Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - காணாய் கண்ணே - 03 - தேவி - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - காணாய் கண்ணே - 03 - தேவி

Kaanaai kanne

**** Contest alert **** Chillzee 2019 Contest # 01 - தேவியின் 'காணாய் கண்ணே' கதை போட்டியில் பங்குப்பெற தவறாதீர்கள் ***

தாரிணியின் குறும்பில் ப்ரித்விராஜ் மற்றும் அவன் தாயார் இருவரும் சிரித்தனர்,

“சரி சரி ரெண்டு பேரும் சாப்பிட வாங்க.” என்றார்.

சாப்பிடும் போது “அண்ணா, இந்த தடவை எந்த ஊருக்குப் போறீங்க?”

“டீடைல்ஸ் இன்னும் வரலைடா. “

“அப்போ அதுக்குள்ளே சொல்லிடீங்க. “

“ஹ்ம்ம். எப்போ வேணாலும் கிளம்பற மாதிரி இருக்கும். கிளம்பற முன்னாடி சொன்னால் நீ உன் மூஞ்ச அங்க்ரி பர்ட் மாதிரி தூக்கி வச்சுப்பியே. அதான் முன்னாடியே சொல்லிட்டேன்.”

“இல்லாட்டா மட்டும் அவ மூஞ்சி ஐஸ்வர்யா ராய்க்கு தங்கச்சி மூஞ்சி மாதிரி இருக்குமா என்ன?” அவர்கள் அம்மா கவுன்ட்டர் கொடுக்க,

“ஹ.. அம்மா நீ ஐஸ்வர்யா ராய் அம்மா மாதிரி இருந்தா எனக்கும் அந்த மூஞ்சி வர வாய்ப்பு இருக்கும். நான் அங்க்ரி பர்ட்னா , நீங்க அதுக்கு அம்மா தானே” தாரிணியும் பதில் கொடுத்தாள்.

“ஆக மொத்தம் நம்ம குடும்பம் ஆண்ட்ரைடு குடும்பம்னு சொல்றீங்க.. ரொம்ப பெருமையா இருக்கு” ப்ரிதிவியும் அவர்கள் ஜோதியின் ஐக்கியமானான்.

“சரி சரி .. நம்ம குடும்ப ரகசியம் எல்லாம் வெளிலே லீக் அவுட் ஆகப் போகுது. “ என்று தாரிணி கூற மீண்டும் ஒரு சிரிப்பலை.

அப்போது “என்ன அங்கே சத்தம்?” என்ற குரல் கேட்க, டைனிங் டேபிள் அமைதி ஆகியது.

அங்கே அந்தக் குடும்பத்தின் தலைவர் ராஜேந்திரன் வருகை நடந்தேற, மற்றவர்கள் சாப்பிடும் வேலை மட்டுமே நடந்தது.

“என்ன சத்தம்ன்னு கேட்டேனே?” என்று மீண்டும் அவர் தன் மனைவி லக்ஷ்மியிடம் வினவ,

“நம்ம ப்ரித்விக்கு வெளியூர் போற வேலை ஒன்னு இருக்காம். கொஞ்ச நாள் தங்கணும் போல் இருக்கும்ன்னு சொல்லிட்டு இருந்தான்.”

“ஆமா. சொந்தத் தொழிலப் பார்க்க வர முடியாது. ஊர் வேலை எல்லாம் பார்க்கப் போறாராமா துரை. என்னிக்குத் தான் சொல் பேச்சு கேக்கப் போறானோ?

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“அப்பா, நான் தான் ஏற்கனவே சொல்லிட்டேன். எனக்கு நான் செய்யற வேலை தான் பிடிச்சு இருக்கு. இது எப்போ என்னாலே முடியாதுன்னு தோணுதோ, அப்போ வந்து உங்க தொழிலப் பார்த்துக்கறேன்.”

“அது வரைக்கும் உலகம் அப்படியே நின்னுக்குமாக்கும். நிமிஷத்துக்கு நிமிஷம் போட்டி அதிகமாகிட்டுப் போகுது. நீ வந்து சேரும் அன்னைக்கு தொழில் எங்க நிக்கும்னு யாருக்கும் தெரியாது?

“நான் வரும்போது எங்க நிக்குதோ அங்கிருந்து அதை முன்னுக்குக் கொண்டு வர முடியும்னு நம்பிக்கை எனக்கு இருக்கு. அதைப் பற்றி கவலைப் பட வேண்டாம்”

“எல்லாத்துக்கும் பதில் ஒன்னு வச்சுக்கோ” என்றவர் “என்னிக்குத் துரை கிளம்பறீங்க?

“எப்போ வேணாலும் இருக்கும். இந்த முறை போய்ட்டு வரக் கொஞ்ச நாளாகும் அதான் முன்னாடியே சொல்லி வைக்கிறேன்” என்று ப்ரிதிவிராஜ் கூறவும்,

“ஹ்ம்ம். சரி. சரி” என்றவர், மிச்சத்தையும் சாப்பிட்டு எழுந்திருக்க, தாரிணி

“அண்ணா, நம்ம குடும்பம் மட்டும் எப்படி இந்த ஆண்ட்ராயிட் குடும்பமா இருக்குன்னு கண்டுபிடிச்சிட்டேன்?” என்றாள்

“என்ன கண்டுபிடிச்ச?

“ரோபோக்குப் பொறந்த நாம மினியான் மாதிரி தானே இருப்போம்? “ என, அவள் தலையில் தட்டினார் அவள் அம்மா.

“அம்மா, தலையில் கொட்டாத. அப்புறம் என்னோட மதர் போர்டு கரப்ட் ஆகிடும்”

“மதர் போர்டா?

“அதாம்மா. மூளை”

“ஹ. நீ கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிக்கிறன்னு எங்களுக்கு இப்படி எல்லாம் நிரூபிக்க வேண்டாம் தாயே. கிளம்பு கிளம்பு காத்து வரட்டும்” என்று அவள் அண்ணன் அவளைக் கிளப்பினான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

(ஆதி) பிந்து வினோத்தின் "வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

மீண்டும் அவள் “என்ன அங்கே சத்தம் ?” என, இப்போது தாரிணி

“பேசிட்டு இருக்கோம்பா” என்றுவிட்டு வேகமாகக் கிளம்பினாள்.

ப்ரித்விராஜ் அப்பா ராஜேந்திரன் நல்ல பேரெடுத்த சிவில் காண்ட்ராக்டர். சொன்ன நேரத்திற்கு, தேவைக்கு ஏற்றவாறு பில்டிங் கட்டிக் கொடுப்பதால் அவருக்கு எப்போதும் பிசினஸ் இருந்தது. சிறு வயதில் இருந்தே கண்டிப்பிற்குப் பேர் போனவர். தொழிலில் கண்டிப்போடு , நாணயமாகவும் இருப்பவர். அதற்காக கஞ்சமோ, கருணை இல்லாதவரோ கிடையாது. உண்மை பேசுமிடத்தில், தாராளமாகவே நடந்து கொள்பவர்.

ஆனால் வீட்டில் கண்டிப்பு மட்டுமே. பிள்ளைகளிடம் நட்பாக பழகுவதை விட,  கண்டிப்புடன் இருப்பதே நல்லது என்ற மனநிலை கொண்டவர்.

அவருக்கு மகன் அவரோடு தொழில் செய்ய வேண்டும் என்ற ஆசை. ஆனால் ப்ரித்விக்கோ அதிகமாக ஊர் சுற்றிப் பார்க்க ஆசை. அதை வெறுமனே செய்யாமல் ஒரு தொழிலாக செய்தால் பணமும் கிடைக்கும். அவனின் ஆசையும் நிறைவேறும்.

 •  Start 
 •  Prev 
 •  1  2  3 
 •  Next 
 •  End 

About the Author

Devi

Latest Books published in Chillzee KiMo

 • Aanantham enakkethu anbe neeyillaathuAanantham enakkethu anbe neeyillaathu
 • Itharku peyar than kadhala thamaraiyeItharku peyar than kadhala thamaraiye
 • Maasilla unmai kadhaleMaasilla unmai kadhale
 • Neerinai thedidum verena naanNeerinai thedidum verena naan
 • Thabangale... Roobangalaai...Thabangale... Roobangalaai...
 • Thedi unai saranadainthenThedi unai saranadainthen
 • Uravendru vantha kadhalUravendru vantha kadhal
 • Siru Kathai ThoguppuSiru Kathai Thoguppu

Completed Stories
On-going Stories
 • -NA-
Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - காணாய் கண்ணே - 03 - தேவிAbiMahesh 2019-02-02 11:42
Nice update mam.. Pona jenmathula Krithi & Prithivi, Queen & King ah irupangalo :grin:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணாய் கண்ணே - 03 - தேவிDevi 2019-02-14 10:43
:thnkx: Abi Mahesh.. unga guessing sariyaanu purinju irukkume
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காணாய் கண்ணே - 03 - தேவிAdharvJo 2019-01-31 16:53
:D :D sema jolly update ma'am veedu-k Oru comedy ps pole irukkanga :dance: enjoyed tharani's counter and wow not bad aunty kuda updated aga irukanga robot Oda wife ache 😜 cool and cute epi ma'am 👌👏👏👏 prithivi sema theliva irukaru 👍 hobby-a profession aga ellarukkum varam kedika kudadha 😍😍 infha raniyamma munjanmathil samyukthavaga irundhangan sollidathinga (mokkai yosikadhan sollidathinga ;-) ) kanavu kanadhingan board podunga Pa facepalm thank u for this funfilled epi. Keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணாய் கண்ணே - 03 - தேவிDevi 2019-02-14 10:44
:thnkx: Adharv ... family naa oru comedy piece irundha thaane nalla irukkum. Aunty oda counter.. :lol: ..haiyoo.. unga yosanaiye neengale mokkainnu solliteengale.. naan idhe madhiri story yosichaa.ennai ennanu ninaikiradhu :Q: :thnkx: for your support
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காணாய் கண்ணே - 03 - தேவிsaaru 2019-01-31 16:04
Randu veetlayum lady vaalunga pola ha ha super devi
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காணாய் கண்ணே - 03 - தேவிRaVai 2019-01-31 15:23
தேவி! கதை சுவாரஸ்யத்தை தவிர, சில நையாண்டி சொற்களும் தெரிஞ்சிண்டேன். நன்றி.
சுற்றுலாவிலே கலந்துக்கலாம்னு யோசனை, தேதி சூட் ஆகணும்
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணாய் கண்ணே - 03 - தேவிDevi 2019-02-14 10:45
நன்றி சார். சுற்றுலா நல்ல என்ஜாய் பண்ணலாம்.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காணாய் கண்ணே - 03 - தேவிmahinagaraj 2019-01-31 13:58
செம மேம்.. :clap: :clap:
கிருத்தி சூப்பர் சேட்டை.. ;-)
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணாய் கண்ணே - 03 - தேவிDevi 2019-02-14 10:46
:thnkx: நன்றி .. மகி.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காணாய் கண்ணே - 03 - தேவிmadhumathi9 2019-01-31 13:54
:clap: nice epi sis.interestinga poguthu. (y) :thnkx: 4 this epi.waiting to read more. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணாய் கண்ணே - 03 - தேவிDevi 2019-02-14 10:46
:thnkx: Madhumathi
Reply | Reply with quote | Quote
+1 # காணாய் கண்ணேAnjana 2019-01-31 13:53
Nice update sis.. prithvi sis is very naughty and nice family time...hero and heroine tour la thaan meet pana porangala??
Reply | Reply with quote | Quote
# RE: காணாய் கண்ணேDevi 2019-02-14 10:46
:thnkx: Anjana.sis
Reply | Reply with quote | Quote
+1 # Kaa kaPriyasudha2016 2019-01-31 12:25
Update super.
Prithvi family sema kalaai. Ella veetilum appa military rule than pola. Hero thanaku pidicha job panrathula satisfy agira type pola.
Heroine college tour, organizer namma hero.nice.
Rendu perum tour la meet pannuvaangala?
Waiting
Reply | Reply with quote | Quote
# RE: Kaa kaDevi 2019-02-14 10:47
:thnkx: Priya
Reply | Reply with quote | Quote

Coming Soon...

Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee
Go to top