Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 13 - சசிரேகா - 5.0 out of 5 based on 3 votes

“ஏனோ இன்று உடல் நிலை சரியில்லை நான் செல்கிறேன்” என சொல்லிய தர்னேந்திரன் அங்கிருந்து விரைவாக தனது இல்லத்தை நோக்கிச் செல்ல மதுசூதனன் தர்னேந்திரனின் புதிய செயல்களைக் கண்டு சந்தேகப்படலானான்.

இல்லத்திற்கு சென்றவனுக்கு பத்மாவதியின் அருகாமையே நினைவில் வர அவனால் எக்காரியத்தையும் சரிவர செய்ய இயலாமல் தடுமாறிப் போனான். எப்பொழுது பயிற்சி தர பத்மாவதியை காணச் செல்லலாம் என நேரத்தை ஓட்டலானான். நேரமோ அவனுக்கு சதிசெய்தது. இல்லத்தில் தந்தையும் இல்லை என்ன செய்வது என புரியாமல் குழம்பியவன் இல்லத்திலேயே களறி பயிற்சியை எடுக்கலானான்.

அவன் பின்னே மறைமுகமாக வந்த மதுசூதனனோ இல்லத்தில் பயிற்சி எடுக்கும் தர்னேந்திரனைக் கண்டுத் திகைத்தான். அவசரமாக அங்கிருந்து ஓட்டமும் நடையுமாக யாரையோ காணச் சென்றான். சிரமத்துடன் அந்த நாளை ஓட்டியவன் மறுநாள் விரைவாகவே பத்மாவதியை காணச் சென்றான். செல்லும் போதே அவன் வடித்த சிலையையும் எடுத்துக் கொண்டுச் சென்றான்.

சிலையை அவளின் அறையில் அவள் முன் வைத்துவிட்டு அவளையே பார்த்தான். அவளோ தன்னைப் போன்ற ஒரு சிலையைக் கண்டதும் மெய்சிலிர்த்தாள்

”இது நானா”

“அல்ல இது ஒரு பெண் சிலை”

”ஆனால் இது நான்தானே”

“இருக்கலாம், எத்தனை சிலைகள் வடித்தாலும் அவை அனைத்தும் பத்மாவதியாகிவிடாதே” என சொல்லிவிட்டு அவளை நெருங்கியவன் ஆசையாக அவளது இடையை பற்றி இழுத்து அணைத்துக் கொண்டான். அவனது செயலால் மனம் கவர்ந்த பத்மாவதியோ வேண்டுமென்றே

”குருவே பயிற்சிக்கு நேரம் ஆகிவிட்டது” என சொல்ல அவனோ சட்டென அவளை விட்டு விலகி நின்றான்

”ஆம் பயிற்சிக்கு நேரம் ஆகிவிட்டது. நேற்று மாதவனை நான் சந்தித்தேன், உன்னைப்பற்றி உரைத்தான். நீ அவனை விரட்டிவிட்டாயாமே”

“ஆம்” என்றாள் கோபமாக

”ஏன் இந்த கோபம்”

“அவனது நடவடிக்கைகள் எனக்குப் பிடிக்கவில்லை”

“அமைதிக் கொள் பத்மாவதி, இவ்வாறு நீ நடந்துக் கொண்டால் அவனுக்கு உன் மேல் ஐயம் எழும், இப்போது அவனுக்கு எதுவும் தெரியாமல் இருப்பது நல்லது”

“எவ்வளவு நாட்கள் அப்படியிருப்பது”

”உன் கரத்தை நான் பற்றும் வரைதான், அந்த நாளும் விரைவிலேயே வந்துவிடும், என்னை நம்பு அதுவரை நீ அமைதியாக நடந்துக் கொள்”

”முயற்சிக்கிறேன்” என்றாள் சோகமாக அவளது வாடிய முகத்தைக் கண்டு மனம் வாடிய தர்னேந்திரனோ அவளின் அழகிய கன்னத்தில் முத்தம் தந்தவன் அவளது முகத்தையே பார்த்தான்

”உன்னை வைத்துக் கொண்டு என்னால் அமைதியாகவே இருக்க முடியவில்லை ஏன் இவ்வளவு அழகை உன்னுள் வைத்துள்ளாய் பத்மாவதி” என அலுப்பாக சொல்ல அவளோ

“நான் அழகாக இல்லையென்றாலும் தங்களால் என்னை நேசிக்க இயலுமா”

“கண்டிப்பாக பத்மாவதியின் அழகை விட அவளது குணமே எனக்குப் பிடித்திருந்தது”

“அப்படியா நான் நினைத்தேன் தாங்களும் எனது அழகைத்தான் நேசித்தீர்கள் என்று”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா வெயின் "மையலில் மனம் சாய்ந்த வேளை..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“அது உண்மை, முதலில் உன் அழகு என்னை உன் பால் இழுக்க வைத்தது ஆனால் அன்று சுதர்சனனுக்காக நீ உன் உயிரை இழக்க துணிந்தாயே அப்போதே உன் அழகை விட உன் குணத்தை நான் விரும்ப ஆரம்பித்தேன். எனக்கு தேவை இந்த பத்மாவதிதான் அவளது அழகு அல்ல” என சொல்லியவன் ஆசையாக மற்றொரு கன்னத்தில் முத்தம் தரவும் அவள் உடல் சிலிர்த்து அவனை அணைத்துக் கொண்டாள்

”எனக்கு நேற்று நேரமே செல்லவில்லை, மறுபடியும் தங்களை எப்பொழுது காணலாம் என்று தவித்தே போனேன், தங்களை கண்டபின்புதான் என் உயிர் திரும்பியது என்னை விட்டு செல்லாமல் இங்கேயே இருக்க இயலாதா”

“சிறிது காலமே பொறுத்துக் கொள் பத்மாவதி, என் தந்தை ஊரில் இல்லை இப்பொழுது நானும் இல்லாமல் போனால் வேண்டாத ஐயங்களுக்கு நான் ஆளாக நேரும் சரி வா நாம் பயிற்சியை மேற்கொள்வோம்” என சொல்லி அவளுக்கு பயிற்சியை அளிக்கலானான், அவளும் கற்றுக் கொள்ள ஆரம்பித்தாள். அவனும் பயிற்சி முடிந்த உடன் அவளுடன் காதல் விளையாட்டுக்கள் புரிந்துவிட்டே தன் இல்லத்தை அடைந்தான்.

இல்லத்திலேயே தனக்கான பயிற்சியை செய்யலானான். அப்படி இப்படி என நேரத்தை ஓட்டி மறுநாள் பத்மாவதியை காண ஆவலாக சென்றான். அவளுக்கு பயிற்சியை அதிகமாக அளித்தான். அதே சமயம் அவளுடன் காதலையும் அள்ள அள்ளக்குறையாமல் கொடுத்து வந்தான். இருவரும் காதலில் கரைந்துக் கொண்டே பயிற்சியிலும் தேறிக் கொண்டிருந்தார்கள். நாட்களும் மின்னல் வேகத்தில் சென்றது, அன்று வழக்கம் போல பத்மாவதியை கண்டு காதலுடன் அவளுடன் அளவலாவிவிட்டு சுரங்கம் வழியாக ஆலயத்திற்குச் சென்றான்.

ஆலயத்தை விட்டு வெளியே வந்தவன் அங்கு மதுசூதனன் இருப்பதைக் கண்டு அதிர்ந்தான்

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • Katrin kanalKatrin kanal
  • Kallaraiyil oru karuvaraiKallaraiyil oru karuvarai
  • Maayakkottai - MinnalMaayakkottai - Minnal
  • Theeradha KadhalTheeradha Kadhal
  • ThazhamPoove Vaasam VeesuThazhamPoove Vaasam Veesu
  • Kids Fun StoriesKids Fun Stories
  • Unnai ondru ketpenUnnai ondru ketpen
  • Yaar arivaarYaar arivaar

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 13 - சசிரேகாராணி 2019-02-08 17:06
அருமையான கதை தர்னேந்திரன் பத்மாவதியின் காதல் அழகு. அடுத்த எபியில் பத்மாவதியின் கதை முடியும் என நினைக்கிறேன் அடுத்த எபிக்காக ஆவலாக காத்திருக்கிறேன்
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 13 - சசிரேகாAdharvJo 2019-02-07 21:22
Sasi ma'am as you said indha screenplay and way of narration is completely different :clap: :clap: :hatsoff: Dialogues ellam semaya eluthi irukinga :clap: Looks like this Madhu is the black-sheep, ethukku ivanukku indha budhi 3:) Madhavan rombha dummy ps pole irukaru facepalm Nanba nanban solluranga mithrudhrogigal :angry: Ippo suspense ellam break aguradhu nala irukku but tharan-kum padmavati-kum ena anadhu :sad: dei niranja unamathiri nanum waiting facepalm innum konjam neram Esh thoongi irukka kudadha pch...curious to read the next epi.. thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 13 - சசிரேகாmahinagaraj 2019-02-07 15:01
கதை செம செம... :clap: :clap:
சூப்பரா இருக்கு மேம்... :GL: தர்னேந்திரன் இன்னும் கொஞ்சம் ஆழமா யோசனை செய்து இருக்கனும்.. :yes:
அழகிய காதல் கதை... ;-) :lol:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 13 - சசிரேகாViji. P 2019-02-07 14:00
Super epi
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 13 - சசிரேகாmadhumathi9 2019-02-07 08:20
wow very interesting & beautiful epi. :thnkx: :thnkx: 4 this epi & more pages. :clap: :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 13 - சசிரேகாSAJU 2019-02-06 20:50
Nice ud sis
Reply | Reply with quote | Quote
# KINAruna 2019-02-06 18:27
Sooperb mam :clap: aana adhukkaprom enna aachu :Q: eagerly waiting for the next update
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top