(Reading time: 12 - 23 minutes)

“சரி பெரியப்பா.”

“தினமும் போன் பண்ணு.’ என்று கூறி வழி அனுப்பி வைத்தார்.

இவள் இங்கே டூர் கிளம்பும் போது, அந்த அரசியல்வாதியின் பையனும் அதே ட்ரெயினில் ஏறினான். தேர்தல் நேரத்தில் அவன் செய்த காரியத்தால் அக்கம் பக்கம் பரவி, அவரின் கட்சி அவரைக் கூப்பிட்டு கண்டித்தது.

அதனால் அவனை யார் கண்ணிலும் படாமல் கொஞ்சநாள் வெளியூர் சென்று இருக்கச் சொன்னார்.

அவன் அதற்கும் சண்டை போடவே , வேறு வழியில்லாமல் டூர் அனுப்ப முடிவு செய்தார்.

அதன்படி அவனுக்கும் அவனோட பிரெண்ட்ஸ் மூன்று பேருக்கும் டிக்கெட் எடுத்துக் கொடுத்து அனுப்பி வைத்தார்.

அவன் ஸ்டேஷன் வரும்வரை அப்பாவைத் திட்டிக் கொண்டே வர, அவன் நண்பர்கள் தான்

“டேய், நாம ஊர் சுற்றிப் பார்க்க ஒரு வாய்ப்பு. அதோட இங்கே இருந்தா ஒருத்தன் இல்லாட்டா இன்னொருத்தன் ஒன்னைப் பார்த்தவுடன் நீ ஜெயிலில் இருந்தியாமேன்னு கேட்பான். அந்த இன்ஸ்பெக்டர் வீட்டில் உன் அப்பாவை சத்தம் போட்டதில் அக்கம் பக்கம் எல்லாம் தெரிஞ்சுருச்சு. இப்போதைக்கு ஒரு ரெண்டு மாசம் அவங்க கண்ணுலே படாம இருந்தோம்னா எல்லாரும் மறந்துருவங்க” என்று வெகுவாகச் சமாதனம் செய்யவும் சற்று அடங்கி இருந்தான்.

ரயில்வே ஸ்டேஷன் வந்து காத்து இருக்கும்போது மொத்தமாக காலேஜ் ஸ்டுடென்ட்ஸ் வரவே அவன் என்னவென்று பார்த்தான்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

காலேஜ் ஸ்டுடென்ட்ஸ் வரும்போதே மிகப் பெரிய ஆரவாரத்தோடு தான் வந்தார்கள். இரண்டு ப்ரோப்சர்ஸ் இருப்பது தெரிந்தாலும், அவர்களால் யாரையும் கட்டுப் படுத்த முடியவில்லை. எனவே தலையில் அடித்துக் கொண்டு தங்கள் கம்பார்ட்மென்ட் வரும் இடம் நோக்கிச் சென்று நின்று கொண்டார்கள்.

அவர்களோடு போகும் பெண்களைப் பார்வையிட்டுக் கொண்டு இருந்தவன் , அங்கே கிருத்திகாவும் செல்லவும், அவனுக்கு மீண்டும் கோபம் தலைக்கு மேல் ஏறியது.

இவர்கள் கல்லூரி எல்லோரும் ஒன்று மேல் டீஷர்ட் போட்டுக் கொண்டு செல்லவும் , அவர்களைத் தனியாக அடையாளம் காண முடிந்தது.

தன் நண்பர்களிடம் திரும்பியவன்

“டேய் , அந்த காலேஜ் குரூப் எங்கே போறாங்கன்னு டீடைல் கேட்டுட்டு வாங்கடா” என,

அவன் நண்பர்கள் தயங்கினாலும், அவனின் கோபம் பார்த்து விவரம் சேகரிக்கச் சென்றனர்.

நேரடியாகக் கேட்காமல், சுற்றி வளைத்து விசாரிக்கவும் பசங்க முழு விவரங்கள் கொடுத்து விட்டார்கள்.

ரகசியம் இல்லை என்றாலும், முழு விவரமும் தேவை இல்லைதானே. அது அவர்களுக்குத் தெரியவில்லை.

சுந்தர காண்டத்தில் அனுமன் சீதையைக் கண்டுபிடித்து விட்டதை வந்து வானரக் கூட்டங்களிடம் சொல்லவும், அவைகள் சந்தோஷத்தில் கனி, காய், இலை, பூ ஒன்று விடாமல் பிய்த்து போட்டதாம். தேன் கூட்டைக் கலைத்து அதில் இருந்த தேன் எடுக்க ஒன்றோடுன்று சண்டையிட்டதாம்.

அதே போல் இந்த மாணவர்களுக்கும் சந்தோஷத்தில் தலை கால் புரியவில்லை. ஓஒ என்று கத்தியும், ஒருவரை ஒருவர் அடித்து விளையாடிக் கொண்டும் ரயில் வருவதற்காகக் காத்துக் கொண்டு இருந்தார்கள்.

ரயில் வரவும் அவர்கள் கம்பார்ட்மென்ட்ட்டில் ஏறிக் கொண்ட பின், தங்கள் சீட்டிற்கு செல்வதற்குள் ஒரு பிரளயமே நடந்து முடிந்து இருந்தது. எல்லோரும் ஒரு வழியாக செட்டில் ஆனபின், ப்ரித்வி வந்து தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டான்.

“ஹாய் கைஸ், ஐ அம ப்ரிதிவிராஜ்” எனவும்,

“ஒ. காட் யுவர் சம்யுக்தா” என்று குரல் கேட்க, யார் என்று பார்க்க, நம்ம கிருத்திகா மேடம் தான்.

அவளைப் பார்த்ததும் விழிகள் பளிச்சிட்டது. ஆனால் தன்னை அடக்கிக் கொண்டு , சிறு புன்னகையோடு

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பத்மினியின் "என் மடியில் பூத்த மலரே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“நாட் எட் மை பிரெண்ட்” என்றான். எல்லோரும் சிரித்தனர்.

“இந்த டூர் மேனேஜர் நான்தான். நம்ம பிளான் இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்க எல்லோருக்கும் சொல்றேன். உங்களுக்கு எதாவது வேணும் ஆர் எதாவது சவுகரியம் குறைவா இருந்தா எங்கிட்ட சொல்லுங்க. வில் சால்வ் அட் மை பெஸ்ட்” என்று கூறவும்,

“ஓஒ “ என்று கத்தினர்.

இவர்களிடமிருந்து விவரங்கள் கேட்டுக் கொண்ட அரசியல்வாதியின் மகன் ராகேஷ், தன் நண்பர்களிடம்

“டேய் , நாளைக்கு டெல்லி போய் இறங்கியவுடன், இவங்கள பாலோ பண்றோம். இவங்க ப்ரோக்ராம் என்னனு கேட்டுகிட்டு இவங்கள பாலோ பண்றோம் “ என்று கூறிவிட்டு தங்கள் செகண்ட் ஏசி கம்பார்ட்மென்ட் நோக்கிச் சென்று விட்டனர்.

**** Contest Results Alert **** Chillzee 2019 Contest # 01 - தேவியின் 'காணாய் கண்ணே' கதைப் போட்டி முடிவுகள் வெளியாகி விட்டது. வெற்றிப் பெற்றவர் யார் என்பதை படிக்கத் தவறாதீர்கள் ***

தொடரும்!

Episode # 03

Episode # 05

Go to Kaanaai kanne story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.