடித்து இழுத்துக் கொண்டு படுக்கையில் அமர வைத்தவன்

”மருந்துகள் எங்குள்ளது” என கேட்க அவள் ஓரிடத்தில் கை காட்டவும் அந்த திசையில் சென்றான். அவளோ மருந்து இடுவதற்கு வசதியாக தான் அணிந்திருந்த மேல் அங்கியை அவிழ்த்துவிட்டு ஒரு சின்ன கச்சையால் தன் அழகை மறைத்துக் கொண்டு அவனுக்காக காத்திருந்தாள்.

மருந்துகள் இருந்த இடத்தில் இருந்து தேவையான மருந்தை எடுத்துக் கொண்டு திரும்பி வந்தவன் அங்கு பத்மாவதி இருக்கும் நிலையைக் கண்டு கூச்சத்தில் கண்கள் தாழ்த்தியவன்

”இந்தா நீயே இதை பூசிக்கொள் நான் செல்கிறேன்”

“இது அநீதியாகும் என்னால் எப்படி இதை செய்ய முடியும்” என சொல்ல

”ஆனால் நீ இப்படி” என அவன் இழுத்துப் பேச

“என்ன”

”ஒன்றுமில்லை” என சொல்லியபடியே அவளின் பக்கம் அமர்ந்தான். கைகள் நடுங்க அவளுக்கு காயம் பட்ட இடத்தில் மூலிகை மருந்தை மெல்ல தடவலானான். மருந்து பட்டதால் உடல் சிலிர்த்து வலியால்

”ஆஆ” என அவள் மெல்ல முனகவும் தர்னேந்திரனுக்கு அச்சமும் கவலையும் அதிகமாகி போனது

”பொறுத்துக் கொள் பத்மாவதி” என சொல்லியபடியே அவளது அனைத்து காயத்திற்கும் மருந்திட்டவன் எழுந்து நின்று அவளையே பார்த்தான்.

பயிற்சியால் வேர்த்து விறுவிறுத்து போயிருந்தாலும் அழகு குறையாத ரத்தினமாகவே இருந்த பத்மாவதியைக் கண்டு அணுஅணுவாக ரசித்தான்.

அவளோ மருந்து இட்டதும் வலியில் முனகியவள் தலை நிமிர்ந்து பார்த்தாள். தர்னேந்திரன் தன்னையே பார்ப்பதைக் கண்டு முதலில் வியந்தவள் பின்பு கன்னம் சிவக்க நாணத்தால் முகம் கவிழ்ந்தாள்

”தாங்கள் செல்லும் நேரம் வந்துவிட்டது” என்றாள்

அவள் மனதில் அவன் செல்லவே கூடாது என்ற ஏக்கம் இருந்தது, அது அவளின் குரலில் தெளிவாக தெரியவே சிரிப்புடன் அவளிடம்

”போக மனம் வரவில்லையே, பத்மாவதியிடம் தஞ்சம் கொண்டு விடு என என் மனது சொல்கிறது” என அவன் சொல்ல தான் நினைத்ததை சொல்லிவிட்ட தர்னேந்திரனை ஆச்சர்யமாக விழிவிரிய தலை தூக்கி மகிழ்வாகப் பார்த்தாள்.

அவளின் ஆனந்தத்தை கெடுக்க நினையாத தர்னேந்திரனோ அவளிடம் நெருங்கினான். அவள் புறம் தலை குனிந்தவன் செவ்விய அவள் இதழில் ஆசையுடன் முத்தம் பதித்தவன் மெல்ல அவளை விட்டு விலகினான். அவளோ அவன் தந்த முத்தத்தின் விளைவால் கண்கள் மூடி கனவுலகில் மிதந்தாள். அவளது கனவை கலைக்க நினையாமல் அங்கிருந்து சத்தம் எழுப்பாமல் விரைவாக வெளியேறி சென்றுவிட்டான்.

அவன் சென்றதும் காதல் மயக்கம் தெளிந்த பத்மாவதியோ சுற்றி முற்றும் பார்த்தாள். அங்கு அவன் இல்லாமல் போகவே மனம் கலங்கினாள். அவன் அளித்த முத்தத்தையே நினைத்துப் பார்த்தாள். அந்நேரம் அறையின் கதவு தட்டும் சத்தம் கேட்டு அதிர்ந்து எழுந்து நின்றாள்

”யார்”

“மாதவன் வந்திருக்கிறேன் கதவைத் திற”

“நான் நீராட செல்கிறேன் பிறகு பார்க்கலாம்”

”உனக்கு ஒன்றும் நேரவில்லையே”

“ஏன்”

“உன் அறையில் இருந்து கருவிகளின் சத்தம் கேட்டதாக காவலர்கள் சொன்னார்களே”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சாகம்பரியின் "மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம்" - மர்மமும் காதலும் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“அது கருவிகள் அல்ல பொம்மைகள், நான் பொம்மைகள் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தேன்” என சொல்ல அதைக் கேட்ட மாதவன் நம்பாமல்

”சரி ஒரு முறை உனது அறையை நான் சோதனையிட வேண்டும்”

“முடியாது”

“என்னை தடுக்காதே”

“என்னால் உன்னை அனுமதிக்க இயலாது, இன்னும் நமக்குள் திருமண பந்தம் உருவாகவில்லை, இப்பொழுதும் நான் புவன பூபதி பாண்டியரின் மகள்தான், என் அனுமதியில்லாமல் என்னை உன்னால் காணவே இயலாது இங்கிருந்து சென்றுவிடு” என பத்மாவதி அதிகாரமாக சொல்லவும் அதைக்கேட்டு குழம்பிய மாதவனும்

About the Author

Sasirekha

Sasirekha

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 13 - சசிரேகாராணி 2019-02-08 17:06
அருமையான கதை தர்னேந்திரன் பத்மாவதியின் காதல் அழகு. அடுத்த எபியில் பத்மாவதியின் கதை முடியும் என நினைக்கிறேன் அடுத்த எபிக்காக ஆவலாக காத்திருக்கிறேன்
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 13 - சசிரேகாAdharvJo 2019-02-07 21:22
Sasi ma'am as you said indha screenplay and way of narration is completely different :clap: :clap: :hatsoff: Dialogues ellam semaya eluthi irukinga :clap: Looks like this Madhu is the black-sheep, ethukku ivanukku indha budhi 3:) Madhavan rombha dummy ps pole irukaru facepalm Nanba nanban solluranga mithrudhrogigal :angry: Ippo suspense ellam break aguradhu nala irukku but tharan-kum padmavati-kum ena anadhu :sad: dei niranja unamathiri nanum waiting facepalm innum konjam neram Esh thoongi irukka kudadha pch...curious to read the next epi.. thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 13 - சசிரேகாmahinagaraj 2019-02-07 15:01
கதை செம செம... :clap: :clap:
சூப்பரா இருக்கு மேம்... :GL: தர்னேந்திரன் இன்னும் கொஞ்சம் ஆழமா யோசனை செய்து இருக்கனும்.. :yes:
அழகிய காதல் கதை... ;-) :lol:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 13 - சசிரேகாViji. P 2019-02-07 14:00
Super epi
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 13 - சசிரேகாmadhumathi9 2019-02-07 08:20
wow very interesting & beautiful epi. :thnkx: :thnkx: 4 this epi & more pages. :clap: :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 13 - சசிரேகாSAJU 2019-02-06 20:50
Nice ud sis
Reply | Reply with quote | Quote
# KINAruna 2019-02-06 18:27
Sooperb mam :clap: aana adhukkaprom enna aachu :Q: eagerly waiting for the next update
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top